ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 9, 2017

“பதினெட்டாம் படி” – ஐயப்பனின் தத்துவம்

ஐயப்பன் கோவிலில் பார்த்தால் “நீ தள்ளு… நான் தள்ளு…” என்று தள்ளிக் கொண்டு செல்வார்கள்.  

எல்லோரும் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவார்கள். அந்தப் பதினெட்டாம் படி வந்ததும் “சரணம் ஐயப்பா” என்று அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவார்கள்.

அந்தப் பக்தி எப்படிப் போகிறது?

அந்த ஐயப்பன் என்ன செய்தார்? அவர் அரசனாக இருக்கும் போது அஷ்ட திக்கின் தன்மையும் தவறின் உணர்விலே வாழ்ந்து விட்டோம். அதனால்
1.இங்கே வரும் மக்கள் அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான்
2.பதினெட்டுப் படிகள் வைத்து அமைதியும் பொறுப்பும் காத்து பத்தாவது நிலையான ஒளிச் சரீரம் அடையும் நிலைகளில்
3..ஒவ்வொரு படியிலும் அந்த நல்ல நிலைகளை எடுத்து வைத்து நிதானம் கொண்டு
4.அடுத்தவர்களை அரவணைத்துச் செல்லும் பொறுமையும் வர வேண்டும் என்று விரும்பினார்.

படி மேல் ஏறும் போது பாருங்கள். நீ தள்ளு நான் தள்ளு என்ற வேக உணர்வுகள் தான் வருகின்றது. அப்புறம் ஐயப்பன் கோவிலுக்குப் போய் என்ன செய்வது? கோவிலுக்கு எதற்காகப் போகிறோம்?

அவர் அரசனாக இருந்தான். அருள் உணர்வு பெருக வேண்டும் என்று எண்ணினார். அதை வளர்த்தார்.

அங்கே போவோர் நிலைகளைப் பாருங்கள். அங்கே மேல் ஏறினார்கள். அந்தப் படி மேல் ஏறினான் அது விழுந்தது இது விழுந்தது என்று பேசுகிறார்கள்.

இங்கிருந்து பஸ்ஸிலோ காரிலோ அங்கே செல்லப்படும் போது என்ன செய்கிறார்கள்?
1.சிந்தித்துச் செயல்படுத்தித் தன்னுடைய வேகத்தை குறைத்துப் போகலாம்
2.“சரணம் ஐயப்பா...” என்றவுடன் “ஜர்”....என்று போக வேண்டியது. அப்புறம் போய் ஆகிசிடென்ட் ஆகின்றது
3.நாம் விபத்துக்குள்ளாவதற்காக வேண்டியா அங்கே போகிறோம்.
4.நாம் சிந்தித்துச் செயல்படும் பொறுமையைக் கையாள வேண்டும்.

அன்று ஐயப்பன் அரசனாக இருந்தாலும் பல தொல்லைகள் பட்டோமென்று முகம்மதியர் படை வரும் போது அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் அவர் அந்த நிலை அடைந்தார்.

கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி பெற்றவர் ஐயப்பன்.

போர் முறையில் பல திறமைகளைக் கற்றுக் கொண்டாலும்  ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்து கொண்டபின் இந்த உடலை அழித்து விடுவார்களோ என்ற நிலையில் இன்னொரு உடலுக்குள் சென்றார்.

இன்னொரு குழந்தையின் உடலிலே புகுந்து யாரென்று அறிந்து கொள்ளாத நிலையில் ஒரு அரசனிடம் இந்தக் குழந்தை வளர்க்கப்பட்டு அதன் வழி மீண்டும் அவர் சக்தியைத் திறமையாக்கி விஷத் தன்மை கொண்ட புலியையும் அடக்க முடியும் என்று காட்டினார், அந்த அரசனுக்கும் புகழ் தேடும் நிலைகள் வந்தது.

இதன் வழி கொண்டு தான் அவர் வாழ்க்கையில் வளரப்படும் போது காட்டில் விலங்குகள் வாழும் அந்த இடத்தில் ஒதுங்கி நின்றார்.

மக்கள் வாழ்க்கையில் இன்று விலங்கினங்களைப் போன்று தான் வாழுகின்றோம். காட்டில் விலங்கினங்கள் அவற்றிற்குத் தீங்கு ஏற்பட்டால் தான் தீங்கு செய்யும்.

இன்று மனிதர்களுக்குச் சிந்தித்து செயல்படும் நிலைகள் இல்லாது மற்றவரைத் துன்புறுத்தும் நிலைகள் தான் வருகிறது. விலங்கினங்களையும் மீறி விட்டது
1.துன்பப்படுபவனைப் பார்த்து ரசிக்கிறார்கள்.
2..துன்பப்படுத்துபவனுடைய நிலைகள் தான் தப்பிக்கின்றது.
3.துன்பப்படுத்தி ரசிக்கும் மக்கள் கொள்ளையடிப்பதும் துன்புறுத்துவதும் என்ற நிலைக்கு இன்று பெரும் பகுதியான நிலைகளில் வந்துவிட்டார்கள்.  

ஒரு காம்பவுண்டில் குடியிருந்தார்கள் என்றால் ஒருத்தருக்கு ஒருத்தர் பழி சொல்லிக் குறைச் சொல்லித்தான் வாழ்கிறார்கள்.

காட்டிற்குள் கூட அமைதி உண்டு. ஆனால் நாட்டிற்குள் இன்று அமைதி இழந்து விட்டது என்ற நிலையைக் குருநாதர் காட்டினார்.
  
