உங்கள்
வாழ்க்கையில் யாராவது உங்களைக் கேவலமாகப் பேசினால் அதை ஆழமாகப் பதிவு செய்து
வைத்துக் கொள்கிறீர்கள். பதிவு செய்த பின் என்ன செய்கிறோம்?
என்னை..
இப்படிப் பேசினான் “கேவலமாகப் பேசினான்… கேவலமாகப் பேசினான்…!” என்று இதைத்
தியானம் செய்கின்றோம்.
அவர் எப்படிக்
கேவலமாகப் பேசினாரோ அந்த உணர்வு நமக்குள் வந்து அவர் நம்மைக் கேவலப்படுத்திய
பிற்பாடு நம் சொல் செயல் எல்லாமே கேவலமான செயல்களைச் செய்யும் செயலாக மாற்றும்.
எப்படி
இருக்கிறான்..? அவன் என்னை இப்படியெல்லாம் பேசினான்.. என்னைப் பார் நான் என்ன
அப்படியா…? என்று அவன் சொன்ன மாதிரி நம்மையும் பேச வைத்துவிடும்.
1.அவன்
பேசினான் ஒரு தரம்.
2.நாம
கேட்டோம் பல நேரம்.
3.அந்தப்
பல உணர்வு நமக்குள் வந்துவிடுகின்றது.
அவன்
நம்மைக் கேவலப்படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதைப் பற்றி அடுத்து நாம்
பேசும் போதெல்லாம் நம்மையறியாமலே சொல்வோம்.
“பாருங்கள்…!
என்னைப் பற்றி அவன் அப்படிப் பேசினான் இப்படிப் பேசினான் இகழ்ச்சியாகப் பேசினான்..
என்று அடுத்தவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்.
1.அவன்
எபப்டி எப்படி நம்மைத் திட்டிக் காண்பித்தானோ
2அதே
மாதிரி அதையெல்லாம் நாம் அப்படியே செய்வோம்.
என்ன…!
இப்படி… நீங்கள் அசிங்கமாகப் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்?
என்னை
அப்படியெல்லாம் பேசினான் அல்லவா…! என்று இங்கே நம்மிடல் கேட்பவர்களிடம்
சொல்வீர்கள்.
அடுத்தவர்களிடம்
இந்த விஷயத்தைப் பேசும் பொழுது அசிங்கமான நிலைகளை பேசும் உணர்வே நமக்குள் வந்து
விடும்.
இன்னும்
யாராவது அடுத்த ஆள் கேட்டால் நாம் மறுபடியும் அசிங்கமாகப் பேசுவோம். இது குருவாக
வந்து விடுகின்றது.
எது…?
அப்போது
அந்த உணர்வுகள் அசிங்கமாக வரப்போகும் போது இது குருவாக நமக்குள் வந்து அசிங்கமான
செயலைச் செய்ய வைக்கும். அசிங்கமாகப் பேசச் செய்யும்.
அதே
சமயத்தில் இதைப் போன்ற அசிங்கத்தை எல்லாம் துடைப்பதற்கு
1.மகரிஷிகளின்
அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அந்த
உணர்வுகளை நீங்கள் எடுத்துப் பழகிக் கொண்டீர்கள் என்றால்
3.இது
குருவாக வந்து விடும்.
யாம்
உங்களுக்கு உபதேச வாயிலாக உணர்த்தும் அந்த மெய் ஞானிகள் வழியில் இந்தத் தியானத்தை
நீங்கள் அடிக்கடிச் செய்தீர்கள் என்றால் இது குருவாக வந்து இந்த அசிங்கத்தை
எல்லாம் போக்கிவிடும்.
உதாரணமாக
“உடலில் புண் வந்துவிட்டது.. ரோகம் வந்துவிட்டது…” என்று இதையெல்லாம் திரும்பத்
திரும்பச் பேசிக் கொண்டு இருந்தால் அதனாலேயே உடலில் கொப்புளம் வரும்; உடல்
கொதிக்கும்; தலை வலி வரும்; காது குத்தும்; நெஞ்சு வலிக்கும்; வயிற்றில்
வலிக்கும்.
இது
எல்லாம் வரும்.
இப்படி
வரப்போகும்போது வயிற்றில் வலிக்கிறது என்றால் அந்த நேரத்தில் யாராவது முன்னாடி
வந்து சந்தோஷமாகப் பேசினால் எப்படி இருக்கும்?
அவர்கள்
மேலே வெறுப்பாக வந்து கொண்டு இருக்கும்.
அவர்கள்
மேலே வெறுப்பாகி விட்டால் அடுத்தாற்போல் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம்
வெறுப்பாகப் பேசுவோம். அப்பறம் இது குருவாக வரும்.
எது…?
வெறுப்பாகப் பேசும் உணர்வு தான் உங்களுக்குக் குருவாக வரும்.
குருநாதர்
இப்படி மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து “அவர்கள் நிலைமை எல்லாம் எப்படி
இருக்கிறது…?” என்று பார்க்கச் செய்து என்னைக் கஷ்டப்பட வைத்தார்.
1.நீ
பார்ப்பவன் உணர்வுகள் எல்லாம் உனக்குள் வந்து
2.என்ன
வேலை செய்கிறது? என்று பார்க்கச் சொன்னார்.
இப்படி
அதையெல்லாம் நான்… “பார்த்துப் பார்த்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு தான்”
உங்களிடம் சொல்கிறேன்.
நீங்கள்
உட்கார்ந்து கேட்கிறீர்கள். நான் அலைந்து திரிந்து சுற்றித்தான் தெரிந்து
கொண்டேன். நீங்கள் உட்கார்ந்து கொண்டே இதைத் தெரிந்து கொள்கிறீர்கள். நான் காடு
மேடெல்லாம் சுற்றிக் கஷ்டப்பட்டு எனக்குள் அறிந்து கஷ்டத்தையெல்லாம் தெரிந்து
வந்தேன்.
உங்களிடம்
அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுத்து உங்கள் தீமைகளை எல்லாம் நீங்கள் நீக்கிக்
கொள்ளுங்கள் என்று சொல்கின்றேன்.
குருநாதர்
எனக்கு அப்படிக் கொடுக்கவில்லை. நான் உங்களுக்கு இப்படிக் கொடுக்கின்றேன். இதை
உதறிவிடாதீர்கள்.
அந்த
மெய்ஞானி உணர்வை உங்களுக்குள் குருவாக ஏற்று அந்த உணர்வின் தன்மை வளர்க்கும் போது
அவர்கள் மெய் ஒளி பெற்றதைப் போல அதை நிச்சயம் நீங்களும் பெறுவீர்கள்.
மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன்.
இதையே நீங்கள் மீண்டும் எண்ணுவீர்கள் என்றால்
1.அது
குருவாக வந்து உங்களுக்குள் நல்வழி காட்டும்
2.உங்கள்
வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றும்.
3.மெய்ப்
பொருள் காணும் உணர்வை வழிகாட்டும்.
4.அதனின்
உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் காட்டும்.
5.மெய்
ஞானிகளுள் ஒருவராக நீங்களும் ஆக முடியும்.