ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2017

“பன்னிரெண்டு இராசிகளிலும்…” தூய்மைப்படுத்தும் நிலைகளை ஞானிகள் காட்டிய நெறி முறைகள்

சிவன் ராத்திரி அன்றைக்கு விழித்திரு… பசித்திரு… தனித்திரு… என்று சொல்வார்கள்.

1.வேதனையான (மற்ற தீமைகள்) உணர்வுகள் தனக்குள் புகாதவாறு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று நீ விழித்திரு.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏக்கம் கொண்டு நீ பசித்திரு.
3.தீமைகள் தன்னைப் பற்றிடாது நீ தனித்திரு.

தீமைகள் நம்முள் புகாது விழித்திருக்க வேண்டும்.

கஷ்டம் என்ற நிலைகளிலிருந்து அது நமக்குள் புகாமல் “விழித்திருந்து…” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று நாம் “பசித்திருந்து…” போது தீமைகள் நம்மைப் பற்றிடாது “தனித்திருக்க…” வேண்டும்.

இதைத்தான் ஞானிகள் விழித்திரு பசித்திரு தனித்திரு என்றார்கள்,

ஞானிகள் சொன்ன அந்த நிலையை நம் எல்லோராலும் பெற முடியும்.

தனித்திரு… என்றால் சில சாமியார்கள் என்ன செய்வார்கள்?

“குடும்பம்… பெண்டு பிள்ளைகள்… இதெல்லாம் வேண்டாம்…” என்று நினைத்துக் கொண்டு “தனித்து” இருப்பார்கள். இதெல்லாம் அறியாமை.

நாம் நம்மை அறிந்து இந்த உயிரின் உணர்வை அறிந்து நாம் இனிப் பிறவியில்லா நிலை அடையும் நிலையில் விழித்திருந்து தீமைகள் புகாது நமக்குள் உயிரைப் போலவே உணர்வை ஒளியாக்கிட வேண்டும்… “கார்த்திகேயா”. கார்த்தி என்றால் வெளிச்சம்.

சிவன் ராத்திரி அன்று இதை எடுத்துக் கொண்டோம். பன்னிரண்டு இராசிகளில் இது ஒரு இராசி. அடுத்த மாதம் வரப்படும் போது இதையே மாற்றி வரப்படும் போது சித்திரை.

சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.

வைகாசி - தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள், “விநாயகர் சதுர்த்தி…” இப்படி ஒவ்வொரு நிலைகளுக்கும் காரணப் பெயர் வைத்தார்கள்.

பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்துக் கொள்ளச் சொன்னார்கள்.

ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்?

ஜோசியம் பார்த்து இந்த மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யச் கூடாது என்றும் ஞானிகள் சொன்ன நிலைகளை மாற்றி ஆசைக்கு வகுத்துக் கொண்ட நிலைகள் தான்.

ஞானிகள் நமக்கு உணர்த்திய அந்த மெய் வழிப்படி நடந்தால் அவைகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் அவர்கள் அடைந்த எல்லையை அடைவது சுலபம். 

பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்.