ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2017

நில நடுக்கம் வருகிறது என்றால் பூமியின் அதிர்வை நுகர்ந்து எலி எறும்புகள் பாதுகாப்பாக வெளியில் வந்துவிடுகின்றது – அதிலிருந்தெல்லாம் வளர்ச்சியாகி மனிதனாக நாம் வந்தாலும் நுகர்ந்து அதை அறிய முடியவில்லை

அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதர்களோ அவன் மற்ற மிருகங்களைக் கண்டு அஞ்சி குகையில் வாழ்ந்தார்கள்.

பகலிலே மிருகங்கள் ஒதுங்கி நிற்கின்றது. இரவிலே இரை தேடி வருகின்றது. தன் உடலுக்குள் இருக்கும் நஞ்சின் தன்மை கொண்டு மிருகங்கள் நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றது.

உதாரணமாக
1.பூமிக்குள் வங்கிட்டுக் குடிகொண்டு வாழும் சில  உயிரினங்கள்
2.நிலநடுக்கம் வருகிறதென்றால் முன்னாடியே அறிந்து வெளி வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் மழை வருகிறதென்றால் அந்த உணர்வுகளை நுகர்ந்து எறும்புகளும் எலிகளும் இடம் விட்டு இடம் மாறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுகின்றது.

ஏனென்றால் அவைகளுக்கு அறியும் அறிவு ஜாஸ்தி உண்டு.

1.தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஊடுருவும் சக்தியால் கவர்ந்து
3.அந்த நுண்ணிய உணர்வின் அணுக்களை
4.இது தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

ஆகவே அது தன்னை அறிந்து செயல்படுகின்றது.

இன்று விஞ்ஞானியோ சாதாரண எலக்ட்ரிக் என்ற நிலைகளை வைத்து எலக்ட்ரான் என்ற நிலையை  மாற்றுகின்றான்.

விஷம் கொண்ட உணர்ச்சிகளை ஊட்டும் அல்லது கவரும் தன் உணர்வின் அதிர்வுகளை வெளிப்படுத்தும் உணர்வுகளை அது அதிர்வுகளுக்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கத்தை மனிதன் கண்டுணர்ந்தான்.

1.ஒலி நாடாக்களில் பதிவு செய்து
2.அந்த நாடாக்களில் தட்டெழுத்துகளில் எழுதுவது போலத் தட்டினால்
3.அந்த உணர்வின் அதிர்வுக்கொப்ப அதனுடைய செயலாக்கங்கள் எலக்ட்ரானிக்காக மாற்றி
4.இவன் எண்ணும் உணர்வுகளைக் கணக்கிடுகின்றது. உருவமாக்குகின்றது.
5.எத்தனையோ வேலைகளைச் செய்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இவ்வாறு செய்வதை இன்று பார்க்கின்றோம்.

இதே போன்றுதான் (நாம்) நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனின் ரூபங்களை உயிர் அமைக்கின்றது.

உயிர் எலெக்ட்ரிக்காக இருந்தாலும் தனக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்போகும் போது உயிர் நுகர்ந்ததை (அந்த) உணர்வுகொப்ப ரூபங்களை மாற்றுகின்றது.

எதிர் நிலைகள் காணும் போது அதிலிருந்து வரும் நுண்ணிய அணுக்களையும் மற்ற உயிரினங்கள் காணுகின்றது. ஆனால் இதை எல்லாம் கடந்து வந்த நாம் மனிதன் இருக்கும் (ஒரே) இடத்தில் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் தன் மணத்தால் நுகர்ந்தறிகின்றது.
1.இரையைத் தேடி எண்ணித் தன் மூச்சலைகளை விடும் போது
2.வெகு தொலைவில் இருக்கும் மணத்தையும் கவர்கின்றது.
3.கவர்ந்ததைத் தனக்குள் இருக்கும் விஷத்தால் மோதும் போது
4.அருகிலே வெளிச்சம் தெரிகின்றது
5.அப்பொழுது அதற்குத் தான் போகும் பாதையும் தெரிகின்றது.

அது இருக்கும் இடங்களில் மற்ற உயிரினங்களுக்குக் கண்கள் தெரியும். தன் அருகிலே ஒளி மோதும் போது அந்த வெளிச்சம் வருகின்றது. தன் உணர்வுகளில் அதை அறிகிறது. அதன் வழி அங்கே செல்லுகின்றது.

விஞ்ஞானி இருளுக்குள் இருப்பதையும்...” படமாக எடுக்கின்றான். இன்று நாம் பார்க்கின்றோம்,

மற்ற உயிர் இனங்களுக்கு மோதலில் எப்படி வெளிச்சம் வருகின்றதோ அதே போல் விஷத்தின் தன்மை கொண்டு அவன் கேமராவில் நிறுத்தப்படும் போது இந்த ஒலி அதிர்வுகள் எதைக் குறி வைக்கின்றானோ படமாக எடுக்க முடிகின்றது.

1.அந்த உணர்வின் அதிர்வினைப் பாய்ச்சி
2.எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கதிரியக்கப் பொறிகளை வைத்து
3.உணர்ச்சிகளை ஊடுருவச் செய்யும் போது
4.மோதும் உணர்வுகளை வடிவமைத்துக் கொடுக்கின்றது.

பூமியின் அதிர்வை வைத்து பூமிக்குள் வாழும் உயிரினங்கள் நிலநடுக்கத்தை அறிவது போல பல கோடிச் சரீரங்களில் நாம் எப்படி மாறி மாறி வந்தோம் என்ற உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் பல நவீனக் கருவிகளைக் கண்டுபிடித்தாலும் தன் ஆசையின் நிமித்தம் செயல்படும் பொழுது மெய்யை அறியும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

புகழுக்கும் பேருக்கும் இந்த உடலின் இச்சைக்குத்தான் கொண்டு செல்கின்றார்களே தவிர உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று ஞானிகள் சொன்ன நிலைகளை அறிய முடியவில்லை.

மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மை அறியும்படி செய்தார். அந்த ஆற்றல்களையும் எம்மைப் பெறச் செய்தார். அவைகளை என்னாலும் அறிய முடிந்தது.

அந்த உண்மைகளைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.