அகஸ்தியன்
துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு
உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு
மனமும் ஒரு மனமாகி
3.இரு
உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை
அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.
ஒளியின்
சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி பிறவியில்லா
நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதிலிருந்து
வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
நமது பூமி
அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.
அதி காலை
4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த
நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.நம்
உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில்
அது பரவுகின்றது நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.
அடிக்கடி
இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள்
பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின்
தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள்
கண்களை ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா
என்று சொல்லும் பொழுது
2.புருவ
மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா
என்றாலே உங்கள் உயிர் தான்.
உங்கள்
உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள்.
அதிலிருந்து
வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப
எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இப்படி அதை
நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள்
செல்லுகின்றது.
1.உங்கள்
புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும்
நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.
சிலருக்குக்
குறு குறு என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம்
உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த
அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய
அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.
உங்கள்
நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும்
பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.
1.துருவ
நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள்
நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து
வரும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள்
ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ
மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.
இரண்டு
கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக
உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள
அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.
நமது இரத்த
நாளங்களில் பெருக்குகின்றோம்.
உங்கள்
உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின்
நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
இரத்த நாளங்களுக்குள் கலப்பதும் உடல்களில் உள்ள அணுக்கள் பெறும் அந்த
உணர்ச்சிகளையும் “நீங்கள் அறிய முடியும்”.
உங்களுக்குள்
அது பேரொளியாக மாறும். அருள் வட்டமாக ஒளி வட்டமாகத் தெரியும். உங்கள் உடலிலிருந்து
“பளீர்.. பளீர்…” என்று வெளிச்சம் வருவதையும் காண முடியும்.