ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2017

உயிரை நாம் ஏன் வணங்க வேண்டும்...? எப்படி வணங்க வேண்டும்…?

ம் ஈஸ்வராகுருதேவா…” என்று உங்கள் உயிரை எண்ண வேண்டும்.  
1.ம் ஈஸ்வராஎன்றால்
2.எனக்குள் ஜீவனாக இருந்து…” உருவாக்கிக் கொண்டிருக்கின்றாய்என்று பொருள்.

ஓம் ஈஸ்வரா என்று எண்ணும் போது உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். குருதேவா என்கின்ற போது உடலுக்குள் இருக்கும் அனைத்து குணத்திற்கும் நம் உயிரே குரு…” என்ற நிலைகளில் மதித்துப் பழக வேண்டும்

1.ஈசனாக இருப்பதும்
2.விஷ்ணுவாக இருப்பதும்
3.கடவுளாக இருப்பதும் நமது உயிரே
4.பிரம்மமாக இருப்பதும் உயிரே.
5.நாம் எண்ணியது எதுவோ அதைச் சிருஷ்டிக்கின்றது நம் உயிர்,
6.நாம் எண்ணியது எதுவோ அது உடலாக்குகின்றது நம் உயிர்

நாம் எண்ணியது எதுவோ அது சக்தியாக மீண்டும் நம்மை இயக்குகின்றது.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்கின்ற போது நம் உயிரின் இயக்கத்தைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். ஏதோ மந்திரம் சொல்கிற மாதிரிச் சொல்ல வேண்டியதில்லை.

ஈசன் என்றாலே உங்கள் உயிரைத்தான் நினைவில் கொள்ள வேண்டும் என்று ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். ஈசன் எங்கேயோ இருந்து நம்மை இயக்குகின்றான் என்று வெளியிலே தேட வேண்டியதில்லை.

குரு என்றால் உங்கள் உடலில் உள்ள அனைத்திற்கும் குருவே அவன் தான். அந்தக் குருவை மதிக்க வேண்டும்.

ஏனென்றால் உயிர் ஒளியாகப் பெற்றவன். குரு ஒளியாக இருக்கின்றான். அந்த ஒளியின் நிலை பெற வேண்டும் என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எண்ணினால் தான் குருவை மதிக்கின்றோம் என்று பொருள்.

குருவாகநம் உயிரை நினைக்கும் போது
1.அது ஒளியாக நின்று நமக்குள் எவ்வாறு தெளிவுபடுத்துகின்றதோ
2.அதைப் போல நாம் அந்த குருவை மதித்துப் பழக வேண்டும்.
3.உயிரை ஈசனாக மதித்துப் பழக வேண்டும்.

இல்லை என்றால் மனிதன் என்ற நிலைகள் ஆறாவது அறிவு படைத்தும் நாம் பரிணாம வளர்ச்சியின் நிலைகள் தேய்பிறையாக இருக்க முடியுமே தவிர வளர்பிறை என்ற நிலைகளில் உயிரின் உணர்வின் தன்மை கொண்டு நிலை கொண்ட சரீரமான அருள் ஞானி உணர்வைப் பெற வேண்டும் என்றால்
1.நாம் உயிரை மதித்துப் பழக வேண்டும்.
2.ஞானிகள் உணர்த்திய அதை நாம் பின்பற்ற வேண்டும்.