பயிர்கள் கொஞ்சம் வாடினால் போதும். விவசாயிகளும் சரி.. மக்களும்
சரி.., உடனே என்ன நினைக்கின்றார்கள்...!
இங்கே மழையே இல்லை...! வெள்ளாமை சுத்தமாகப் போய்விட்டது...!
என்ன ஆகப் போகிறதோ...? என்று எல்லோரும் வேனைப்படுகின்றனர்.
ஊரில் உள்ள மனிதர்கள் எல்லோரும் இந்த உணர்வின் தன்மை வெளிப்படுத்தும்
போது என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நீர்... தாவரங்கள்... எல்லாவற்றிலும் மனிதனுடைய (நம்முடைய)
உணர்வுகள் கலந்துள்ளது. மழை நீரின் தன்மை பட்டுத் தான் தாவர இனங்கள் விளைகின்றது.
அந்தத் தாவரங்களில் விளைவதை உணவாக உட்கொள்ளும் உணர்வு கொண்ட
மனிதர்கள் நாம்
1.வேதனை கலந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.இந்த எதிர் நிலையான நிலைகள் வந்த பின்
3.உருவாகும் மழை மேகங்களைக் கலைக்கும் சக்தியே அதற்கு உண்டு.
ஒரு ஊரிலே அல்லது கிராமத்தில் “அங்கு உள்ளவர்கள் கலவரம் செய்கின்றார்கள்...”
என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய கலவர உணர்வுகள் அதிகமானால் அந்த வருடம் அந்த இடங்களில்
நல்ல மழை இருக்காது.
மனிதனிடம் இருந்து சங்கடமும் வேதனையும் கோபமும் கொதிப்பும்
கொண்ட உணர்வலைகள் பரவினால் மழை மேகங்களை அது கலைத்துவிடும். ஏனென்றால் மனிதனின் எண்ண
உணர்வுகளுக்கு “அவ்வளவு பெரிய சக்தி உண்டு...!”
விவசாயம் செய்பவர்கள் போன வருடம் விளையாமல் போய் நஷ்டமாகி
விட்டது...! இந்த வருடம் என்ன ஆகுமோ...? என்று இந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வந்தால்
அந்த எண்ணத்திற்கொப்பத்தான் தான் அங்கே விளைச்சலாகும்.
சங்கடமாக இருக்கப்படும் போது நீங்கள் ஒரு கணக்கை எடுத்துப்
பாருங்கள். கணக்கு தப்புத் தப்பாக வரும்.
சங்கடமான உணர்வை எடுக்கும் போது நமக்குள் இருக்கும் காந்த
சக்தியால் (மேக்னட்) அந்தச் சங்கட உணர்வுகள் விதைகள் மீது பட்டுவிடுகின்றது.
நிலங்களில் அத்தகைய விதைகளை விதைக்கும் பொழுது நாம் எண்ணியபடி
அதைச் சரியாக முளைக்காதபடி தடைபடுத்திவிடும்.
ஆனால் மழை இல்லை என்றால் அன்றைய காலங்களில் வாழ்ந்த மக்கள்
என்ன செய்தார்கள்...?
1.ஊரில் உள்ள எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில்
2.”வருண பகவானை... நாங்கள் அழைத்து வரப் போகின்றோம்...! என்ற
நிலையில்
3.கீழே இருந்து பானைகளில் தண்ணீரைச் சுமந்து கொண்டு மலைப்பகுதிக்குச்
சென்று
3.அந்த மலையில் உள்ள ஒரு தேவதைக்கோ (சிலைக்கு) மரத்திற்கோ
செடிக்கோ கொண்டு சென்ற நீரை ஊற்றி...
4.உடனே எங்களுக்கு “நல்ல மழை பெய்ய வேண்டும்” என்று வேண்டுவார்கள்.
தண்ணீரை ஊற்றி விட்டுத் திரும்பி வரும் போது பார்த்தால் “மழை
துரத்திக் கொண்டே வரும்...!”
1.மழை இல்லையே...! என்ற குறையை நீக்கி விட்டு
2.மழை பெய்ய வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் வலு கொண்டு செயல்படுத்தும்
போது
3.அங்கே மழையைக் கொண்டு வருகின்ற சக்தி அந்தக் காலத்தில் இருந்தது.
அதைப் போல நமக்குள் இருக்கும் சங்கடத்தையும் வேதனையையும் நீக்கி
விட்டு நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற “ஏக்க உணர்வு கொண்டு” விண்ணிலே உங்கள் உணர்வுகளைச்
செலுத்திப் பாருங்கள்.
அதே மகிழ்ச்சியான உணர்வுகள் கொண்டு நீங்கள் விதைக்கும் வித்துக்கள்
நல்ல முறையில் முளைக்கும் என்ற உணர்வுடன் விதைத்துப் பாருங்கள்.
1.அருள் உணர்வுகள் அதிலே படர வேண்டும் என்று
2.மகரிஷிகள் உணர்வை எடுத்து இந்த வலுவைச் சேர்த்து கொண்டு
3.வித்துகள் அனைத்தும் சீராக முளைக்க வேண்டும் என்று எண்ணிப்
பாருங்கள்.
4.உங்கள் பயிரினம் வாடாதபடி செழித்து வளரும்… நல்ல மகசூலும்
கிடைக்கும்.
ஏனென்றால் இத்தகைய உணர்வின் ஆற்றல் நமக்கு உண்டு. அதன் உணர்வின்
அணுக்களும் நமக்குள் உண்டு.
செய்து பாருங்கள்…!