வராகன் என்றால் – “மிகவும் வலிமையானது…”
என்று பொருள்
பன்றி தன் உடலின் வலிமை கொண்டு சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப்
பிளக்கிறது. பிளந்து எடுத்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்ல மணத்தைப் பிரித்து
(அதில் மறைந்துள்ள உணவு பொருளை) எடுத்துச் சந்தோஷமாகச் சாப்பிடுகிறது.
சாக்கடையில் ஒரு பருப்பைப் போட்டு விட்டு நீங்கள் முகர்ந்து
பாருங்கள். என்ன வாசனை வருகிறது? அந்த நல்ல பருப்பின் வாசனை
வருகிறதா? அல்லது மேலே இருக்கும் வாசனை வருகிறதா?
“நல்ல வாசனையைப் பிரிக்க முடியுமோ? பிரிக்க
முடியாது…” அதைக் காட்டுகிறார் குருநாதர்.
பல உடல்களிலே தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்று பன்றியான உடல்
அமைப்பைப் பெற்றது.
குருநாதர் சொல்கிறார்… நீ (ஞானகுரு)
முதலில் பன்றியாகவும் இருந்தாய்.
இதைக் காட்டுவதற்காக சாக்கடைப் பக்கத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு
போனார். சாக்கடையிலிருந்த குப்பையெல்லாம் அள்ளிப் போட்டு வைத்துள்ளார்கள்.
FLUSH
OUT – கழிப்பறைகள் இல்லாத காலம் அது. கழிப்பிடமாக மக்கள்
பயன்படுத்தும் சாக்கடை அது. சாக்கடையில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது.
பழனியில் என் வீட்டிற்கு அருகில் தான் இது நடக்கிறது.
நான் தெலுங்கு பேசுவதால் “வாடா தெலுங்கு
இராஜ்ஜியம்…!” என்று குருநாதர் என்னைக் கூப்பிடுகிறார்.
திருப்பதி வெங்கடாஜலபதி மிகப் பெரிய செல்வந்தர். நீ வெங்கடாஜலபதியை
தோஸ்து (நண்பனாக்கி) பண்ணிக் கொள் என்பார்.
இல்லை நான் முருகனைத் தான் வணங்குகிறேன் என்பேன்.
டேய்… நீ தெலுங்குஇராஜ்ஜியம்டா, அங்கே போடா..! என்றெல்லாம் சொல்வார்.
சாக்கடைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு “காப்பி வாங்கிக் கொண்டு வாடா…” என்றார்.
எனக்குக் காப்பி.. அவருக்கு டீ.. அவர் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்தேன்.
நான் வாங்கி வந்த டீயில் சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்டிருந்த
குப்பைகள் இரண்டைப் போட்டார். என் காப்பியிலும் இரண்டைப் போட்டு சர்…ர்ர். என்று ஆற்றிவிட்டுச் “சாப்பிடுடா…!”
என்றார்.
சாக்கடையை அள்ளிப் போட்டுவிட்டுக் காப்பியைச் சாப்பிடு என்றால்… “எப்படி இருக்கும்…?”
நைனாவிற்கு ரொம்பப் (எனக்கு) பைத்தியம் பிடித்து விட்டது…! என்று எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.
இங்கேயும் அங்கேயும் நான் பார்க்கிறேன். சாமி…! இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகிறது…! என்கிறேன்.
“நான் சொல்வதைச் செய்கிறேன்… என்று சொன்னாய்
அல்லவா…! நீ செய்டா…” என்கிறார்.
“நான் சாப்பிடுகிறேன் பார்…” என்று
சொல்லி அவர் சாப்பிடுகிறார்.
அவர் சாப்பிடுவதைப் பார்த்தாலே “எனக்கு” வாந்தி வருகிறது
அப்பொழுது கடவுளின் அவதாரத்தில்… “வராக அவதாரத்தைப்”
பற்றி அந்த இடத்தில் காட்டுகிறார்.
