ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 21, 2017

இருதயத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலு ஏற்றி “நம் மன பலத்தைக் கூட்டிச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் வழி”

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று மனதைத் தெளிவாக்கிக் கொள்ல வேண்டும்.

அந்த அருளைப் பெருக்கி இருளை அகற்றி நம்மை அறியாது வரும் தீமைகளைப் “பற்றற்றதாக…” மாற்றி
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றி
2.அன்புடனும் பண்புடனும் பரிவுடனும் ஒன்றி வாழும்
3.அருள் குடும்பமாக நாம் மாற்றியாக வேண்டும்.

நம் குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்து பின் நாம் தனித்து நிற்க வேண்டிய சூழல் இருந்தாலும் பண்புடன் வழிகாட்டி பண்புடன் அரவணைத்து அன்புடன் அரவணைத்து வாழ வேண்டும்.

தனிக் குடும்பமாகச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டும் பொழுது அரவணைத்து வாழும் சக்தியை நாம் பெறமுடிகின்றது.

இதே போல உங்கள் வாழ்க்கையில் குடும்பத்தில் கஷ்டமானாலும் தொழிலில் நஷ்டம் என்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இருதயத்தில் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

அப்போது சிறிது நேரத்திலேயே நல்ல சிந்தனை வருகின்றது. ஏனென்றால்
1.உடலிலுள்ள எல்லா உறுப்புக்களுக்கும் எல்லா உணர்வுகளுக்கும்
2.உந்தித் தள்ளும் அந்த உணர்ச்சிகள்
3.இருதயத்திலிருந்து தான் (இரத்தத்தின் வழி) செல்லுகின்றது.

இருதயத்திலிருந்து உங்கள் உடல் முழுவதும் படரப்படும் பொழுது சிறு மூளையின் பாகத்திற்குச் சென்ற பின் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுக்கின்றது.

1.எதைச் செய்தால்… எது நல்லது…?
2.எப்படி இருந்தால் நமது வாழ்க்கையில் நல்லதாக இருக்கும்…?
என்று சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.

அந்த அருள் உணர்வைப் பெருக்கும் பொழுது தீமைகளை நீக்கி நல் உணர்வைப் பெறும் ஞானம் சாந்தம் விவேகம் என்ற உணர்வுகள் நமக்குள் ஊடுருவிச் சென்று
1.நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த இது உதவும்.
2.வேறு யாரும் சொல்லி நம் வாழ்க்கையைச் சீர்படுத்த முடியாது.

ஆகவே உங்களுக்குள் வரும் உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று இந்தத் தியான முறைப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்குள் அருள் ஞானம் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருளை காணும் திறன் நீங்கள் பெறமுடியும்.

இல்லை என்றால் உங்களுக்குள் வெறுப்பு வேதனை என்று ஆகி அதற்குத் தகுந்த உங்களுடைய சொல்லும் செயலும் செயல்படத் துவங்கி விடுகின்றது.

பிறிதொருவர் உங்களிடம் நல்லதைச் சொன்னாலும் ஏற்காதபடி இந்த நியாயத்தைத் தான் பேசுவீர்களே தவிர
1.பண்பை ஏற்றுக் கொள்ளும் தன்மையோ
2.பண்பை வளர்த்துக் கொள்ளும் நிலைகளோ
3.வரக்கூடிய தீமைகளை அகற்றக் கூடிய நிலைகளோ
4.நமக்குள் வருவது மிகவும் சிரமம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கி தியானித்தீர்கள் என்றால் அருள் ஞான வாழ்க்கையாக வாழ முடிகின்றது.

தீமைகளை வெல்லக் கூடிய ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

ஒவ்வொருவரும் அந்த அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணிப் பிரார்த்திக்கின்றேன்.