எத்தனையோ
கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று
நினைப்பார்கள்.
அவ்வாறு
நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று
எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.
என் பையன்
சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா
தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும்
என்பார்கள்.
இவர்
கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம்
எடுத்துக் கொள்வார்.
முதலில்
இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக
இருக்கின்றார்.
இவர்
நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல
ஆரம்பிக்கின்றார்கள்.
ஏனென்றால்
இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய
உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?
உடலில்
இல்லாத வலியெல்லாம் வரும். இடுப்பு வலிக்கிறது, மேல் வலிக்கின்றது தலை
வலிக்கின்றது. சர்க்கரைச் சத்து வந்து விட்டது. இரத்தக் கொதிப்பு வந்து விட்டது
என்பார்கள்.
ஏனென்றால்
தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக்
கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்து விடும்.
1.நாம்
சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான
இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.
தவறே
செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.
நல்ல
மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில்
கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப்
போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.
1.பின்னர்
இருதயம் படபடா.. படபடா… என்று வரும்.
2.அத்தனை
பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப்
பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த
உணர்வு படபடா… என்று வரும்.
கடைசியில்
இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச்
சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள். அவர்
தவறு செய்யவில்லை.
1.செல்வம்
இருக்கிறது.
2.ஆனால்
அமைதி இருக்கின்றதோ…?
பிறருடைய
உணர்வுகள் இவ்வாறு நமக்குள் தோஷமாக வந்து விடுகின்றது.
இதே
மாதிரி… சில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறக்கின்றது. பெண் குழந்தைகள் பிறந்த
பிற்பாடு இன்றைக்கு இருக்கின்ற காலத்தில் தாய் தகப்பனுக்கு நிம்மதி இல்லை.
தாய்
தகப்பனுக்கு நாம் என்ன கடமை செய்ய வேண்டும்? அது தெரியவில்லை. தாயினுடைய உண்மையை
உணர முடியவில்லை.
இன்றைக்குப்
பெண்கள் பிறந்த குடும்பங்கள் எல்லாம் மிகவும் அல்லல்படுகின்றார்கள்.
கடவுளாக
இருந்து நம்மை உருவாக்கிய தாய் நம் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கின்றார்கள்?
நாம் அதை மதிக்கின்றோமா…!
அவர் நம்
மீது அந்தப் பாசத்திற்குத் தகுந்தபடி
1.நாம்
எண்ணியது நமக்குள் நடக்க வேண்டும்
2.நம் தாய்
எண்ணியது எனக்குள் நடக்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த
சக்தி நமக்குள் உருவாகும்.
நாம்
யாராவது இப்படி எண்ணுகின்றோமா?
தான்
எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “நான்… வாழ வேண்டும்” என்று
1.தாயை
அதன் வழியே கொண்டு வர வேண்டும் என்று
2.நினைத்தோம்
என்றால் அது தவறான வழி ஆகும்.
3.இப்படி
நிறையப் பேர் உண்டு (மகனும் சரி பிள்ளையும் சரி)
தன்
உணர்வின் ஆசைக்கு அந்த இணக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக
1.நம்மை
ஈன்று மனிதனாக உருவாக்கிய அந்தக் கடவுளையே
2.நம்மைக்
காப்பாற்றிய அந்தத் தெய்வத்தையே
3.நமக்கு
நல்லது சொன்ன குருவையே
4.மனதை
நோகும்படிச் செய்கின்றோம்.
இதையெல்லாம்
சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்றைய
உலகில் ஒவ்வொரு வீட்டிலும் அமைதி இருக்கின்றதா? சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல
முடிகிறதா…!
ஆகவே
இப்படிப் பல வகைகளிலும் வரும் தோஷங்களெல்லாம் நமக்குள் சேர்ந்த பிற்பாடு உடலில்
நோய் வந்துவிடுகின்றது, நம் நல்ல அணுக்களை எல்லாம் அது கொன்று சாப்பிடுகின்றது.
இதை யார்
மாற்றுவது? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.
அதே
சமயத்தில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்து முடிப்பதற்கு முன்னால்
அந்தத் தாய் படுகின்ற அவஸ்தையோ
1.வயதாகிப்
போகின்றதே… வயதாகிப் போகின்றதே… என்று எண்ணுவார்கள்
2.இன்ன
வயதாகிப் போனால் அந்த வயதிற்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமே என்று
3.தாய்
எண்ணி எண்ணி எண்ணிப் பிள்ளைகளை நினைத்து நினைத்து வேதனைப்படுகிறது,
பிள்ளையைப்
பார்க்கும் போதேல்லாம் இந்த வேதனை உண்டாகின்றது.
