வாழ்க்கையில் நாம் ஒருவருக்கொருவர் நண்பராகப்
பழகுகின்றோம். சந்தோஷப்படுகின்றோம். ஆனால் சில காலங்களில் ஒருவருக்கொருவர் பிடிக்காத
நிலையாகி விட்டால் வெறுப்பாகி விடுகின்றது. பகைமை ஆகின்றது.
அப்படி இருகும் நிலையில் ஒரு சந்தர்ப்பம்
நாம் வேறு ஒரு நண்பருடன் அன்பாகப் பேசிக் கொண்டு ரோட்டில் நடந்து செல்கிறோம் என்று
வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது வெறுப்படைந்த நண்பன் ஏதேச்சையாக
அந்தப் பக்கம் போனால் “பார்த்ததும் நாம் என்ன
சொல்கிறோம்..?”
அன்பாகப் பேசும் உணர்வை விட்டு விட்டுப்
“போகிறான் பார்... அயோக்கியன்..!” என்று சொல்லத் தொடங்குகின்றோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த உணர்வுகள்
நமக்குள் வலுவாகி அன்பாகப் பேசிய நிலைகளை மாற்றிவிடுகின்றது.
இங்கே அன்புடன் பண்புடன் வேறு நண்பருடன்
உறவாடிக் கொண்டிருந்தாலும்
1.வெறுப்படைந்த நண்பனைப் பார்த்த பின்
2.நல்ல உணர்வின் இயக்கத்தைத் தடைப்படுத்திவிடுகின்றது.
3.நம் நல்ல மனமும் கெடுகின்றது.
மாவை வைத்து தோசையைச் சுடுகின்றோம் என்று
வைத்துக் கொள்வோம். அதிலே ஒரு துளி காரமான பொருளோ அல்லது ஒரு விஷத்தின் தன்மை பட்டால்
தோசை ருசியாக இருக்குமா...? சுவையைக் கொடுக்குமா...?
அல்லது தோசையைச் சுட்டு விடுகின்றோம்.
தொட்டுச் சாப்பிடும் சட்டினியில் ஒரு துளி காரம் பட்டுவிட்டால் தோசையை ரசித்துச் சாப்பிட
முடியுமா...? இதைப் போன்று தான்
1.நமது வாழ்க்கையில் நாம் நல்லவர்களாக
இருந்தாலும்
2.தெளிவான நிலைகளை நாம் பெற்றிருந்தாலும்
3.பண்புடன் பார்க்கப்படும் போது ஒரு தீமையான
உணர்வைச் சந்திக்க நேர்ந்தால்
4.அதனின் வலிமை நம்மை இயக்கிவிடுன்றது.
இதைத் தெளிவாக்குவதற்குத் தான் வாலியைக்
காட்டுகின்றனர்.
அதாவது சூரியனின் காந்தப் புலனறிவுகள்
வேதனைப்படும் உணர்வுகளை கவர்ந்து வைக்கப்படும் போது அதனின் இயக்க வலு ஜாஸ்தி என்ற நிலையைக்
காட்டுகின்றனர்.
1.ஆக மொத்தம் சூரியனின் பிள்ளையில்
2.”வாலி முதன்மையானவன்...!” என்று காட்டுகின்றனர்.
சூரியன் உருவாவதற்கு விஷமே காரணமாகின்றது.
விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனின் சுழற்சி வேகம் கூடி அதனால் வெப்பமாகின்றது.
1.”வெப்பமாகும் போது தான்...” விஷம் பிரிகின்றது...!
என்பதனை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது
3.இது மிகவும் முக்கியமானது - நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்.
ஒரு விஷமான பொருளை நெருப்பில் போட்டுப்
பாருங்கள். நெருப்பில் விஷம் மடிந்து விடுகிறது. ஆனால் நெருப்பு வளர்ந்து விடுகிறது.
சூரியனின் நிலைகளில் இப்படி மாறி வந்தாலும்
மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மைகளை எல்லாம் நீக்கி ஒளியின் தன்மை பெற்றது “இந்த உயிர் தான்...!”
முதலிலே விஷத்தின் தாக்குதலால் வெப்பத்தின்
தன்மையாகி “துடிப்பு நிலையே..” (உயிர்) ஏற்படுகின்றது. விஷத்தின் இயக்கமே முதன்மையானது.
துடிப்பின் நிலை வரும் போது இயக்கமாகின்றது.
ஆறாவது அறிவு வரப்போகும் போது துடிப்பிற்குள்
இருளை நீக்கி மனித உடலாக்குகின்றது. மனித உடலாக்கிய பின் இதில் கலந்து வரும் நஞ்சினை
நீக்குகின்றது.
1.நஞ்சை நீக்கும் உணர்ச்சிகள் நமக்குள்
வருகின்றது
2.நஞ்சை நீக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்
நாம் செயல்படுத்தத் தவறினால்
3.நஞ்சு அதிகமாகி மீண்டும் பிறவியின் தன்மைக்கே
வருகின்றோம்.
ஆனால் நஞ்சை நீக்கி அந்த நஞ்சையே ஒளியின்
சுடராக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். முதல் மனிதன் அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக
உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று
கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க
சக்திகள் நம் துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த அருள்
சக்திகளை நாம் கவர்ந்து நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.
நம் எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம்
தான்...!