ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2018

இறந்த உயிரினங்கள் மூலமாகப் புது விதமான தாவர இனங்கள் உருவாகும் நிலையும் அதற்குண்டான “அமானுஷ்ய ஆற்றல்களும்…!”


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன முறைப்படி யாம் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலைந்து பல வருட காலம் பல அனுபவங்களைப் பெற்றோம்.

ஒரு சமயம் ஒரு காண்டாமிருகம் மற்றொன்றால் தாக்கப்பட்டு இந்த உயிர் பிரிந்த நிலையில் அதனுடைய உடல் அழுகிய நிலைகளில் இருக்கின்றது.

அந்த உடலை உருவாக்கிய ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி புழுக்களாக மாறி அந்த உடலையே உணவாக உட்கொள்கின்றது.

அந்த நேரத்தில் அதனின்று வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அதை அலைகளாக மாற்றுகின்றது.

அவ்வாறு அலைகளாக மாறியது வலுவான உணர்வின் தன்மையாகக் காற்றிலே பரவி வரும் பொழுது இன்னொரு தாவர இனத்தின் (பச்சிலை) சத்தைக் கவர்ந்த அலைகள் மீது மோதியபின் அதைக் கண்டு தாவர இனத்தின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.

அவ்வாறு ஓடும் பாதையில் இன்னொரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்த அலைகளில் தாக்கப்பட்ட பின் “கிறு…கிறு…” என்று சுழலுகின்றது.

இதை வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது. எப்படி?

காண்டாமிருகம் அது சேர்த்து கொண்ட உணர்வுகள் ரிக். தாவர இனச் சத்தை உருவாக்கிய செடியும் ரிக். விஷச் செடியின் தன்மையும் ரிக். ரிக் என்றால் ஒரு பொருள்.

இந்த மூன்றிலிருந்தும் வெளிப்படும் மணம் “சாம…” சாம என்றால் இசை.

இந்தக் காண்டாமிருகத்தின் உணர்வலைகள் வலுவான நிலைகள் கொண்ட பின் இது போகும் பாதையில் சாந்த உணர்வு கொண்ட தாவரமான அந்தப் பச்சிலையின் உணர்வுகள் நகர்ந்து ஓடுகின்றது.

அது ஓடும் பாதையில் ஒரு விஷச் செடி உமிழ்த்திய அந்த உணர்வு கொண்டு மோதிய பின் அது சுழற்சியாகி மூன்றும் இரண்டற இணைகின்றது.

இதற்குப் பெயர் தான் “அதர்வண…” அதர்வண என்றால் மறைதல் என்று பொருள். இரண்டற இணைந்த பின் அதனதன் குணங்களை இழந்து விடுகின்றது. இருந்தாலும்..
1.பல தாவர இனங்களை உணவாகப் புசித்த
2.இந்தக் காண்டாமிருகத்தின் வலுவான உணர்வுகள்
3.அது முன்னனியில் வலு பெறுகின்றது.

மூன்றும் சுழன்று மோதலில் ஆவியின் தன்மை மேலே செல்கின்றது. மோதிய உணர்வுகளோ இரண்டறக் கலந்து ஒரு புது விதமான செடியாக உருவாகின்றது.

அதாவது மூன்று உணர்வுகளும் சேர்த்து “யஜுர்…” யஜூர் என்றால் ஒரு வித்தாக உருவாகின்றது என்று பொருள்.

அதாவது காண்டாமிருகத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் மணம் பத்து சதவீதமும் பச்சிலையின் மணம் நூறு சதவீதமும் விஷச் செடியின் மணம் பத்து சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு வித்தாகின்றது.

எடை கூடிய நிலையில் அந்த வித்தின் தன்மை இந்தப் பூமிக்குள் பதிந்து விடுகின்றது. பின்பு
1.பதிந்த வித்தில் மின்னல்கள் தாக்கப்படும் போது
2.அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
3.அந்த வித்து உருவாகக் காரணமான
4.காண்டமிருகம் பச்சிலை விஷச் செடி மூன்று சத்துக்களையும் அந்தந்த சதவீதம் கவர்ந்து
5.புதுவிதமான செடியாக வளர்கின்றது.

அந்த செடியின் மணமும் அதனுடைய உணர்வுகளும் அதனுடைய இயக்கங்களும் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையை அறியும்படிச் செய்கின்றார் குருநாதர்.

அந்தச் செடியை எடுத்துச் சிறிது நேரம் அதை வெயிலில் வாடச் செய்து அதை நுகரும்படி சொன்னார். பின் அதை மென்று உட்கொள்ளும்படி சொன்னார் குருநாதர்.

அவர் சொன்னபடி செய்து அதை உட்கொண்ட பின் நான் காட்டுப் பகுதியில் அலைந்து திரிந்து எவ்வளவு சோர்வு அடைந்து இருந்தேனோ
1.அந்தச் சோர்வெல்லாம் நீங்குகின்றது.
2.எனக்கு ஒரு மன உறுதியைக் கொடுக்கின்றது.

ஏனென்றால் அந்தக் காண்டாமிருகம் தாவர இனங்களை உட்கொண்டது. அதன் உடலில் உருவான அந்த அணுக்கள் புழுக்களாகி அந்த உடலை உணவாக எடுக்கின்றது.

இந்த உடலைத் தின்ன புழுக்கள் அதற்கு இரை இல்லை என்றால் மடிகின்றது. மடிந்த புழுவின் உயிர்கள் மற்ற செடிகளில் விளைந்து அதை உணவாக உட்கொண்டு
1.எந்தச் செடியின் உணர்வை உணவாக உட்கொள்கின்றதோ
2.அதற்குத்தக்க உணர்வும் குணமும் இணைந்து
3.விட்டில் பூச்சிகளாகவும் விஷப் பூச்சிகளாகவும் அது உருபெறுகின்றது என்பதனை
4.அங்கே காட்டிற்குள் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

வான இயல் புவி இயல் தாவர இயல் உயிரியல் என்ற நிலையில் ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் இவை.

அந்த மகா ஞானி பெற்ற பேரண்டத்தின் சக்திகளையும் ஆற்றல்களையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் சிறுகச் சிறுக இதை உணர்த்துகின்றோம்.