ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 1, 2026

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”


ஒரு வாடிய செடிக்கு எப்படி உரம் இடுகின்றோமோ அதைப் போலத் தான்
1.அந்த மகரிஷிகளின் உரச் சத்தை
2.அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வினை உங்களுக்குள் உரமாக இணையச் செய்கின்றோம்.
 
சாதாரணமானதல்ல…! அகண்ட அண்டத்தின் விரிவான நிலையை அறிந்த ஞானி தனக்குள் அதை தெளியச் செய்து அந்த உணர்வால்  உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான் கல்கி.
 
அந்த நிலையை நாம் அனைவரும் பெற முடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
 
1.உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள் எத்தனையோ எத்தனையோ…!
2.அப்படிப்பட்ட நிலையில்… கோடிக்கணக்கான குணங்கள் உங்களுக்குள் இருப்பினும்
3.அவை எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உங்களுக்குள் நினைவுபடுத்தி
4.அதை அண்டத்துடன் பேரண்டத்துடன் இணைத்து
5.மனிதனான நாம் அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து
6.அவ்வாறு இணையும் தன்மையைத் தனக்குள் பெருக்கப்படும் பொழுது தான் அது வலுப் பெறும்.
 
ஒவ்வொரு செடிகளுக்கும் அதற்குண்டான உரத்தை இடுவது போன்று தான் அருள் ஞானிகளுடைய உணர்வுகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.
 
இந்த உணர்வின் துணை கொண்டு என்றும் அருள் ஞான உணர்வின் தன்மை கொண்டு இருளைப் பிளந்து பொருள் காணும் பொறிகள்…” உங்களிடத்தில் உருவாக வேண்டும் என்பதற்குத்தான் இதை இணைத்து இணைத்துத் தொடர்ந்து இணையச் செய்கின்றேன்.
 
காரணம்இந்த உடலில் யாரும் நீண்ட நாள் இருப்பது இல்லை. யாரும் இருந்தது இல்லை. ஆனால் நீண்ட நாள் என்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
1.இந்த உடலை வைத்துத் தான் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
2.விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டுள்ளார்கள்.
3.பேரானந்த பெரு நிலை என்ற நிலையில் முழுமை அடைந்தவர்கள் அவர்கள்.
4.நாம் அனைவரும் அதைப் பெற வேண்டும்.
 
மனிதனான பின் தீமையை நீக்கி விட்டு தனக்குகந்ததாக பல பொருள்களை உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள் தான் நாம். இதையெல்லாம் உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். மெய் ஞானிகளின் உணர்வுகளை அறிந்து கொண்டால் போதும்.
 
மெய்ஞானி உயிருடன் ஒன்றி என்றுமே அழியாத நிலை கொண்டான்…!
 
ஆஅனால் விஞ்ஞானியோ இந்த உடலுக்காக வேண்டி சகல சொர்க்கத்தையும் கொடுத்தான். பேரின்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைகளுக்கும் அந்த விஞ்ஞான அறிவு வந்தாலும்… அது உடலுடன் சரி.
 
உடல் மடிந்த பின் எத்தகைய அறிவு கொண்டாலும் பூதகணமாக இயங்கி இன்னொரு மனித உடலுக்குள் கொண்டு போய் பேயாக உருவாக்கும் நிலையே வருகின்றது.
 
எந்த மனித உடலில் எந்த வேதனையைக் கடைசியிலே வளர்த்துக் கொண்டானோ எதனைக் கொண்டு அழிக்கத் துணிந்தானோ அந்த உணர்வுகள்  மனித உடலில் விளைந்து சிறிது கோபம் வந்தால் போதும்.
 
என்ன வாழ்க்கை…? என்று உடலை அழிக்கச் செய்து விடுகின்றது. மற்றவனை எப்படி அழிக்க வேண்டும்…! என்று வருகின்றது.
 
கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்தாலும் அனைவரையும் அழித்துக் காலி பண்ணுகின்றேன் பார்…! இந்த ஊரை அழிக்கின்றேன் அனைத்தையும் உருக்குலையச் செய்கின்றேன்…! என்ற உணர்வு தான் விஞ்ஞானத்தினால் இன்று வருகின்றது.
 
அதையெல்லாம் மாற்றி
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகிப் பருகி
2.வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் திறனை உரமாக ஊடடுவதற்குத் தான் இந்த உபதேசமே…!.
 
வீண் என்ற பேச்சு இல்லை விரயமாகும் தன்மை இல்லை…!
 
அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தார்களோ அந்த மகரிஷிகளின் சக்தியை உங்களுக்குள் இணைத்து இணைத்து இணைத்து…” இந்த இணைப்பின் வலு கொண்டு உரமாக்கி விட்டால்
1,எண்ணத்தால் வளரும் பருவம் வந்து விட்டால்உங்கள் நினைவின் ஆற்றல் அகண்ட அண்டத்திற்கு வருகின்றது.
2.பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.
 
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான நிலைகள் இருப்பினும்
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்கள் ஏங்கிடும் உணர்விற்குள் இணைத்து
2.அதை உற்று நோக்கி அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.
 
அதைத்தான் தொடர்ந்து யாம் செய்து கொண்டு வருகின்றோம்.