நாம்
யாரும் தவறு செய்யல்லை.
இருப்பினும்
நாம் நம் தாய் கருவிலே வளரப்படும் போது தாய் பாசத்தால் பரிவால் அன்பால் தனது
வாழ்க்கைத் தொடரில்
1.பிறர்
செய்யும் தீமைகளைக் கண்டுணர்ந்திருந்தால்
2.அந்த
உணர்வின் ஆற்றல் தாய் கருவுக்குள்ளே வளர்ந்து வரும் சிசுக்களில்
3.(நமக்குள்)
இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.
4.அவ்வாறு
பதிவாகியதைத் தான் பூர்வ புண்ணியம் என்பது,
தாய்
கேட்டுணர்ந்த உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாக அமைந்து விடுகிறது.
இவ்வாறு
தாயின் கருவிலே நாம் வளரும் பருவத்தில் தாயால் உலகை அறிந்து தீமைகளைத் தீமைகள்
என்று உணரப்படும் போது அந்தத் தீமையின் உணர்வே கருவில் இருக்கக்கூடிய
குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.
கருவுற்றிருக்கும்
போது ஒரு ஊனமுற்ற குழந்தையைத் தாய் உற்று நோக்கினால்
1.அந்த
ஊனமுற்ற உணர்வுகள் கருவிலே சேர்ந்து
2.கருவிலிருக்கும்
குழந்தயை ஊனமாக மாற்றிவிடுகிறது.
அதே போல்
சில வித்தியாசமான குழந்தைகளைப் பற்றி அங்கே இப்படி இவ்வாறெல்லாம் நடந்தது என்று
பத்திரிக்கை வாயிலாகப் படித்ததை “ஒரு ஒட்டுக் குழந்தை… பிறந்தது…” என்று பேசிக்
கொள்வார்கள்.
ஒட்டுக்
குழந்தையைப் பற்றி இவ்வாறு அவர்கள் பேசிக் கொள்வதைக் கர்ப்பமாக இருக்கும் தாய்
உன்னிப்பாகக் கூர்மையாகக் கேட்டுணர்ந்தாலே போதுமானது.
அந்தக்
குழந்தை தாயின் கருவிலே சில நிலைகள் உருமாறி இதுவே ஒட்டுக் குழந்தைகளாகப் பிறந்து
விடுகிறது. தாயின் கருவிலே விளையும் நிலைகள் தான் இது.
இதைப் போல
சில சில நிகழ்ச்சிகளைத் தாய் கர்ப்பமாக இருக்கும் போது கேட்டுணர்ந்த நிலைகள் தான்
குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அப்படித்தான் நாம் அனைவருமே வந்துள்ளோம்.
தாயின்
கருவிலே இருக்கப்படும்போது ஞானிகளை உற்று நோக்கி
1.ஞானிகளின்
அருள் உணர்வுகளுக்கு ஏங்கி இருந்தால்
2.அந்த
உணர்வுகள் தாயின் கருவிலே இருக்கும் குழந்தைக்கு இணைந்து
3.அது
ஞானியாக வளர்கின்றது.
திருஞானசம்பந்தர்
போன்ற ஏனைய ஞானிகள் எத்தனையோ பேர் குழந்தைப் பருவத்தில் இது போல் ஞானிகளாக
வந்தவர்கள் தான். இது எல்லாம் தாய் கருவிலே வளர்ந்தது தான்.
குடும்பத்தில்
செல்வமும் செல்வாக்குடனும் இருப்பினும் பண்டைய காலத்தில் ஒன்று சேர்ந்து வாழ்ந்த
குடும்பங்களில் ஒருவருக்கொருவர் குறைபாடுகள் பற்றி பாகப் பிரிவினையிலோ வாழ்ந்த
காலத்தில் சற்று ஒற்றுமையில் பிசகாகி ஒருவருக்கொருவர் சாபமிட்டால் சாப வினைகள்
குழந்தைக் கருவிலேயே பதிவாகி விடுகிறது.
அந்த
உணர்வுகள் வழி தொடந்து இப்போது நம் உடலிலும் பின் தொடர்ந்தே வருகிறது.
1.ஒட்டுக்
குழந்தைகளாகப் பிறப்பது போல
2.ஒட்டு
மரங்களை வளர்ப்பது போலத்தான்
3.சாப
வினைகள் நமக்குள் ஒட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு
4.தீமைகளாக
நமக்குள் விளைந்து வருவதும் உண்டு.
நாம்
பிழைகள் செய்யவில்லை என்றாலும் பக்தியில் பல நன்மைகள் செய்தாலும் பிறர் செய்யும்
தீமைகளைக் கேட்டறியும் போது அவர் உடலிலே விளைந்த தீமைகள் நமக்குள் ஒட்டி
விடுகின்றது.
1.அது
ஒட்டுச் செடி போன்றே விளைந்து விடுகின்றது.
2.நம் நல்ல
குணங்களுடன் தீய குணங்கள் ஒட்டிக் கொள்கிறது.
இதைப்
போன்ற தீயவினைகளை நீக்கத் தான் இந்த உபதேச வாயிலாக துருவ நட்சத்திரத்தைப்
பற்றியும் அந்த மகரிஷிகளைப் பற்றியும் உங்களுக்குள் பதிவாக்கி ஒட்ட வைக்கின்றோம்.
மகரிஷிகளும்
மகான்களும் தீய வினைகளை அகற்றும் உணர்வினைத் தனக்குள் ஒட்ட வைத்து அப்படி ஒட்டிய
வலுவாகத் தீய வினைகளை ஒடுக்கி தீயவினைகளை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சிகரமாக
மகாமகம் போன்று விளைந்து சப்தரிஷி
மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.
மகா மகமாக
விளைந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் விளைவித்துக் கொண்டால்
1.நமக்குள்ளும்
அந்தப் பேரருள் உணர்வுகள்
2.மகா
மகமாகப் பொங்கி வழியும் நிலைகள் வருகின்றது
3.மகரிஷிகள்
சென்ற இடத்தை நாமும் அடைகின்றோம்.
4.அழியாத
நிலைகள் அடைகின்றோம்.