ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2018

“ஆண் பெண் என்ற நிலையில் ஒன்றினால்தான்... விண் செல்ல முடியும்...!” தனித்த நிலையில் செல்ல முடியாது...!


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியன் நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைத் தன் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே பெற்றவன்.

அந்த உணர்வின் தன்மை பெற்றதால் பிறந்தபின் மற்ற நஞ்சு கொண்ட உயிரினங்கள் இவனிடம் அருகில் வருவதில்லை. அஞ்சி ஓடுகின்றது.

இவ்வாறு அவன் வளர்ச்சியில் வரப்படும் பொழுது பிரபஞ்சத்தில் உருவாகும் விஷத் தன்மைகளை அவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் ஆற்றல் அவனை ஒன்றும் செய்வதில்லை.

சூரியன் தன் சுழற்சியின் வேகத்தால் தனக்குள் வந்து மோதும் விஷத்தை மாற்றி ஒளிக் கதிர்களாக வீசுகிறது. விஷத்துடன் மோதுவதால் தான் அங்கே வெளிச்சமாகின்றது.

விஷத்துடன் மோதிப் பிரிப்பதை நம் கண்களால் உற்றுப் பார்த்தால் நமது கண்கள் இருண்டு விடுகிறது. மற்ற பொருள்களைப் பார்க்க முடிவதில்லை.

ஆனால் அக்காலத்தில் அகஸ்தியன் அதை உற்றுப் பார்க்கும் பொழுது அவன் கண் இருளுவதில்லை. ஸ்தியனுக்கு அத்தன்மை இல்லை.

கஸ்தியன் தனது வாழ்க்கையில் நுகர்ந்து கொண்ட உணர்வுகளில் விஷமென்ற நிலைகள் இருந்தாலும்
1.அந்த விஷம் கொண்ட உணர்வுகள் அவனைத் தாக்காது
2.சூரியன் ஒளிக் கதிர்களாக எப்படி ஆக்குகின்றதோ (அதைப் போல)
3.பேரொளியாக மாற்றிடும் வல்லமை அவனின் உணர்வுகளில் வளருகின்றது.

பேரொளியாகத் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவியும் பெற வேண்டும் என்று உபதேசித்து அந்த உணர்வின் தன்மையை அங்கே பாய்ச்சுகின்றான்.

1.அகஸ்தியன் வளர்த்துக் கொண்ட ந்த உணர்வுகளை
2.அவன் கண்ட இயற்கையின் பேருண்மைகளை
3.தீமையை அகற்றும் அந்தச் சக்திகளை அகஸ்தியனின் மனைவியும் பெறுகின்றது.

ஒரு செடிக்கு... அது தன் இனத்தை உருவாக்க வேண்டும் என்றால் ஆண் இனமும் தேவை பெண் இனமும் தேவை.
1.ஆண் செடி உமிழ்த்தும் உணர்வுகள் பெண் செடிகளில் படும் போது தான்
2.அந்த வித்துக்கள் அதிகரிக்கின்றது.
3.ஆண் செடி இல்லாத நிலைகளில் அது உரு பெற்றாலும்
4.அது சத்தற்ற கூகையாகத் தான் பெரும் பகுதி விளையும்.

நெல் பயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் ஆண் செடியின் உணர்வுகள் அதிலே படவில்லை என்றால் கூகையாகத் தான் அது உரு பெரும். ஆண் பெண் என்ற நிலைகள் தான் தன் இனப் பெருக்கமும் ஆகின்றது.

கணவன் (அகஸ்தியன்) எந்த உயர்ந்த உணர்வினைப் பெறுகின்றானோ அதை மனைவி தான் பெற வேண்டும் என்று அவருடன் ஒன்றி வாழ்ந்து அந்த உணர்வினை ஏற்றுக் கொண்டு அதன் உணர்வை அவனின் மனைவியும் நுகர்கின்றது.

அதைத் தனக்குள் வளர்த்து அந்த ஒளியின் கதிர்களைத் தன் கணவனுக்கும் அது பெற வேண்டும் என்று
1.தன் கணவனால் பெற்ற உணர்வுகள்
2.மீண்டும் அவர் உயர வேண்டும் என்று கணவனை உயர்த்தி எண்ணுகின்றது
3.உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இருவரும் ஒன்றிய நிலைகளில் எண்ணுகின்றனர்.

ன்றிக் கலந்த பின் விண் வெளியிலிருந்து வரும் உணர்வுகள் பூமியின் துருவப் பகுதி வழியாக வருவதை இருவருமே சேர்ந்து நுகர்ந்து அறிகின்றனர்.

நமது பூமி துருவ பகுதியின் வழியாக விஷத் தன்மைகளைத்தான் கவருகின்றது. அந்த விஷத் தன்மைகளை விஷ தன்மை கொண்ட தாவர இனங்கள் நுகர்கின்றது. தாவர இனங்கள் வித்தாக அதை உணவாகப் பெறுகின்றது.

அந்தத் தாவர இனங்களை உணவாக ருசித்து உட்கொள்ளும் நிலையில் து உணர்வின் எண்ணங்களாக எவ்வாறு வருகின்றது என்ற உண்மையை அகஸ்தியரும் மனைவியும் அதை அறிகின்றனர்.

இருவரும் இந்த உணர்வின் எண்ணங்களை வளர்த்துக் கொண்ட பின் இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிர்களும் நுகரும் உணர்வுகளை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெறுகின்றனர்.

1.ஆண் பெண் என்ற உணர்வுகள் ஒன்றி இரு உயிரும் ஒன்றாகி ஒளிக் கதிர்களாக மாற்றிய பின்
2.உடலை விட்டுச் செல்லும் பொழுது
3.ந்தத் துருவத்தினைக் கூர்மையாக அவர்கள் உற்றுப் பார்த்தனரோ
4.அந்த எல்லையில் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் .

நஞ்சினை வென்ற அவர்களின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் தீமையை அடக்கி இருளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்கும்.

இதனின் உணர்வு கொண்டு நாம் உடலை விட்டுப் பிரிந்தால் நாம் அடுத்துப் பெறுவது அந்த ஒளியின் சரீரம். அதைத்தான் நம் சாஸ்ந்திரங்கள் தெளிவாக்குகின்றன. அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும். உங்களை நம்புதல் வேண்டும்.

ஆனால் தனித்து ஒரு மனிதன் அந்த ஆற்றலை நான் பெறுவேன் என்றால் அவன் முனியாகத்தான் ஆக முடியும்.

அந்த முனியின் தன்மை அடைந்தால் இங்கிருந்து இந்த பூமியைக் கடந்து செல்ல முடியாது.
1.முனித் தன்மை அடைந்தவன் கோபத்தின் உணர்வைத் தான் காட்டுவான்.
2.மற்ற மனிதன் பால் அதைத் தான் பாய்ச்சுவான்.
3.கோபத்தின் எல்லை கடந்தபின் அதன் வலிமை கொண்டு
4.மீண்டும் பிறப்பிற்குத்தான் வருவானே தவிர
5.மகரிஷிகளி அடைந்த அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையை அவன் அடைய முடியாது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது...!