3/18/2018

இமைகளுக்கு மத்தியில் அமர்ந்து... செய்ய வேண்டிய தியானம்...!

தியானமிருக்கும் (உலகெங்கிலும்) அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மலரைப் போல மணம் பெற்று வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா…..!”

மகரிஷிகளின் அருள் ஒளி உலகம் முழுவதும் படர்ந்து உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் வழி பெற்று அவர்களை அறியாத இருள் நீங்கி… பொருள் காணும் அருள் சக்தி பெற்று அவர்களது குடும்பங்கள் சகோதர உணர்வுடன் வளர்ந்து வாழ்ந்திடவும் அருள் ஞானம் பெற்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா……!”

மகரிஷிகளின் அருள் ஒளி உலகம் முழுவதும் படர்ந்து உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று சகோதர உணர்வுடன் மத பேதமின்றி.. இன பேதமின்றி… மொழி பேதமின்றி… மன பேதமின்றி.. அரசியல் பேதமின்றி… வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா…..!”

மகரிஷிகளின் அருள் ஒளி தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களை அறியாத இருள்கள் நீங்கி மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் பெற்று உலகம் வாழ்ந்திட அருள் ஞான சக்தி பெற்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று “மனிதன் என்ற பண்புடன்” வாழ்ந்திடும் ஆற்றல் பெற்றிட “அருள்வாய் ஈஸ்வரா……!”

மகரிஷிகளின் அருள் ஒளி அனைவரது உடல்களிலும் படர்ந்து அனைவரது உணர்வுகளும் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் கலந்து
1.அவர்களது பார்வைகள் அனைத்தும் பயிரினங்களில் படர்ந்து
2.நல்விதையை உருவாக்கும் அணுக்கள் விளைந்து
3.தாவர இனங்கள் செழித்து வளர்ந்து
4.அதை உணவாக உட்கொள்ளும் மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று
5.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
6.அனைவரது உயிரையும் கடவுள் என்ற நினைவு கொண்டு
7.அனைவரும் அருள் ஞானம் பெற்று
8.இந்த விஞ்ஞான உலகில் நஞ்சு கலந்த உணர்வுகள் அனைத்தையும் அகற்றிடும் சக்தி பெற்று
9.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்திட
10.மலரைப் போல மணம் பெற்றிட
11.மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றிட “அருள்வாய் ஈஸ்வரா…….!”

உலக மக்கள் தாய்மார்களின் கருவில் வளரும் சிசுக்களில் மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அருள் ஞானிகளாக கருவிலேயே உரு பெற்று பிறந்த பின் இருள் நீக்கி மெய்ப் பொருள் காணும் உணர்வினை வெளிப்படுத்தி மக்களைக் காத்திடும் உணர்வுகள் வளர்ந்து உலக மக்கள் அனைவரும் நலம் பெற்றிட அருள் ஞான சக்தி அக்குழந்தைகள் பெற்றிட “அருள்வாய் ஈஸ்வரா……!”

மகரிஷிகளின் அருள் சக்தி இப்புவி முழுவதும் படர்ந்து புவியில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் அகன்றிட இப்புவியில் வாழும் மக்கள் அனைவரும் அருள் ஒளி பெற்றிட அருள் ஞான வழியில் சென்றிட இருள் அகற்றிடும் சக்தி பெற்றிட உலக ஞானம் பெற்றிட “அருள்வாய் ஈஸ்வரா……!”

தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் ஒளி படர்ந்து அவர்களை அறியாத இருள் சூழ்ந்த நிலை அகன்று அதனால் விளைந்த சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா……!”

மகரிஷிகளின் அருள் ஒளி தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அருள் வழியில் அவர்கள் தொழில்கள் வளம் பெற்று அவர்களது வாடிக்கையாளர்கள் வளம் பெற்று வாடிக்கையாளர்கள் பெருகி செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட “அருள்வாய் ஈஸ்வரா…..!”

இந்தத் தவத்தைச் செய்வோர் அனைவரும் மன பலம் பெறுவீர்கள்… மன வளம் பெறுவீர்கள்… அருள் ஞானம் பெறுவீர்கள்.. மெய் ஞானம் பெறுவீர்கள்…! மகரிஷிகளின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.