ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2026

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!

நம் பக்கம் தவறு இருக்கிறதா…? என்று பார்க்கின்றோமா…!


ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
 
பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.
 
நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.
 
உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து "மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்" என்கிறார்.
 
பஸ்ஸின் டிரைவரோ… "ஏனய்யா புத்தி இருக்கிறதாபைத்தியமா பிடித்திருக்கிறது…?" என்று திட்டினார்.
 
குருநாதரும்… "இது போலவா வண்டி ஓட்டுவது…?  அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்" என்று டிரைவரைத் திட்டினார்.
 
பின் குருநாதர் தெளிவுபடுத்தினார்.
 
அதாவதுசமுதாயத்தில் இது போன்று சந்தர்ப்பங்கள்
1.சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டு
2.தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம். 
 
தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. 
 
டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை.
1.நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.
2.டிரைவர் திட்டியது சரி தான்…! என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது...
3.நல்ல அறிவினை ஊட்டினார்…! என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.
 
இப்படிகுருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் எமக்குக் கொடுத்தார்.
 
மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.
 
இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
1.மகரிஷிகளின் அருள் ஒளியினை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
ஆகவே நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன்…” என்ற அகந்தை கொண்டால் நல்வழியின்  உணர்வுகள் உனக்குள்  வராது என்று அந்த இடத்தில் குருநாதர் ம்மைத் தெளிவுபடுத்தினார்
 
ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால் நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர  நன்மை செய்ய முடியுமா? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.
 
ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வருகின்றது. இதைப் போன்று ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.
 
எனவேதீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று
1.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று
2.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.
 
அதைத் தான் உங்களுக்கும் குருநாதர் காண்பித்த அருள் வழியினைத் தெளிவுபடுத்துகின்றோம்.
 
ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள். 
 
உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வைப் பெறுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலை உணர்வைத் தூய்மையாக்கிவிடும்.
1.அதே சமயத்தில் அவர்களைப் பாதுகாக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.
2.அப்பொழுது நமக்கும் பாதுகாப்பாகின்றது.
 
நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று அபிஷேகமும் ஆராதனையும் செய்வதைப் போன்று உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை அபிஷேகம் செய்யுங்கள். 
 
இதனால் உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல் அமுது…” கிடைக்கின்றது.
 
நமது குருநாதர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது அறிவு பெற்ற சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்.
 
தீமைகளிலிருந்து விடுபடும் நிலையையும் அருள் ஒளியைப் பெறும் நிலையையும் உணர்த்திய உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எமக்குக் காண்பித்தார்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நீ பெற்றுக் கொள்... இருளை அகற்ற உதவும். மெய்ப்பொருளைக் காண உதவும். உன்னை அறியாது வரும் தீங்கினை அகற்றிட உதவும்…! என்று குருநாதர் எமக்கு உபதேசித்தார். 
 
1.நமது குருநாதர் தாம் ஒளியின் சரீரமானபின் எம்மை “நீ அதில் ஆயுள் மெம்பராகு…!என்று உரைத்தார். 
2.தே போல் யாம் உங்கள் அனைவரையும் அங்கு ஆயுள் மெம்பராக இணைத்து விடுகின்றோம்.