ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 1, 2017

பங்குனி உத்திரம்

உடலிலிருந்து வரக்கூடியதை ஒன்றிலிருந்து ஒன்றை மீட்டிடும் நிலைகள் கொண்டு அறிந்திடும் ஆற்றல் பெற்றது கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவின் தன்மை என்பது தான் கார்த்திகேயா.

ஒரு வெளிச்சத்தை நாம் போட்ட பின் அங்கே இருக்கும் பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது. அதைத்தான்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.இருளை போக்கிப் பொருள் காணும் நிலைகள் வரப்படும் போது
3.“கார்த்திகேயா…” என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
4.பங்குனி மாதம் – பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்தது.

முதலில் வரக்கூடியது அனைத்தும் தட்சிணாயாணம். இந்த உடலின் நிலைகளில் இருந்து அறிவின் ஆற்றல் வரப்படும் போது மஹா சிவன் ராத்திரி என்று காட்டுகின்றார்கள்.

அடுத்து பங்குனி மாதம் வரப்படும் போது உத்தராயணம்.

இதற்கு முன்
1.மாசி மாதம் வரையிலும் தட்சிணாயாணம் நடக்கின்றது.
2.இந்த உடலுக்குள் இருள்.
3.ஆறாவது அறிவு கொண்டு தட்சிணாயாணம் மாறி வெளிச்சம் அதிகமாகின்றது.
4.அறிவின் ஆற்றல் அறிந்திடும் உணர்வு கொண்டு ஆறாவது அறிவால் உத்தராயணம்
5.பங்குனி உத்திரத்தில் தேரைப் பிடித்து இழுப்பார்கள்.
6.பல ஆயிரம் பேர் சேர்ந்து முருகனை வலம் வரும்படிச் செய்கின்றார்கள்.

நாம் அனைவரும் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் உணர்வின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்.

உத்தராயணம் - இன்னொரு பிறப்பிற்கு வரக்கூடாது என்ற நிலைகளும் நாம் இன்று பொருள் எடுத்தாலும் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாக அவனுடன் இணைய வேண்டும் “மாற வேண்டும்” என்பதற்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.

பங்குனி உத்திரம் அன்று உத்தராயணம் என்ற நிலைகளில் வைத்து ஆறாவது அறிவு கொண்டு மெய் ஒளியை நாம் வளர்த்துப் பிறவா நிலை என்ற நிலைகள் அடைவதை நமது சாஸ்திர விதிகள் தெளிவாகக் காட்டுகின்றது

சித்திரை - நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வின் நிலையிலும் சித்திரை சிறு திரையாக மறைத்துக் கொள்கின்றது.

நமக்குள் ஒளியை மறைக்கும் நிலையைப் பிளந்து ஆறாவது அறிவின் துணை கொண்டு இருளைப் போக்கிப் பொருள் காணவேண்டும் என்பதற்குத்தான் உத்திரம் உத்தராயணம் என்று காட்டினார்கள் ஞானிகள்.