போகன் அவன் தான் பல கோடித் தாவர இனச் சத்தை
நுகர்ந்தறிந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்த பின் அவன் செயலின் தன்மை “உலகம் முழுவதற்கும்
வலம் வரும் தன்மையாக… சுழன்று வந்தான்”.
எவ்வாறு இன்று ரேடியோவில் உலகம் முழுவதும் ஒலி அலைகளைப் பரப்புகின்றமோ
இதைப்போல அவன் கவனக் குளிகை என்ற நிலைகளில் செயல்பட்டான்.
பல தாவர இனச் சத்தைத் தனக்குள் உயர்ந்த சக்தியாக எடுத்து
1.மற்ற தாவர இனங்கள் இதே இனங்கள் எங்கேங்கெல்லாம் இருக்கின்றதோ
2.அங்கே இந்த உணர்வின் தன்மை அதனுடைய நிலைகள் எண்ணப்படும் போது
3.அதன் ஈர்க்கும் நிலையாக
4.இந்த உயிரான்மா இந்த உடலயே அழைத்துச் செல்லுகின்றது.
பல வகையான பறவை இனங்கள் மற்ற எங்கெங்கோ இருப்பினும் அதனதன் வேனில்
காலங்களை அறிந்துணர்கின்றது.
ரஷ்யாவிலேயோ அமெரிக்காவிலேயோ பிரான்சிலேயோ உருவான அந்தப் பறவைகள்
அதன் காலக் கெடுகள் முடியும் போது அதனின் உணர்வான இனங்கள் கொண்ட அந்த நிலையை நுகர்ந்து
திசை நோக்கிக் கவர்ந்து இடம் மாறுகின்றது (MIGRATION).
“யாரும் சொல்லவில்லை…!” என்றாலும் தன் எல்லையை அறிந்து அங்கே
வந்து காலங்களைக் கழித்து தன் இனப் பெருக்கத்தைக் கூட்டுகின்றது. அந்தப் பருவத்திற்குத்
தக்கவாறு இனப் பெருக்கத்தைக் கூட்டியபின் மீண்டும் தன் இருப்பிடமே செல்லுகின்றது.
இனப் பெருக்கத்திற்கு காலம் உகந்ததாக எண்ணி பறவைகள் அவ்வாறு
செய்கின்றது. இதைப் போலத் தான் அன்று போகன் பல உயிரினங்களின் உணர்வை நுகர்ந்தறிந்து
அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகும் சக்தி பெற்றான்.
அவன் தாயின் எண்ண நோக்கம் அதனின் மெச்சிய உணர்வுகள் இவன் உடலுக்குள்
சென்ற பின் அந்த நிலையைச் செய்து அவனால் உலகம் அறியும் நிலையும் இவன் நுகர்ந்தறிந்து
தன் உணர்வின் செயலால் மற்றோர் இடத்திற்கு இவன் பறந்து செல்லும் நிலையை அவன் பெறுகின்றான்
பட்சிகள் தான் சிறகடித்தாலும் மிதக்கும் தன்மை கொண்ட உணர்வுகள்
அதை மிதக்கச் செய்கின்றது.
கோழி இனமும் அதுவாக இருப்பினும் எடை கூடும் நிலைகளைத் தன் எடை
குறைக்கும் நிலை அற்றது. அதனால் பறக்கும் நிலை அதற்கில்லை.
இன்று நாம் காரை ஓட்டுகின்றோம். அதிகமான வேகமாத்தில் ஓட்டும்
போது பறக்கும் நிலை அடைகின்றது. ஆனால் பறக்கும் நிலை வந்தால் இதனுடைய நிலை திசை மாறுகின்றது.
எங்கே மோதும்…! என்று சொல்ல முடியாது.
1.காற்றழுத்தத்தை எதிர்க்கும் ராடர் (RADAR) என்ற நிலைகள் அமைத்து
2.அதனின் செயலாக உருவாக்கப்படும் போது காற்றழுத்தத்தைச் சமாளித்து
3.மிதக்கும் தன்மை பெறுகின்றது “விமானம்”.