போர் முறையில் நான் (ஐயப்பன்) என்னுடைய சக்தியைத் தான் நிலை நாட்ட முடிந்தது. முகமதியர்கள் படையெடுத்து வரும் போது அவர்களை மாற்ற முடியவில்லை. அவர்களிடம் ஒளிந்து வாழும் தன்மை தான் வருகிறது.

இன்றைக்கும் பாருங்கள். வாபர் மசூதியில் முஸ்லீம்கள் கன்னிச் சாமிகள் இதற்கு மேல் சாமி கும்பிடப் போனால் கரும் புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கன்னிச்சாமி எல்லோரும் அப்படித்தான் போகவேண்டும் என்று சொல்வார்கள்.

நம் ஊர்களில் முச் சந்திகளில் உள்ள கோவில்களைக் கட்டி வைத்திருப்பார்கள். மேள வாத்தியம் வாசித்துக் கொண்டு போகும் போது வாலை  ஒடுக்கிப் போங்கள் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் அன்றைய அரசர்கள் ஆட்சிக் காலத்தில் நடந்தது தான் இன்றும் நடக்கிறது. கன்னிச் சாமிகளுக்குக் கரும் புள்ளி செம்புள்ளி குத்தி வைத்திருப்பார்கள்.

அதில் உள்ள உண்மையையாவது தெரிந்து போகிறார்களா என்றால் இல்லை.

ஆனால் அன்று ஐயப்பன் அரசனுடைய நிலைகளைத் தான் எதைச்  செய்ய வேண்டுமோ இந்த உடலின் தன்மை கொண்டு அவர் தன்னுடைய உயிராத்மாவை ஒளியாக்கிச் சொர்க்கம் அடைந்தார். துருவ நட்சத்திரத்தின் மேலே சொர்க்கத்தில் இருக்கிறார்.

ஐயப்பன் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை வரப்படும் போது உடலின் இச்சையை மறந்து எந்த உயர்ந்த உணர்வை மக்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தாரோ அதைத்தான் பதினெட்டாம் படியாக அமைத்தார்.

மக்கள் ஒன்று பட்ட நிலையில் – பதினெட்டாம் படி அந்த ஒடுக்கமான நிலைகள் வர வேண்டும் என்று பத்தாம் நிலை அடைய வேண்டும் என்றால் அஷ்ட திக்கிலும் நாம் நிதானமும் பொறுப்பும் பொறுமையும் கொண்டு எப்படி வாழ வேண்டும் என்று அந்த ஆலயத்தின் பண்பை அமைத்து அந்த ஞானிகள் கொடுத்துள்ளார்.

எத்தனை பேர் நாம் அங்கே பொறுமையாகப் போகிறோம்...?”

“ஐயப்பனைக் கும்பிட்டால் சொத்து வந்துவிடும், அது வந்துவிடும் சரணம் ஐயப்பா” என்று போகிறீர்கள். தவறுகளைத் தான் வளர்க்கின்றோமே தவிர அந்தப் புனித நிலையை அழித்து விடுகிறது.

அதே சமயத்தில் அங்கே இருக்கும் காட்டு விலங்குகளைப் பற்றி  நாம் சிந்திக்கின்றோமா? அந்த ஐயப்பனைப் பற்றிச் சிந்திக்கின்றோம். பயப்படவில்லை அதனால் போகிறோம்.

அதே சமயத்தில் இங்கு தவறு செய்பவரின் நிலைகளில் சிந்தனை இல்லாது அவர்கள் செயல்படுகின்றார்கள். “அவர்கள் நல்லவராகட்டும்…” என்று யாராவது நினைக்கிறோமா?  அது இல்லை.

அங்கே காட்டு விலங்குகளிடம் நாம் பயப்படவில்லை. இங்கே மனிதன் காட்டு விலங்குகளைக் காட்டிலும் மோசமாக உள்ளான். இவனைக் கண்டு அஞ்சி வாழ வேண்டியிருக்கின்றது.

அங்கு போய்விட்டு வந்தபின் இங்கே என்ன செய்வது? என்ற நிலைகளைத் தான் குருநாதர் காட்டுகிறார்.

நம்மைப் பக்குவப்படுத்த அந்த ஞானி அதைச் செய்தாலும் ஐயப்பன் கோவிலுக்குப் போகிறவர்கள் எந்தப் பக்தியுடன் போகிறார்கள்? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

அவர் காட்டிய நிலைகளைச் சீராக நாம் பயன்படுத்துகிறோமா? இல்லை நாம் போனால் ஐயப்பன் நமக்கு இதைச் செய்வார் அதைச் செய்வார் என்ற ஆசை உணர்ச்சிகளைத் தான் தூண்டுகின்றோமே தவிர ஆவேச உணர்வுகளைத் தான் நாம் தூண்டுகின்றோமே தவிர அந்த அருளைப் பெறும் நிலை இல்லை.

இங்கிருந்து போகும் போது ஐயப்பனுக்குக் காசு போடுகிறோம். ஐயப்பனுக்கு நிறைய காசு வந்து விடுகிறது. ஐயப்பனை வணங்கினால் நிறையக் காசு வரும்” என்று எண்ணுகிறார்கள்.

ஐயப்பனுடைய அருளை நாம்  பெற வேண்டும் என்ற உணர்வை நாம் யாரும் தேடுவதில்லை. நீ காசைக் கொடுத்துவிட்டு எனக்கு அருள் கொடு என்று கேட்டு வா என்று தான் செய்கிறார்கள்.

1.அஷ்ட திக்கிலுமிருந்து (எட்டு) வரும் தீமைகளை அகற்றி
2.உயிருடன் சேர்த்து பத்தாவது நிலையாக ஒளியாக
3.கல்கி என்ற நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதற்கே
4.அந்தப் பதினெட்டாம்படி என்ற நிலையை அவர் உருவாக்கினார்.