மகரிஷிகளின்
உடல்களில் விளைந்த உணர்வுகள் விளைய வைத்த உணர்வின் வித்துக்கள் இன்றும் நமக்கு
முன் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.
அதனை நாம்
எல்லோரும் எளிதில் பெற முடியும்.
ஆனால்
உங்களுக்குக் கதையாக ஏதோ வேடிக்கையாகச் சொல்லி “சாமி பெரியவர்…!” என்று என்னைப்
புகழ்ந்து விட்டுப் போவதற்கு இல்லை.
சாமிக்கு
என்ன…?
1.அவருக்கு
அவர் குருநாதர் கொடுத்தார்
2.அந்தச்
சக்தி நமக்கு யார் கொடுப்பார்கள்? என்று எண்ண வேண்டாம்.
எனக்குள்
குரு உபதேசித்தார்.
1.அவரை
உற்றுப் பார்த்தேன்.
2.அவரின்
உணர்வை ஆழமாகப் பதிவாக்கினேன்.
3.அவர்
உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தேன்.
4.மீண்டும்
நான் குருவை நினைவு கொண்டேன்.
எதை?
குருநாதர்
பதிய வைத்த உணர்வை மீண்டும் எண்ணும் போதுதான் அவர் கற்றுணர்ந்த உணர்வின் சத்தும்
அவருக்குள் விளைய வைத்த நிலையும் அவர் அறியாது தீமைகளை நீக்கிய நிலையும் எனக்குள்
வருகின்றது.
அவரை
நினைக்கும்போது அந்த உணர்வுகள் எனக்குள் அது கவரும் நிலை வருகின்றது.
அந்தப்
பாதை தெரியவேண்டும் அல்லவா…!
1.மின்
அணுவின் – உயிரணுவின் தோற்றமும்
2.உணர்வின்
இயக்கங்களும் எவ்வாறு? என்ற நிலையை
அவர் உபதேச
வாயிலாக எனக்குத் தெளிவுற உணர்த்தினார்.
உபதேசத்தின்
உணர்வின் அருளை அவர் காட்டிய உணர்வினை இன்று யாம் பேசுவதை
ஒன்றும் அறியாத “MIC…” காந்தப் புலனில் பூசிய முலாம்கள் இந்த உணர்வின் தன்மைகளைப்
பதிவாக்கி
1.மீண்டும்
காந்த ஊசியை இணைத்த பின் 2.திருப்பி நமக்குப் பதில் சொல்கின்றது விஞ்ஞான அறிவு.
நாம் இதைப்
பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் நினைவில் கொண்டு வர வேண்டும்
என்றும் விஞ்ஞான அறிவால் கண்டுணர்த்தப்பட்ட நிலைகள்தான் இப்போது பதிவு.
MIC மூலமாக
யாம் பேசுவதை பல மடங்கு (AMPLIFIER) பெருக்கி ஆயிரம் பேர் இருந்தாலும் தெளிந்த
நிலைகள் கேட்கும் நிலைகளுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ளது.
இதைப்
போலத் தான் அகண்ட அண்டத்தின் நிலைகளுக்குள் நுண்ணிய அலைகளாக மறைந்த நிலைகள்
இருந்தாலும் அதனின் உணர்வின் அதிர்வின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவர்கள்
மெய்ஞானிகள்.
கண்டுணர்ந்து
அதற்குள் மறைந்த நஞ்சினை ஒடுக்கி நஞ்சினை ஒடுக்கும் உணர்வாக ஒளியின் சுடராகத்
தனக்குள் விளைய வைத்தது மெய் ஞானிகள்.
அவர்கள்
கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் போது மீண்டும் நினைவு
கொள்ளுங்கள்.
1.நீங்கள்
ஒன்றும் செய்ய வேண்டாம்.
2.பதிவு
செய்து கொண்டால் மட்டும் போதும்.
(அது என்ன
கேட்டுக் கொண்டா இருக்கிறது…?)
மரம் செடி
கொடி தன் உணர்வுக்குள் பதிவு செய்த பின் தன் மணத்தின் தன்மை கொண்டு காற்றில்
இருப்பதைத் தன் மணத்தால் எடுத்துத் தன்னைப் பாதுகாத்து கொள்கிறது.
தன் இனமான
உணர்வின் தன்மையைக் காற்றில் இருந்து தன் உணவாக நுகர்ந்து அதை உட் கொள்கின்றது.
அதற்கு
அறிவில்லையா? அதனில் தோன்றிய உணர்வின் அறிவுதான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.
எந்தக்
குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றமோ அதில் உருவான உணர்வுகள் அதனின் அறிவின்
ஞானமாக நமக்குள் வருகின்றது.
அதைப்
போன்று தான் நமக்கு மெய் ஞானிகளைப் பற்றியோ மகரிஷிகளைப் பற்றியோ ஒன்றும்
தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.
குருநாதர்
காட்டிய அருள் வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த ஞானிகளின் (ஞான வித்தை)
உணர்வுகளைப் படித்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டேயிருந்தால் போதும்.
இது
உங்களுக்குள் விளைந்து அந்த ஞானிகளின் செயலாக உங்களை மாற்றும்.