4.பறவைகளும் காற்றழுத்தத்தைச் சமாளித்துத்தான் தனக்குள் மிதக்கும்
உணர்வின் தன்மை பெற்றது.
இருப்பினும் தான் நுகர்ந்தறிந்த திசையை அறிந்து வரும் இந்த நிலைகள்
பெற்ற இந்தப் பட்சியின் தன்மையைப் போகன் கண்டுணர்ந்தான்.
மற்ற பட்சிகளின் உணர்வின் சத்தை அதன் பாச ஒலியை அதிலிருந்து
இந்தத் தாவர இனங்களை நுகர்ந்தறிந்த அவன்
1.மற்ற பட்சிகளின் அந்த உணர்வு இயக்கமும்
2.அதில் எழும்பும் நாதத்தை இவன் கண்டுணர்ந்து
3.அது வெளிப்படுத்தும் உணர்வை நினைவு கொண்டு
4.கண் கொண்டு கூர்ந்து அதை நுகர்ந்தறிந்து
5.அதை மோகித்து அதைப் போகித்தான் தன் உடலுக்குள்.
இவ்வாறு சென்றடைந்த இந்த உணர்வு கொண்டு தான் அவன் விண்ணிலே தன்னிச்சையாகப்
“பறக்கும் நிலை…” பெற்றான்.
பறக்கும் நிலை என்றால்
1.உடலைத் தனக்குள் ஆவியாக மாற்றி
2.அதனின் உணர்வு கொண்டு எங்கே செல்லுகின்றோமோ குவித்து
3.அங்கு இறங்கும் நிலை பெற்றான்.
உடலைக் கடந்து அவன் மேலே பறந்து செல்லவில்லை.
மாந்திரீகத்தில் ஓர் இடத்திலே ஒரு பொருளை வைத்துவிட்டு மனிதனில்
உடலில் விளைய வைத்த இந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அது இன்னொரு இடத்தில் மீண்டும்
அதைக் காண்பிப்பார்கள். இதைக் கரையான் மந்திரம் என்று சொல்வார்கள்.
கரையான் எவ்வாறு தன் மேலே உருவாகும் அந்த உணர்வின் வேட்கைகள்
மரத்தில் பட்டபின் பெரும் வைரம் போல் உள்ள மரமாக இருந்தாலும்
ஆவியாகக் கரைந்து அது மண்ணாக மாற்றி விடுகின்றது.
அதனின் சத்தை உணவாக உட்கொண்டு இந்தக் கரையான் தன் உணர்வின் செயலாக
அது இயக்குகின்றது. இதைப் போன்று தான் கரையான் மந்திரத்தைக் கற்றுணர்ந்தவன் இந்த உணர்வின்
சத்தைத் தனக்குள் எடுத்தான்.
மந்திர ஒலிகள் சொல்பவர்கள் இந்தப் பொருளை அதற்குள் இணைத்த பின்
உலோகமாக இருந்தாலும் மனிதன் செயற்காகச் செய்த பொருளாக இருப்பினும் அதனை உருகச் செய்யும்
மறையச் செய்யும் உணர்வின் சத்தை அதன் மேல் பாய்ச்சியபின் அந்தப் பொருள் ஆவியாக மாறிவிடும்.
பின் டப்பாவை மூடி விட்டு அதில் சிறு ஓட்டையைப் போட்டு விட்டு
ஈயம் வைத்துப் பற்ற வைத்து விட்டால் கடுகளவு இருக்கக்கூடிய ஓட்டைக்குள் அது அங்கே டப்பாவில்
நிற்கும் அளவுக்கு எந்தப் பொருளோ அது உள்ளே நிற்கும்.
