ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2017

இரத்த அடைப்புகளை நீக்கும் அருகம்புல் சாறு

உதாரணமாக நாயை எடுத்துக் கொண்டால் அதற்குப் புல்லை மேய்ந்து பழக்கம் இல்லை.

ஆனாலும் அதற்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்யும்?

அந்தப் புல்லைக் கொஞ்சம் மென்று தின்று அது உள்ளுக்குள் சென்ற பின் வாந்தி எடுத்து அந்த அமிலத்தை வெளியேற்றிவிடும்.

அதற்குண்டான அறிவு அது.

புல்லை மேயச் செல்லும்போது நாயைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதற்குச் சோர்வு வரும் பொழுது ந்த உணர்வுக்குத் தக்க அதனுடைய அறிவு புல்லை நுகரச் செய்கின்றது. தன் உடலில் வந்த தீமைகளை அகற்றுகின்றது.

இயற்கை வைத்தியம் என்ற நிலையில் மனிதனுக்கு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால் நலம் என்று சொல்வார்கள்.
1.அதை அளவுகோல் படி
2.அந்தந்த நேரங்களில் சிறு துளிகள் சாப்பிடலாம்.  
3.அளவுக்கு மீறிச் சாப்பிடவும் கூடாது.

அந்த அளவு கோல்படி அருகம்புல் சாற்றைப் பச்சையாக எடுத்துச் சாப்பிட்டால் நம் இரத்தங்களில் இது கலக்கப்படும் போது
1.இரத்தத்தில் ஊறிய கழிவு நிலைகளை (கட்டிகளை)
2.இது மாற்றி உடைத்து விடுகின்றது.

அதே மாதிரி அடைப்புகள் இருதயங்களிலோ கால்களிலோ இரத்த ழிப்புகள் வந்தால் சிறிதளவு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால் அதாவது
1.ஒரு மடக்கு அருகம்புல் சாறைச் சாப்பிட்டால்
2.இயற்கை வழிகளில் அடைப்புகளை நீக்குகின்றது.