ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2018

தொழிலின் நிமித்தம் “துரோகம் செய்தான்... பாவி...!” என்று எண்ணினால் நண்பர்களுக்குள் ஏற்படும் விளைவுகள்


நண்பர்களுக்குள் நன்றாகப் பழகிய நிலையில் இருவரும் சேர்ந்து தொழில் செய்வார்கள். அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் நன்றாக சந்தோஷமாக இருப்பார்கள்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் திடீரென்று மந்தமாகி விட்டால் என்ன ஆகின்றது...? சந்தேக உணர்வு வருகின்றது. எனக்குத் துரோகம் செய்து விட்டான் என்ற நிலையில் ஒருவருகொருவர்
1.நீ துரோகம் செய்துவிட்டாய் என்று ஒருவரும்
2.இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய் என்று இன்னொருவரும் சொல்ல
3.அந்தக் கோப உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

இருவரும் சேர்த்து தொழில் செய்த நிலைகளில் பொருள்கள் நஷ்டமான பின் இரண்டு பேருமே இதையே எண்ணுகின்றார்கள்.

அவனை நம்பி வந்தேன்... எனக்குத் துரோகம் செய்தான்...! அதனால் எனக்கு நஷ்டமாகிப் போனது..., என்று இரண்டு பேருமே அடிக்கடி சொல்வார்கள்.

இப்படி ஏற்பட்ட பின் இரண்டு பேரும் பிரிந்து சென்றாலும்
1.இதே நினைவுடன் அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி
2.அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது...!
3.இவரும் சரி... அவரும் சரி... இரண்டு பேருமே கெடுகின்றார்கள்.

ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இருக்கும் நிலையில் இது எல்லாம் எதைக் காட்டுகின்றது...?

சந்தர்ப்பவசத்தால் சிறு திரையாக வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் மறைத்து விடுகின்றது. அதனால் நம்முடைய சிந்தித்துச் செயல்படும் அறிவு இழக்கப்படுகின்றது.

நம்மை இருள் சூழச் செய்யும் தீமைகளைப் பிளந்து நாம் தெளிந்த மனதுடன் எப்படி வாழ வேண்டும்...? என்று காட்டினார்கள் ஞானிகள். இதை நினைவுபடுத்தும் நாள் தான் “சித்திரை புது வருடப் பிறப்பு...”
எப்படி...?

நமது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பத்தால் திரை மறைவாக்கும் நிலைகளிலிருந்து விடுபட
1.எங்கள் நண்பர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்.
2.எங்கள் குழந்தைகள் உயர்ந்த கல்வி பெற வேண்டும்.
3.அவர்கள் சிந்திக்கும் தன்மை பெறவேண்டும்.
4.குடும்பத்தில் நாங்கள் கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்.
5.குடும்பத்தில் உள்ளோர் யாருடன் பகைமை இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்த்து வாழும் தன்மை பெற வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.எல்லோரும் சொன்னால் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம்.
8.அறியாது வந்த சிறு சிறு திரைகளை நீக்கி விடுகின்றோம்.
9.பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்
10.மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகின்றோம்.
11.செல்வச் செழிப்புடன் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தகுதியைப் பெறுகின்றோம்

ஒவ்வொரு புது வருடமும் இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.