என்னால் காபி சாப்பிட முடியவில்லை. காபியைக் கொட்டி விட்டு வட்டைக்
கப்பைக் கொண்டு போய் டீ கடையில் திரும்பக் கொடுக்கிறேன்.
என் வீட்டுப் பக்கத்தில் டீக்கடை வைத்திருக்கும் “பாய்” அவர் அந்த வட்டக்கப்பை வாங்க
மறுக்கிறார்.
“நைனா…! இந்த வட்டைக்கப்பை உங்கள் வீட்டில்
வைத்துச் சாப்பிடுங்கள்… சாக்கடையில் இருப்பதைப்
போட்டதால் இதில் யாரும் காப்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் இதை உங்கள் வீட்டிற்கே
கொண்டு போங்கள் என்கிறார்.
வேறு வழியில்லாமல் அதற்கான காசைக் கொடுத்தேன்.
வட்டகப்பை கடை வாசல் முன்னாடி கூட வைக்க வேண்டாம் என்கிறார்.
பக்கத்தில் இப்ராஹிம் சைக்கிள் கடை வைத்துள்ளார். அங்கே வைத்தேன். “கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறேன்…” என்று
சொன்னால் கூட அவர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.
உங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போங்கள். பன்றி முகர்ந்து
பார்த்துள்ளது. யாராவது பார்த்தால் நானும் அதைச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக்
கொள்வார்கள் என்கிறார்.
பன்றி முகர்ந்து பார்த்துள்ளது என்று அங்கு வைக்கக்கூட விட மாட்டேன்
என்கிறார். நான் என் வீட்டிற்கே கொண்டு போய் வாசற்படி அருகில் வைத்துவிட்டேன்.
முறுக்கு நிலக் கடலை பொட்டுக் கடலை… வாங்கிக் கொண்டு வாடா என்றார் குருநாதர். ஒரு குச்சி எடுத்து வாடா…
என்றார். சாக்கடைக்குள் மூன்று கோடுகளைப் போடச் சொன்னார்.
போட்டேன்.
நிலக் கடலைப் பருப்பை முதலிலும் அடுத்து பொட்டுக் கடலையையும் அதற்குப்
பிறகு முறுக்கையும் போடச் சொன்னார்.
பன்றி அந்தப் பக்கம் மேய்ந்து கொண்டு வருகிறது. கடலைப் பருப்பின்
வாசனை… எண்ணையில் பொறித்தெடுத்த முறுக்கின் வாசனை..
வருகிறது.
1.நேராக கடலைப் பருப்பை முகர்ந்து எடுக்கிறது.
2.அடுத்து முறுக்கை எடுத்துச் சாப்பிடுகிறது.
3.மூன்றாவதாக பொட்டுக் கடலையைச் சாப்பிடுகிறது.
“பார்த்தாயாடா., பன்றி எப்படி எடுக்கிறது என்று…?”
அந்த இடத்தில் காட்டுகிறார். நீயும் இதற்கு முன்னால் பன்றியாக
இருந்தவன் தான்டா. இந்த உயிர் தான் பன்றியாகவும் ஆக்கியது என்கிறார்.
தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பன்றி உடலிலிருந்து பெற்ற பிறகு
மனிதனாக்கிக் கொண்டு வந்தது இதே உயிர் தான் என்று காட்டுகிறார். இங்கே விளக்கம்
கொடுக்கிறார் குருநாதர்.
பன்றி எவ்வாறு பல உடல்களிலிருந்து தீமையை நீக்கி… நீக்கி… வந்தது. பன்று உடலில் வலுவானதால்
அதற்குத்தகுந்த உறுப்பாகி நாற்றத்தைப் பிளந்து அதில் உள்ள நல்ல மணத்தைப் பிரித்து
எடுத்துச் சாப்பிடுகிறது என்று நிதர்சனமாய்க் காட்டுகிறார்.
எனக்கு ஒரு பக்கம் பயம் இருந்தது. முறுக்கையும் கடலைப் பருப்பையும்
இதில் துவட்டி எடுத்து சாப்பிடச் சொல்லப் போகிறார் என்று.
