ஒரு நூலாம்படைப்
பூச்சி அது மற்றதை உணவாக உட் கொண்டாலும் அதனுடைய மலத்தை நூலைப் போல அது
உருவாக்கித் தனக்கென்று ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளுகின்றது.
நூலாம்படையாக அமைத்துக்
கொண்ட பின் மற்ற பூச்சிகள் அதன் மேல் படுகின்றதோ அதற்குள் ஒட்டிக் கொள்கின்றது.
தன் இரைக்காக வேண்டி அதை எடுத்துக் கொள்கின்றது.
இதைப் போலத்தான்
விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் (உதாரணமாகப் பருத்திச் செடி)
தன்மையைக் கவர்ந்து அந்த ஜீவ அணு அந்தச் செடியின் சத்தை மலமாக நூலாம்படை போல்
ஆகின்றது.
நூலாம்படை எவ்வளவு
அழகான நிலைகள் அந்த (தன்) வீடு கட்டுகின்றதோ இதைப் போல
1.இந்த உடலுக்குள்
வந்து அது சுற்றிச் சுற்றி
2.அந்த அணுக்கள்
பலவும் சேர்த்து
3.இந்த உடலை
உருண்டையாக மாற்றுகின்றது. புழுவாக உருவாகின்றது.
அப்போது அந்த உணர்வின்
சத்தை உடலாக்கப்படும்போது அது தான் ஜீவ அணு என்பது.
பருத்திச் செடி தன்
மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதன் உணர்வால் தனக்குள் அது எடுத்துப்
பஞ்சை உருவாக்குகின்றது. அதிலிருந்து பிரித்தால் சிறு சிறு நூல்களாக இருக்கும்,
இதைப் போன்று
நூலைப்போல பாய்ச்சியபின்
1.பருத்திச் செடியில்
வீழ்ந்த ஓர் உயிரணு
2.இது உறையும் இடம்
உடலாக மாறுகின்றது.
3.அதாவது பருத்திச்
செடியில் உருவாகும் புழு இப்படித்தான் உருவாகின்றது.
இப்போது மனிதர்களாக
இருக்கும் நம் உடலில் நரம்பாக இருக்கின்றது.
இதைப் போல நூலாம்படைப் பூச்சி என்ற
நிலைகள் வரப்படும் போது அந்த நூலாம்படையில் ஒரு ஈ பட்டால் அதைத் தேடி வந்து அது
உணவாகப் புசிக்கின்றது.
அல்லது தனது
உணவுக்குப் போக மீதியை அந்த ஈயையோ மற்றது மேலே அது சுற்றிச் சுற்றிச் சுற்றி அது
உருவாக்கிவிடுகின்றது.
பின் அதற்குள் அந்த
ஈயின் உயிரணு சிக்கி அந்த ஈயின் உயிரான்மா கரைந்து இந்த நூலாம்படைப் பூச்சி போன்ற
எட்டு கால் பூச்சியைப் போன்று அது உருப்பெறுகின்றது.
அது வெளிப்பட்டபின்
இதனின் உணர்வு அதற்குள் கலந்து அதனின் செயல் எதுவோ அதைப் போன்று அது
செயல்படுகின்றது.
இதைப் போன்று தான்
பருத்திச் செடியின் இலையின் ரூபம் எவ்வாறோ பருத்திச் செடியில் விழுகும் உயிரணு அது
சுவாசித்து அது வெளியிடும் மலம் அதற்குள் சிக்கி சுவாசிக்கும் உணர்வுகள் பூராம்
கரு உருவாகி அதுகள் இனமாகி இதைப்போல உடலில் உறுப்புகளை மாற்றுகின்றது.
இதைப் போலத்தான் நாம்
புழுவிலிருந்து மனிதனாக நாம் வரும் வரையிலும்
1.பல கோடிச் சரீரங்கள்
பெற்று
2.அந்த உயிரணு ஒவ்வொரு
சரீரத்திலும் தான் சுவாசித்த உணர்விற்கொப்ப ஜீவ அணுக்களாகி
3.அதனின் மலம் தசைகளாகி
உடலாகி உறுப்புகள் வளர்ச்சியானது.
இதெல்லாம் இயற்கையில்
சில நியதிகள்.
இதையெல்லாம் நாம்
அறிந்து கொள்வதற்குத் தான் அந்த ஞானிகள் தான் கண்டுணர்ந்த நிலையைத் தன் இன மக்கள்
அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் உயிரணு தோன்றி உடல் பெற்ற நாளைச் “சிவன்
ராத்திரி” என்று காட்டினார்கள்.
உயிரணு பூமிக்குள்
வந்த பின் எந்தத் தாவர இனச்சத்தில் அது படுகின்றதோ அதனின் சத்தை அது உணவாக உட்கொள்கின்றது.
உட்கொள்ளும் போது
1.இந்த உயிரணுவின் ஒளி
மின் அணு உள் மூடி
2.பின் தான் கவரும்
ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் அது ஜீவ அணுவாக்கி
3.அது மின்னச்
செய்கின்றது. (அந்த உடலுக்குள் தான்)
4.ஆகவே இதைத்தான் “சிவன்
ராத்திரி” என்று காட்டினார்கள்.
நமது உயிரணு இந்தப்
பூமிக்குள் வந்த பின் உடல் பெற்ற நாள் என்ற நிலையை அறிவிப்பதற்குத் தான் சிவன்
ராத்திரி என்றனர் ஞானியர்.