ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2018

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வலைகளைக் கவர்ந்து பிறவிப் பிணியை நீக்கி விண் சென்றவன் அகஸ்தியன்


ஒரு மருந்திற்குள் விஷத்தை இணைத்துக் கொண்ட பின் அந்த மருந்திற்கே அது வீரிய சக்தி ஊட்டுகின்றது. ஆனால் அளவுகோல்படி விஷத்தை இணைத்தால் தான் அதற்குத்தக்க செயல்படுகின்றது.

அந்த மருந்திலே விஷத்தை  அதிகமாகி விட்டால் மருந்தையே விஷத் தன்மையாக மாற்றிவிடும்.

விஷத்தைக் குறைத்து மருந்துடன் இணைக்கப்படும் போது அது வீரிய மருந்தாக மாறி நல்ல நிலைகளைச் செயல்படுத்துகின்றது. இன்றைய விஞ்ஞான அறிவால் செயல்படுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் இப்படித்தான்.

அது எதெதெற்கு இந்த உறுப்புகளில் உருவாகும் உணர்வின் நிலையை
1.விஞ்ஞான அறிவால் பல தாவர இனங்களைச் சேர்த்து
2.மற்ற உயிரினங்களில் உருவான உறுப்புகளைச் சேமித்து
3.அதை நீராக்கி குழம்பாக்கி (கலவை) மீண்டும் பவுடராக்கி
4.அதிலே அந்த மூன்று நிலைகளும் கழிவாக்கப்படும் போது
5.கடுமையான விஷத்தின் தன்மையாக (ESSENCE EXTRACT) வடிகட்டிக் கொள்வார்கள்

அதாவது பல கொடிய விஷத் தன்மை கொண்ட நிலையில் வாழும் பல யிரினங்களைப் பார்க்கலாம். அதிலிருந்து கிடைக்கும் விஷத்தைச் சேமித்து வைத்திருப்பார்கள்.

அந்த விஷம் ஒரு அவுன்ஸ் எத்தனையோ இலட்சம் பெறும்.

நல்ல மருந்துடன் இதை இணைக்கப்படும் போது இதன் வீரிய தன்மை கொண்டு ஒவ்வொரு உணர்விலும் உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக மாற்றி உடலிலுள்ள நோயான அணுக்களை மாற்றுவதற்கு விஞ்ஞான அறிவால் தயார் செய்கின்றார்கள்.

இதே போன்று சித்தாந்தத்தில் எடுத்துக் கொண்டால் பாஷாணங்களை மற்றொன்றுடன் கலந்து உடலில் பரப்பச் செய்து நோயின் வீரியத் தன்மைகளை ஒடுக்கி நல்ல உணர்வின் தன்மை இயக்கச் செய்கின்றார்கள்.

இதைப் போன்று தான் அன்று அகஸ்தியர் இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கும் போது தன் உணர்வின் வலிமையால் விண்ணை நோக்கிப் பார்த்து வான இயலில் தோற்றுவிக்கும் ஆற்றலைப் பெற்றார்.

கோள்கள் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை நேரடியாகத் தன் கண் வழி கொண்டு உற்றுப் பார்த்துத் தன் உடலுக்குள் ஆழப் பதியச் செய்து அந்த உணர்வின் வலிமையைத் தனக்குள் சேர்த்தார்.

ஒவ்வொரு கால கட்டத்திலேயும் இந்த இருபத்தேழு நட்சத்திரத்தையும் பார்க்கும் வன்மை பெற்றவன் அகஸ்தியன்.

அந்த விண்ணின் ஆற்றல்கள் அனைத்தும் நம் பூமிக்குள் புகும் நுழைவாயிலான வட துருவப் பகுதி வழி அதனுடைய ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து எடுத்து தீமைகளை ஒடுக்கிடும் உணர்வின் அணுக்களாக தனக்குள் விளையச் செய்தான் அகஸ்தியன் (துருவன்)

அவருடைய சந்தர்ப்பம் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உணர்வின் தன்மையை முதல் மனிதனாக அவர் உடலில் அதைப் பெருகச் செய்தார்.

