இன்று கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கல்வியை வளர்க்கின்றோம். கல்வியை வளர்த்துக் கொண்டாலும் இந்த உடல் இச்சைக்குச்
செயல்படுவோர் சிலர் செய்யும் தவறோ
ஏராளமானது..!
டாக்டர் படிப்போ மற்றதற்கோ மேற் படிப்புக்குச் செல்லும் போது கல்லூரி நுழை வாயிலிலேயே (கல்லூரிக்குள்) உள்ளே வந்த பிறகு கெட்ட வழியில் எப்படியெல்லாம் தவறு செய்ய
வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார்கள்
“RAGGING...” என்ற முறை கேடான நிலை நடக்கிறது.
அரசாங்கமும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது. அந்தப் பள்ளியோ.., கல்லூரியோ...
அதை நடத்துபவர்களும்
பார்த்துக்
கொண்டு தான் உள்ளனர்.
உயர்ந்த படிப்புக்குச் செல்பவரையும் தவறு செய்யும் உணர்ச்சியை
ஊட்டி அந்தத் தவறு செய்பவனாக
மாற்றி நாட்டைக் காக்கும் நிலையில் இல்லாமல் தவறு செய்து வாழும் உணர்வாக முறை கேடான நிலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
கல்வி கற்றுத் தர வேண்டிய
இடத்தில் தவறு செய்வதை உருவாக்கும் நிலையாக நடப்பதைப் பற்றிச் சிந்திப்பார் யாரும் இல்லை.
இந்த உணர்வின் தன்மை பெருகி வரும் இந்த காலத்தில்
நாம் சிந்திப்பது எப்போது..? சிந்தனையுடன் தீமைகளை அகற்றுவது
எப்போது...?
இப்படிப்பட்ட தீமையான உணர்வுகள்
பரவிக் கொண்டு வருகிறது. இந்தக் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையாக ஆகிக் கொண்டே வருகிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமா... இல்லையா...?
எப்படி மீட்பது..?
ஆயிரம் தான் யாம் சொன்னாலும்
கேட்கும் போது..., சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார் என்கிறார்கள். நன்றாக இருந்தது என்று தான் சொல்கிறார்கள்.
அடுத்தாற் போல் வாழ்க்கையில் சந்திக்கும் போது யாராவது வெறுப்பாகப் பேசினால் போதும்.
1.பார்... சாமி நல்லதைச் சொல்கிறார்... ஆனால் இவனைப் பார்..!
2.நான் ஒன்றுமே செய்யவில்லை...! என்னை எப்படித்
திட்டுகிறான்…! என்று
3.நல்லதை விட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள்.
கடையில் கடனுக்காகச் சரக்கைக் கேட்பார். அவர் கொடுக்கவில்லை
என்றால் உடனே அவர் அந்தச் சரக்கெல்லாம் “மோசம்...” என்பார்…!
“கடன் இல்லை...” என்று சொன்னதற்காக
இப்படி எல்லாம் நடக்கிறது.
இதைப் போன்று எத்தனையோ நடக்கின்றது. பிறர் செய்யும் தீமையை நுகரும் போது தீமையான நினைவுகளே நமக்குள் வருகிறது.
1.எந்தச் சாமியைப்
பார்த்து... நாம் என்ன செய்வது...?
2.என்ன தியானம்
பண்ணி... என்ன செய்வது...?
3.எந்தக் கடவுளைப்
பார்த்து... என்ன பண்ணுவது...? என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.
அதனால் தான் கோவிலில் (மனித உடலைப் போல்) சிலைகளை வைத்து அந்தத் தெய்வத்திற்குப்
1.பாலாபிஷேகம் செய்கிறார்கள்
2.தேனாபிஷேகம் செய்கிறார்கள்
3.சந்தன அபிஷேகம் செய்கிறார்கள்
4.நன்னீர் விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
5.பன்னீரை விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
எதற்காக அந்தச் சிலைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்?
பாலாபிஷேகம் செய்கிறர்கள். நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம்
அவ்வளவுதான். ஏன்... ஏதற்கு...! என்று எண்ணுவதில்லை.
பாலாபிஷேகம் தேனாபிஷேகம்
செய்வதைக் கண்களால் பார்க்கும் போது எதை எண்ண வேண்டும் என்று ஞானிகள் காட்டியதை நாம் அறிய வேண்டும்.
1.பாலைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும்.
2.மகிழந்து வாழும்
சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.தேனைப் போன்று சுவையான நிலைகள்
பெற வேண்டும்.
4.கனியைப் போன்று சுவையான சொல்லும்
செயலும் பெற வேண்டும்.
5.அந்த அருள் சக்திகள் எங்கள் உடலில் படர
வேண்டும்,
6.எங்கள் குடும்பத்தில்
படர வேண்டும்,
7.கோவிலுக்கு வரம் குடும்பமெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும்
எத்தனை பேர் நாம் இப்படி நினைக்கிறோம்...?
பாலபிஷேகம் தேனாபிஷேகம் செய்து நல்ல ஒழுக்கத்தை நமக்குள் சுவாசிக்கச் செய்வதற்காக அவ்வாறு
வைத்துள்ளார்கள் ஞானிகள். கோவிலுக்குச் சென்றால் இவ்வாறு நாம்
நினைக்கிறோமா?
நம்மைப் பண்படுத்துவதற்கு சிலையை வைத்துள்ளார்கள். இது “துவைதம்”. அங்கு ஊற்றும் பாலைப் பார்க்கும் போது அதிலிருந்து
வரும் மணம் “அத்வைதம்”.
நாம் நுகர்ந்தறியப் போகும்போது உயிரிலே பட்டபின்
அந்த உணர்ச்சிகளை எண்ணி ஏங்கும்போது அது வருகின்றது. அந்த உணர்ச்சியின்
தன்மை வரும் போது விசிஷ்டாத்வைதம்.
அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது. அந்த உணர்வின்
தன்மை உடலாகும் போது
1.தீமைகளை நீக்கி நல்ல மணமுள்ள அணுக்களை
2.நீ உன் உடலில் உருவாக்கக்
கற்றுக் கொள்.
ஏனென்றால் அது கல் சிலை தான். அதிலே ஊற்றிய உணர்வின்
தன்மையை மனிதனான நாம் நுகரப்படும்
போது
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை
2.நமக்குள் எப்படி வளர்க்க வேண்டும் என்று
3.;அதைக் கண்டுணர்ந்த ஞானிகள் இதைச்
செய்திருக்கிறார்கள்.