1.பல உடல்களில் தீமையை நீக்கி
2.அதற்குத் தக்க உடல்கள் மாறி மாறி
3.இதே உயிர் தான் பன்றியாக உருவாக்கியது.
தீமைகளையெல்லாம் நீக்கும் உடல் உறுப்புகளைப் பன்றி பெற்றதனால்
சாக்கடையில் வரக் கூடிய நாற்றத்தை எண்ணாது அதிலுள்ள நல்லதை நுகர்கிறது என்று
குருநாதர் விளக்கம் சென்ன பிறகு மனது தெளிவாகி விட்டது.
நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுக்கும் வலு வளர்ச்சியான பின் பன்றி
மனிதனாகப் பிறக்கின்றது.
மனிதனான பின் நஞ்சைப் பிரித்து விட்டு நல்ல உடலாக உன்னை மாற்றுகிறது.
எது ஆனதோ எல்லாமே சந்தர்ப்பம் தான்.
சாக்கடை என்று எண்ணுகிறாய்.
1.நீ சுவாசிக்கும் நாற்றம் வலுவாகிறது
2.இதைச் சுவாசித்து உயிரில் பட்டபின் நாற்றமாகிறது
3.உன்னால் நல்லதைப் பிரிக்க முடியவில்லை என்கிறார்.
4.எண்ணியவுடனே நாற்றம் வந்தது.
5.எண்ணாமல் இருந்தால் நாற்றம் வந்ததா? என்று
கேட்டார்.
வீட்டுக்கு முன்னாடி தான் சாக்கடை இருக்கிறது. ஆனால் நாற்றம்
தெரிகிறதா? அந்த வீட்டுக்காரருக்கு நாற்றம் தெரிவதில்லை.
ஆனால் நாம் போனால் உடனே “அச்சச்சோ….”
என்று மூக்கைப் பிடிக்கிறோம்.
ஒரு சமயம் திடீரென்று குருநாதர் வருகிறார். இங்கே வாடா… என்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறார். கொஞ்ச நேரம் பேசிக்
கொண்டு இருக்கிறோம்.
சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு நாற்றம் வருகிறது. என்ன என்று
பார்க்கிறேன். பார்த்த பின்.. சாமி…! இங்கே அசூசை
இருக்கிறது பாருங்கள் என்றேன்.
கூப்பிட்டு வரும் பொழுது முதலிலே நினைத்தாயா…? நினைக்கவிலை, அதனால் வாசனை வரவில்லை. ஆனால்
கண்ணில் பார்த்தவுடன் அசூசை இருக்கிறது தெரிகிறது. வாந்தி வருகிறது.
எதனால் இப்படி வருகிறது?
1.“நம் எண்ணத்தில் எண்ணுவதால் தான் அது வருகிறது” என்று
2.இவ்வளவு தெளிவாகக் கொடுக்கிறார்.
உடலாக இருப்பதெல்லாம் சிவம் தான். எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ
அதற்குத்தக்க உடலை உருவாக்குகிறது.
நம் உயிரணு பூமிக்குள் வரும் போது
1.எந்தச் சத்தை முதலில் நுகர்ந்ததோ அதற்குத்தக்க உடலாகிறது.
2.உடலான பின் மூஷிக வாகனா – அந்த மணதைச்
சுவாசித்து
3.அதற்குத்தக்க வாழ்க்கை ஆகின்றது என்று
சாக்கடைக்கு அருகில் என்னை அமர வைத்து வியாசக பகவான் கண்டுணர்ந்த
பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.
இன்று இந்தக் காற்று மண்டலம் நச்சாக இருந்தாலும் அதில் மறைந்துள்ள
மெய் ஞானிகளின் உணர்வை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த அனுபவத்தின் மூலமாகத்தான்
1.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனித்துப் பிரித்துக் கவரும்படி செய்தார்.
2.அத்தகையை ஆற்றல் நீங்களும் பெறவேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசமே.