நான் யாரையும் தவறாகவோ குறையாகவோ சொல்லவில்லை.
நமது பண்புகளை இழந்து ஏதோ நாகரீகம் என்ற நிலைகள் கொண்டு “இன்று…
டான்ஸ்களை (DANCE) இரசித்துக் கொண்டிருக்கின்றோம்…!”
“தையா..தக்கா..,” என்று ஆணும் பெண்ணும் மோதுகின்ற மாதிரி ஆடுவது…
கழுதை கத்துகின்ற மாதிரி கத்துவது…. குதிரை கத்துகின்ற மாதிரி குத்துவது…, அதாவது மிருகங்களுக்குச்
சமமான நிலைகள் ஆட்டங்கள் ஆடுவது தான் “இன்றைக்கு டான்ஸ்…”
அங்கே ஆட்டங்கள் ஆடுவதைப் பார்ப்பவர்கள் இங்கே இருந்து கொண்டு
“ஹேய்….. ஊய்…..” என்று எல்லோரையும் பைத்தியக்காரர்களாக ஆக்குவது இது தான் இன்றைக்கு
நம் கலாச்சாரமாகப் போய்விட்டது.
ஆனால் ஞானிகள் காட்டிய நிலைகள் என்ன…?
மனிதனால் சோர்வடையும் போது உடல் உறுப்புகளும் சோர்வடைகின்றது.
அதனால் பல நோய்கள் வருகிறது. உடலுக்குள் பல விஷ நீர்கள் உருவாகின்றது.
அதே சமயத்தில் திடீரென்று தும்மலாகிவிட்டால் உள் உறுப்புகளில்
சிக்கல்களாகிவிடும். நுரையீரலில் சிக்கலாகிவிட்டால்
இருமல்கள் வரும். ஏனென்றால் சரி வர நுரையீரல்கள் விரிவடையவில்லை என்றால் இருமலாக வரும்.
இதைப்போல இருந்து அது நாளடைவில் அதிகமாகி விட்டால் அந்த உறுப்புகளே
பாழடைந்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை அகற்றுவதற்குத்தான் அன்று அபிநயம் என்று
அங்கக்கலையாக அமைத்துக் கொடுத்தார்கள் ஞானிகள். அபிநயங்கள் கொண்டு மகிழ்ந்து வாழும்
உணர்வுகளை நுகரச் செய்தார்கள் ஞானிகள்.
உணர்வின் இசை கொண்டு அங்கங்களை அசைத்து அதற்கு தக்க மகிழ்வான
நிலைகள் கொண்டு அபிநயங்களை ஆட்டப்படும் போது
1.உடலிலுள்ள உள் உறுப்புகளின் இயக்கங்களைச் சீராகுவதும்
2.விஷ நீர்களை அகற்றுவதும்
3.உடல் நலம் பெறுவதற்காகச் செய்தார்கள்.
கலை அபிநயம் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்களை அசைத்து
மகிழ்ச்சியின் உணர்வைத் தனக்குள் தோற்றுவிக்கும் போது
1.தன்னை அறியாத உணர்வின் நரம்பு பிடித்தலோ
2.உடல் உறுப்புகளினுடைய சிக்கலோ
3.அல்லது உள் உறுப்புகளில் உள்ள சிக்கலையோ நீக்குவதற்கு
4.நம் நாட்டில் தோன்றிய ஞானிகள் இயல்பாக உருவாக்கிக் கொடுத்தார்கள்
இப்பொழுது என்ன என்றால் தையாதக்கா என்று குதித்து தவறாக உணர்வுகளைக்
காட்டி காம உணர்ச்சிகளை ஊட்டி கருத்தை இழக்கச்
செய்து அநாகரீக நிலைகளை வளர்க்கச் செய்து மாடுகளைப் போல நம்மை ஆடும்படி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இது தான் கலாச்சாரமா…?
நம்முடைய கலாச்சாரம் என்ன ஆனது…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.