ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2026

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி


நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரிநம் எதிரியாக இருந்தாலும் சரிநம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.
 
1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.
 
ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.
 
1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.
 
அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”
 
ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.
 
ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.
 
நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.
 
இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.
 
குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.
 
அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.
 
பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் ஆத்ம சுத்திஎன்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.
 
1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.
 
எமது அருளாசிகள்.