ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 24, 2018

மனதிற்குள் ஏற்படும் போராட்டத்திலிருந்து விடுபடுங்கள்...!


ஒரு நெருப்பை வைத்து அதற்குள் ஒரு காரமான பொருளைப் போட்டால் என்ன செய்யும்...? அதிலிருந்து கிளம்பும் நெடி தாக்கி நம்மை அங்கே இருக்கவிடாது செய்யும்.

அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை என்ன செய்கின்றது?
1.இருமச் செய்கின்றது.
2.தொல்லை கொடுக்கச் செய்கின்றது.

இதைப்போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு குணங்களின் உணர்வுகளும் அது எதுவோ
1.அந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து
2.நம் உடலில் நல்ல குணங்களை இயக்கும் அந்த அணுக்களில் பட்டபின்
3.அது ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது போர் முறை வருகின்றது.

நம்மை இரும வைக்கின்றது... அல்லது தும்மலாகின்றது...! ஆக நம்மை அறியாமலே அது இயக்கப்படுகின்றது.

இவ்வாறு இய்க்கும் இத்தகைய வலிமை மிக்க நிலைகளை வாலி என்று பெயரை வைத்து இராமாயணத்துல் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நன்மை செய்ய எண்ணினாலும் பிறரின் வலிமையை நுகரப்படும் போது அதன் செயலாக நம்முடைய நல்ல குணங்களின் வலுவை அது எடுத்துக் கொள்கின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்...? என்றும் இராமாயணத்தில் வான்மீகி மகரிஷி தெளிவாக்கியுள்ளார்.

குகையிலிருந்து இந்த வாலியின் தன்மை வெளிவராதபடி குகை மேல் இருக்கும் பாறையைத் தன் அம்பால் ஏவி அந்தக் குகையை மூடி விடுகின்றான்.

1.வாலி வெளியே வந்தால் அவனுடைய வலிமை கொண்டு
2.(நம்மை) நம்முடைய வலுவை இழக்கச் செய்வான் என்று
3.அவனை அடைத்துவிட்டான் இராமன் என்று காட்டுகின்றார்கள்.


எப்பொழுது வலிமை மிக்க நிலைகளைப் பார்க்கின்றமோ... நம் கண்ணின் நினைவு கொண்டு எதை நுகர்கின்றோமோ உயிரான ஈசன்
1.அந்த உணர்வைத்தான் உருவாக்குகின்றது
2.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மைச் செயலாக்குகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு தான் நம் உடல் எண்ணம் சொல் செயல் எல்லாம் இயங்குகின்றது.

அப்போது அதைத் தடைபடுத்த வேண்டுமா... இல்லையா...?

அதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெற்றுப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும். உடல் முழுவதும் அந்தச் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

திட்டியவனை எண்ணும் போது கோபம் வருகிறது. வேதனைப்படுவோரை நாம் எண்ணும் போது நமக்கும் வேதனையாகின்றது.

கோபமோ வேதனையோ அத்தகைய உணர்ச்சியானால் நாம் ஒரு கணக்கைச் சீராகப் பார்க்க முடியுமா...? சரியாக ஒரு தொழிலில் வேலை செய்ய முடியுமா...? முடியாது....!

ஒரு சமயம் பதிவானால் அந்த நினைவு வந்தால் நமக்குள் நல்லதைச் செயலாக்க முடியவில்லை. சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ போன்ற உணர்வுகள் வந்தாலும் உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அதைப் போன்று தான் அடுத்த நிமிடமே “ஈஸ்வரா....!” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அவனிடம் வேண்டி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
4.இந்தச் சக்தியை நமக்குள் கூட்டப்படும் போது தீமைகள் உட்புகாது தடைபடுத்துகின்றோம்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொள்கிறோம்
6.அந்த அருள் சக்திகளை நம் உடலிலே பெருக்குகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெருக்கிக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வலுவாகி நம் ஆன்மாவில் முன்னாடி இருக்கின்ற தீமைகள் அனைத்தையும் விலகிச் செல்லச் செய்கின்றது.

தீமைகள் அனைத்தும் அனாதையாகின்றது. அருள் ஒளி பெருகி நம் ஆன்மா பேரொளியாக மாறுகின்றது.