கரைத்து ஆவியாக அந்த டப்பாவிற்குள் இருப்பதை மீண்டும் அவன் சொல்லும்
எதிர்மறை விட்டபின் அது உறைந்து அப்பொருளாக மாறும். இதுதான் மந்திரங்களில் இப்போது
செயல்படுவது.
1.தங்கம் வா…!
2.எலுமிச்சம்பழம் வா…!
3.ஆப்பிள் வா…!
4,லிங்கம் வா….!
4.அது வா இது வா என்ற நிலையும்
5.வேப்ப இலையைக் கசக்கிய பின் தங்கம் வருவதும்
6.வேப்ப இலையைக் கசக்கிய பின் சிலைகள் வருவதும்
“எல்லாம்…” இந்த நிலை தான்.
செய்வினை வைத்திருக்கின்றார்கள் என்று சொல்வார்கள். மண்ணிற்குள்
தோண்டிய நிலைகள் பார்த்தவுடனே செய்வினை செய்து விட்டான் என்று நம்மை “ஏமாற்றுவதும்…”
இப்படித்தான்.
1.யாரும் செய்யவில்லை
2.அவன் செய்தான்… இவன் செய்தான்… என்று இவனே செய்கின்றான்.
3.இவனே எடுக்கின்றான் பொருளைக் காட்டுகின்றான்.
4.நினைவு படுத்துவதும் அவனே நமக்குள் நினைவு கூறும்படிச் செய்பதும்
அதேதான். (மந்திரங்கள் செய்யும் படி)
போகமாமகரிஷியோ தான் கண்டறிந்த உணர்வின் தன்மையை இந்த உடலைப்
பிரித்து மற்றதைச் செய்தாலும் அவன் கண்டுணர்ந்த நிலையை தன் உடலைக் காயகல்பமாக மாற்றினார்.
உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றினான்.
இந்த உணர்வின் நிலையை இங்கே உறையச் செய்த உடலை நிறுத்தி விட்டு
தன் உடலின் தன்மை கொண்டு உணர்வை ஒருங்கக் குவித்துத் தான் எண்ணிய இடத்தில் இந்த உடலை
மீண்டும் குவிக்கச் செய்து உருவானான்.
இப்படி வந்தவன் தான் அவன்.
ஆதியிலே ஒரு கோள் உருவாகி அது கரைந்து மீண்டும் உயிரினங்கள்
ஒன்று சேர்த்து மற்ற உணர்வின் தன்மை சேர்த்து எப்படிப் பரிணாம வளர்ச்சி வந்ததென்ற நிலையை
அன்று அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்ததை அவன் அறிகின்றான்.
அவ்வாறு அகஸ்தியன் உணர்வால் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு இவன்
மீட்டு இந்த உணர்வின் சக்தி அந்தத் தாயின் பேரன்பால் இரு நிலைகள் கொண்டு அனைத்தும்
அறியும் தன்மை அங்கே அவனுக்கு வருகின்றது.
இவ்வாறு வளர்ந்தவன்தான் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிந்து
ஒவ்வொரு சரீரத்திலும் இணைந்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அந்த உணர்வுகளுக்கொப்ப உடல்கள்
எவ்வாறு உருவானது என்றும் அறிகின்றான்.
மனிதனின் நிலைகள் கொண்டு உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வின் சத்தை நமக்குள்
எப்படி உடலாக மாற்றுகிறது என்று அறிந்தான்.
அந்த உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தறிந்து தீமைகளை
அகற்றிடும் செயலாக கார்த்திகேயா என்று அறிந்தான்.
1.எண்ணியதையெல்லாம் நம் உயிர் இயக்கி
2.அந்த உணர்வின் செயலாக உடலை இயக்கி
அதனின் செயலாக வாழ்க்கையில் இணைந்து அதனின் நிலைகள் எவ்வாறு
உருவானது என்றும்
3.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை
அறிந்தவன்தான் போகன்.
போகன் 5000 ஆண்டுகளுக்குள் தான் இதைக் கண்டான்.