ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2018

வாலி குகையை விட்டு வெளியில் வராதபடி கல்லைப் போட்டு மூடினார்கள் - விளக்கம்


இராமயாணத்தில் இராமன் மறைந்திருந்து வாலியைத் தாக்கினான் அதாவது குகையில் கல்லைப் போட்டு அடைத்து மறைத்து விடுகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

எதற்காக இப்படிக் காட்டுகின்றார்கள்..? இதன் உட் பொருள் என்ன..?

நமது அன்றாட வாழ்க்கையில் கோபப்படுவோரையும் வேதனைப்படுவோரையும் சங்கடப்படுவோரையும் பார்க்கின்றோம்.

அத்தகைய உணர்வுகள் நமக்குள் வந்து தீமைகள் செய்யாது இருக்க வேண்டும் என்றால் அதைத் தடுக்க வேண்டும். தடுப்பதற்காக வேண்டித் தான் வாலியைக் கல்லைப் போட்டு இராமன் அடைத்தான் என்று காட்டினார் வான்மீகி மகரிஷி.

ஆகவே தீமையான உணர்வுகள் வந்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்...? அடுத்த கணம் “ஈஸ்வரா...!” என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ண வேண்டும்.
1.அந்த நேரத்தில் தீமையைத் தடுக்கும்
2.மிக..மிக...மிக...மிகப் பெரிய சக்தியை
3.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
4.சாதாரணமாக எண்ண வேண்டாம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதியச் செய்கின்றோம். கொஞ்சம் அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

தீமையான உணர்வுகள் வரப்படும் போது புருவ மத்தியில் இடைமறித்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே புருவ மத்தியில் (மிகவும் முக்கியம்)
2.கண்ணின் நினைவைக் கொண்டு வந்து விட வேண்டும்.

ஏனென்றால் முதலில் கண்ணின் நினைவைத் தீமை செய்வோரின்  மேல் வைத்தோம். அவர்களை நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் நம் கண்கள் பதிவாக்கிவிடுன்றது.

கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர்கள் உடலிலிருந்து வந்த தீமையான உணர்வுகளை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. அதிலிருந்து நுகர்ந்தவுடனே உயிரில் பட்டு அந்த உணர்ச்சியை ஊட்டி நம்மை இயக்குகின்றது.

விஷ்ணு என்ன செய்கின்றான்...? வரம் கொடுத்து விடுகின்றான்.

உயிரில் பட்டவுடன் அந்த ஒலியை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவச் செய்கின்றது. விஷ்ணு சங்கு சக்கரதாரி. உணர்வின் ஒலியை எழுப்பி உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் வலிமை கூடியர்களாக இருந்தால் அவர்களுடன் சண்டைக்குப் போகின்றோம். நாம் வலு குறைந்தவர்களாக இருந்தால் அவர்களைப் பார்த்துப் பயப்படுகின்றோம்...!
1.போக்கிரியாக இருந்தால் இப்படிப் பேசுகின்றானே... இப்படிச் செய்கின்றானே...! என்று நாம் ஏதாவது வாயைத் திறக்கின்றோமா...?
2.நமக்கு அந்த வேதனை என்ற உணர்வு வருகிறது.
3.கார உணர்வோட வேதனையைச் சேர்த்தவுடனே என்ன செய்கிறது?
4.மிளகாய் அரைத்ததைக் கையில் வைத்தால் காந்தலும் எரிச்சலும் ஏற்படுகின்ற மாதிரி நம் உடலில் உருவாகின்றது.

அழகான துணிகளைப் போடுகின்றோம். அழகாக இருக்கின்றோம். ஆனால் யாராவது சிறு சொல்லைச் சொன்னால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியில் போய் விட்டது என்றால் என்னவாகின்றது...? உடலை விட்டு உயிர் போய் விட்டது என்றால்
1.பெரிய கோடீஸ்வரர் மகனாக இருந்தாலும் கூட...
2.சீக்கிரம் தூக்கித் தள்ளி விடுப்பா... என்றுதான் நாம் சொல்கின்றோம்.
3.எல்லாச் சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடிகின்றதா? இல்லையே...!

நமக்கு எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் உடலில்  எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளுக்கு அதற்குச் சாப்பாடு தேவை. இந்த உணர்ச்சிகளை உந்தி நம்மைச் சிந்தனை இல்லாதபடி ஆக்குகின்றது.

அப்போது நாம் அந்த வேதனையான உணர்வு உள்ளுக்குள் போகாமல் தடுத்துக் கொள்வதற்காக வாலியை இராமன் என்ன செய்தான்...?
அவனைக் கொல்லவில்லை. கல்லை வைத்துக் குகையை மூடி விடுகின்றான். வாலி வெளியில் வர முடியவில்லை.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வைப் புருவ மத்தியில் கண்ணின் நினைவைக் கொண்டு போக வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அவனிடம் கேளுங்கள்.
2.இத்தனையும் உருவாக்கியது... இத்தனையும் தெரிய வைக்கின்றது அவன்தானே...!
3.ஈசனை எங்கேயோ அல்லவா தேடுகின்றோம்...!
4.நாம் கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுபவன் அவனே தான்...!

ஆகவே “ஈஸ்வரா...!” என்று துருவ நட்சத்திரத்தைக் கொண்டு இங்கே அடைத்து விட்டால் புருவ மத்தியின் வழியாகத் தீமையான குணங்கள் உடலுக்குள் புக முடியாது.

தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் போகாமல் அதைத் தடுக்க வேண்டும் என்ற நிலையைத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.