ஆனால்
அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை வர வேண்டும். நல்லது வர வேண்டும் என்று நினைக்கின்றதா
என்றால் தாய் நினைக்கவில்லை.
ஆசை
இருக்கிறது. வேதனை எடுத்து அதைத் தனக்குள் எடுத்து வேதனையான உணர்ச்சியைச் சொல்லி
அந்தக் குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வேதனை வருகின்றது.
இவ்வாறு
அந்த வேதனை விஷம் என்ற நிலைகள் பட்டால் நினைவென்ற நிலைகள் இழுக்கப்பட்டு
1.தாயை
நினைத்து அந்த வேதனையை எடுக்கின்றோம்
2.அது
அறியாமையாக வந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.
குழந்தையை
மட்டும் சொல்வதற்கு இல்லை.
தாயின்
ஆசைகள் “இப்படி நடக்கின்றதே… நாளைக்கு என்ன ஆகப் போகின்றதோ…!” என்ற இந்த வேதனையைச்
சுவாசிக்கின்றது,
குழந்தையை
எண்ணி வேதனையை உருவாக்குகின்றது. இந்த உள் உணர்வின் தன்மை சொல்லாகப் போகும் போது
என்ன செய்கின்றது?
ஏனென்றால்
ஒரு நெருப்பில் பாத்திரத்தை வைத்து பதார்த்தத்தைப் போடுகின்றோம். பல பொருட்களைச்
சேர்த்து வேக வைக்கின்றோம். நாம் போடுகின்ற பொருளுக்குத் தக்கவாறு தான் அதிலே ருசி
வருகின்றது.
ஏனென்றால்
நம் உயிர் ஒரு நெருப்பு. நம் குழந்தை மேலே ஆசையாக இருக்கின்றோம். ஆனால் “சீக்கிரம்
திருமணம் ஆகவில்லையே…” என்கிறபோது அது வேதனை.
அதில்
கொஞ்சம் கொஞ்சமாகச் சரக்குகளைச் சேர்த்து இந்த வேதனை உணர்வை உருவாக்கி இந்த
உணர்வின் தன்மை உமிழ் நீராக்கி நம் உடலுக்குள் வளர்த்து இந்த உணர்வைச் சொல்லாக்கி
வெளியில் சொல்லப் போகும் போது என்ன செய்கின்றது?
இந்தப்
பிள்ளையைப் பார்க்கும் பொழுது எல்லாம் அந்த வெறுப்பு வருகிறது. “இப்படி
ஆகின்றதே….” அந்த வேதனை வருகின்றது. வேதனையான உணர்வு வரப்போகும் பொழுது
குழந்தைகளுக்கு என்னவாகும்?
தாய்
பார்க்கும் பொழுது இந்த மாதிரி இருக்கின்றதே என்று அவர்கள் வாயிலேயே தன்
பிள்ளையிடம் சொல்லுகின்றது. அதை வாங்கி அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
இன்னும்
கொஞ்சம் மோசமாகின்றது.
நமது
அறியாத நிலைகள் நமக்குள் எந்த நிலையைச் செய்கின்றது? “இதெல்லாம் ஒரு தோஷம் தான்”.
இந்தத்
தோஷங்களை நீக்கும் வழி என்ன? என்பதைத்தான் சிவன் ஆலயத்தில் தெளிவாகக்
காட்டுகின்றனர். சிவன் ஆலயத்தில் சிவனுக்கு முன்பு நந்தியை வைத்துக்
காட்டியுள்ளார்கள்.
நந்தீஸ்வரன்
சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. வாழ்க்கையில் பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்கும்
பொழுதெல்லாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
என்ற “இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்”.
ஏனென்றால்
அந்த மகரிஷிகள் இதைப் போன்ற தோஷங்களை எல்லாம் நீக்கி நஞ்சை அடக்கி உணர்வின்
தன்மை ஒளியாக மாற்றிப் பழகியவர்கள்.
அந்த
மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்தால் நமக்குள் வரும் பேரிருளை நீக்கிப் பேரொளியாக
மாற்றும்.
1.நம்
காரியங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற
2.அந்தத்
தெளிவான ஞானங்கள் வரும்.
செய்து
பாருங்கள்.