ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2018

நம் குழந்தைகளைப் பரிபக்குவமாக வளரக்க வேண்டிய முறை


என் குழந்தையை வளர்க்கின்றேன். “அவன் நல்லவன்...” என்று நான் போற்றுகின்றேன். ஆனால் சரியான நேரத்தில் அவன் தவறு செய்தான் என்றால்
1.முதலில் போற்றிப் பேசியதை மாற்றிவிட்டு
2.அடுத்து நாம் அவனைத் தூற்ற ஆரம்பித்து விடுகின்றோம்.

அந்த இடத்தில் நாம் பரிபக்குவமாகச் செயல்பட வேண்டும் என்றால்
1.அவன் ஏன் சேட்டை செய்தான்...?
2.அவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்...?
3.அவனை அறியாது இயக்கும் தீமைகளைத் தடுத்து நல்ல வழியை எப்படிக் காட்ட வேண்டும் என்று
4.அருள் உணர்வை எடுத்து அதைத் தெளிவாக்க வேண்டும்.

அதே மாதிரி இப்போது நண்பர்களுக்குள் ஒருத்தருக்கொருத்தர் பழகுகின்றோம். சந்தர்ப்பபேதத்தால் ஒருத்தருக்கொருத்தர் பகைமை வருகின்றது.

நாங்கள் நண்பர்களாக உயர்ந்து வளர்ந்தோம். நண்பர்களாக ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று சொல்கின்றோம்.

சந்தர்ப்பத்தில் சிறு சிறு குறைகள் வந்தால் அங்கே பக்குவ நிலை தவறினால் அது பகைமையாக மாறுகின்றது. இந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது என்பதற்காகத் தான்
1.பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்
2.பரிபக்குவ நிலை நான் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று
3.உயிரான ஈசனை வேண்டும்படி சொல்கிறோம்.

நான் அப்படிச் செய்தேன்.. இப்படிச் செய்தேன்... பாவி...! எனக்கு இப்படி இந்த மாதிரித் துரோகம் செய்கின்றானே...! என்று இப்படி இந்த நினைவுகளால் “இந்தப் பாட்டையே பாடிக் கொண்டிருப்போம்...”

ஆகவே நம்முடைய உணர்வுகள் மாறி நம்மை எப்படி குறைகளாக மாற்றுகின்றது..? இதிலிருந்தெல்லாம் நாம் பக்குவநிலை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா..!

ஒருவன் கோபிக்கின்றான் என்றால்..., அவன் ஏன் கோபிக்கின்றான்...? என்று சற்றுச் சிந்தித்தோம் என்றால்
1.நாம் செய்தோமா...!
2.தவறு அவர்கள் செய்கின்றனரா...? என்ற எண்ணத்தில் எண்ணி
3.தவறை நீக்கும் பரிபக்குவ நிலையை நாம் பெற்று விட்டால் தவறு நமக்குள் வராது
4.தவறு செய்பவன் வளரவும் மாட்டான்...! (முக்கியமானது)

இதைப்போன்ற நிலைகளை நாம் வளர்த்துப் பழகுதல் வேண்டும். நம்முடைய பக்குவம் இப்படிச் செய்து வந்தால் நாளடைவில் நம்மை அறியாமல் வரும் தீமைகளை அகற்றலாம்.

நாம் நண்பர்களுக்குள் பகைமை உணர்வு வராது தடுக்கலாம். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் தெளிந்த நிலைகள் பெறலாம்.