இப்பொழுது
நமக்குள் நாம் கஷ்டப்பட்டது, வேதனைப்பட்டது சங்கடப்பட்டது சோர்வடைந்தது வெறுப்படைந்தது
சண்டை போட்டது இத்தனை உணர்வுகளும் பிறருடைய தோஷமாக இருக்கின்றது. அவை எல்லாம் நமக்குள்
பதிவாகியிருக்கின்றது.
நாம்
சிறிதளவு சோர்வடைந்தால் கூட நமக்குள் என்ன செய்யும்?
1.மாமியார்
திட்டிய உணர்வு வந்துவிடும்
2,மாமனார்
கோபித்தது வந்துவிடும்
3.பிள்ளைகள்
சேட்டை செய்தது நினைவுக்கு வரும்.
4.அவர்கள்
ஒத்துழைக்கவில்லை… இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்… என்ற எண்ணம் வரும்.
அடுத்துப்
பக்கத்து வீட்டில் இருக்கும் அவர்கள் ஏதாவது சொன்னால் அவர்கள் மேலும் நமக்குள் கோபம்
வரும்.
நாம்
சாப்பிடும் பொழுது அந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் உமிழ் நீராக மாறுகின்றது. அந்த
உமிழ் நீர் இரைப்பைக்குப் போனவுடனே நம் இரைப்பை என்ன செய்கின்றது?
நமக்குள்
சேர்த்துக் கொண்ட அந்த விஷத்தின் தன்மையால் அது மயக்கமடைந்து நாம் சாப்பிட்டதைச் சாப்பிட
முடியவில்லை. “என்னால் சாப்பிட முடியவில்லையே…! என்ற உணர்வு வருகின்றது.
இந்த
வேதனை உணர்வு ஆன பிற்பாடு பெருங்குடலுக்கு வந்தவுடன் என்ன செய்கின்றது?
“புஷ்…ஷ்ஷ்..” என்று உப்பி வயிறு எப்படியோ
உப்புசமாக ஆகின்றது என்று சொல்கிறோம்.
அப்புறம்
என்ன செய்கின்றது?
உடலுக்குள்
போனவுடன் இந்த கணையத்தில் இந்த விஷத்தின் தன்மை இணைந்துவிடுகின்றது. இதெல்லாம் கல்லீரல்
மண்ணீரலுக்கு வந்த பின் அங்கேயும் விஷம் அதிகமாகின்றது.
இங்கே
வலிக்கின்றது. இடுப்பு வலிக்கிறது. “கும்..ம்…” என்று இருக்கின்றது என்று இத்தனை
வேலைகளையும் செய்ய ஆரம்பிக்கின்றது.
எதை
நீக்குகின்றோம்? ஆக நம் உடலில் இத்தனை தொல்லைகளையும் எடுத்துக் கொள்கின்றோம்.
நம்
உடலில் நாம் எடுத்துக்கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் போன்ற
நினைவுகள் நமக்குள் வரும் போது அது உமிழ் நீராக மாறி நமது சிறு குடலில் சேர்த்தவுடன்
நாம் சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டாலும் அது நஞ்சாக மாற்றுகின்றது.
உதாரணமாகப்
பாலில் போடும் பாதாமிற்குச் சக்தி இருக்கின்றது. அந்தப் பாலிற்கும் சக்தி இருக்கின்றது.
அதனுடன் சீனி போட்டால் ருசியாகவும் இருக்கின்றது.
ஆனால்…
ஒரு துளி விஷம்பட்டால் என்ன செய்யும்?
பாலில்
ஒரு துளி விஷம்பட்டால்
1.அதில்
சத்து இருக்கின்றதா?
2.இல்லை…,
அந்தப் பாதாமிற்குத்தான் சத்து இருக்கின்றதா..?
அதே
மாதிரி
1.நமக்குள்
நல்ல குணங்கள் இருப்பினும்…
2.நல்ல
ஆகாரத்தைத் தான் சாப்பிட்டாலும்…
3.இந்த
விஷம் கலந்த பின் விஷம் கலந்த மயக்கம் தான் வருமே தவிர
4.நல்லது
வருகின்றதோ…!
இதை
எல்லாம் சிவன் ராத்திரி அதாவது நம் உயிர் மனித உடல் பெற்ற நந்நாள் மகா சிவன்ராத்திரி
என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்
உடலுக்குள்
1.நாம்
நுகர்ந்த உணர்வுகள் எதனெதன் உணர்வோ
2.அதனதன்
அறிவாக அதனதன் அணுக்கள் விளைந்து
3.நமக்குள்
என்ன செய்கின்றது?
என்பதனைத்
தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாம்
நல்லவர்களாக இருந்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலுக்குள் அணுக்களாக எது
எது விளைகின்றது என்பதைத் தெரிந்து தெளிந்து வாழ்வதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கின்றோம்.
தீமைகள்
வரும் பொழுது அதை நீக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து அதை மாற்றியமைக்க
வேண்டும். அதை நீக்கிப் பழக வேண்டும். அதற்குத்தான் அந்த மெய் ஞானிகளைப் பற்றித்
திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம்.