அவர் உடலில் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமியில் அலைகளாகப் பரவச் செய்து கொண்டுள்ளது. அதை எல்லாம் நீங்கள் பருகுவதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

இருபத்தியேழு நட்சத்திரங்கள் அதனுடைய இயக்கத் தொடர்களில் இருந்தலும் ஒவ்வொரு நட்சத்திரமும் எதிர்மறையான நிலைகள் கொண்டது. அதாவது நெகட்டிவ் பாசிட்டிவ் ஒன்று வலிமையானது ஒன்று வலிமை இழந்தது.

ந்த நட்சத்திரங்களின் உணர்வின் தன்மை மோதல் வரும் போது தான் ஒன்றை ஒன்று வெல்லும் தன்மைகள் வரப்படும் போது உயிரணுவாகத் தோன்றுகின்றது.

இந்த உணர்வின் தன்மை இயக்கத்தில் இந்த உயிரணுவின் நட்சத்திர இயக்க ஓட்டத்தை அதனை எதனின் வலிமை இருக்கின்றதோ அதைப்போல
1.இந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று
2.அந்த வலிமையை நாம் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பல நட்சத்திரங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிலும் இந்த இருபத்தேழு நட்சத்திரங்களின் சத்து எது முன்னணியில் இருக்கின்றதோ அது மற்ற நட்சத்திரத்தை அடக்கும்.
1.அந்த நட்சத்திரத்தின் ஆற்றல் உயிரினங்களிலும் மனிதருக்குள்ளும் இருப்பதால்
2.ஒன்றுடன் ஒன்று அல்லது ஒருவருக்கொருவர் பொருந்தி வராது.

மற்ற நஞ்சு கொண்ட உணர்வின் எதிர் நிலைகள் வந்தாலும் இதைத் தனக்குள் சமப்படுத்தி ஒளியின் சுடராக ஆக்கும் அறிவின் தன்மை பெற்றது இந்த மனித உடல்.

அதாவது வானஇயலில் 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் ஒரு அமைப்பாக இருப்பது போல் இருபத்தேழு நட்சத்திரங்களின் சக்தி உணர்வின் எண்ணங்களாகவும் அது உணர்வின் தசைகளாக நவக் கோள்கள் என்று மனித உடலின் தன்மையும் அமையப் பெற்றது.

மனித உடலைப் பெற்ற பின் இந்த உணர்வின் ஒளியாக ஆறாவது அறிவு கொண்ட நாம் ஒளியாக ஆக்கும் பொழுது ஏழாவது அறிவாக சப்தரிஷி என்ற நிலையை அடைவோம்.

ஏனென்றால் அந்தத் துருவ மகரிஷி (அகஸ்தியன்) மற்ற இருபத்தேழு நட்சத்திரங்களையும் நவக்கோள் உமிழ்த்தும் உணர்வின் சக்தியும் தனக்குள் கவர்ந்து இதனின் உணர்வை விளைய வைத்தவன்.

27 நட்சத்திரங்கள் நவக் கோள்களின் உணர்வலைகளைச் சூரியன் கவர்ந்து ஒளிக் கதிர்களாக மாற்றுவதைக்
1.கண் கொண்டு உற்று பார்த்து ந்த ஒளிக் கதிர்களை
2.ஒளியின் அணுக்களாக மாற்றி கொண்டவன் துருவன்.

இந்தப் பிரபஞ்சத்திலேயே நம் சூரிய குடும்பத்திலயே முதல் மனிதன் துருவன் (அகஸ்தியன்)
1.வானியல் தோன்றி புவியில் வந்து உயிரியல் மாற்றங்களில்
2.இந்த புவியின் மாற்றத்தில் இருந்து விடுபட்டு
3.மீண்டும் வானியல் உணர்வுகளைத் தனக்குள் நுகர்ந்து
4.ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான் அந்தத் துருவ மகரிஷி
5.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் உணர்வினை நாம் பெற்றோம் என்றால்
6.இந்தப் பிறவி என்ற பிணி நீங்கி நம் உயிராத்மா ஒளியாக மாறும்.