ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 14, 2017

குதிங்கால் வாதம் முழங்கால் வாதம் மூட்டு வாதம் போக்க "கடந்த கால மக்கள் கண்ட இயற்கை வழிமுறைகள்"

யானையோ தன் உடலின் வலுக் கொண்டு தான் உணவாக உட்கொள்ளும் பெரும் கட்டைகளை தனக்குள் உருவாகும் அமிலத்தின் வலுவால் துரித நிலைகளில் கரைத்து அதனின் சத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்ளும் திறன் பெறுகின்றது.

ஆனால் அதன் மலத்தை (லத்தி) வெளியிடும் போது அதை மனிதன் மிதித்தால் குதிங்கால் வாதம் நீங்குகின்றது.

மனிதனின் வாழ்க்கையில்
1.வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்
2.அதன் புவியின் ஈர்ப்பில் இத்தகைய வாத நோய்கள் வந்துவிடுகின்றது.

குதிங்கால் வாதம் என்பது நாம் நடக்கும் போது தெரிவதில்லை. நாம் அமைதியாக இருக்கும்போது கால்களில் அந்த வலியும் வேதனையும் தெரியத் தொடங்கிவிடும்.

நாம் படுக்கும்போது இதைப் போன்ற வலி இருப்பதை உணர முடிகின்றது.

யானையின் லத்தியை அது சூடாக இருக்கும் போது அதை அவர்கள் மிதித்தார்கள் என்றால் இந்த உடலிலுள்ள வாதங்கள் நீங்கிவிடுகின்றது.

விஷத்தின் தன்மை நம் உடலில் உறைந்திருந்தால் லத்தியில் வரும் ஆவியின் தன்மை
1.பாதங்கள் வழியாக உடலுக்குள் ஊடுருவி அதைக் கரைத்து விடுகின்றது.
2.அந்தப் பாகம் இரத்தம் எளிதாகச் சீர்படும் தன்மை வருகின்றது.

இயற்கையின் இயக்கங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் போல் கால்களில் முழங்கால் வாதம் கடுமையாக இருந்தால் எருமை மாட்டின் சாணத்தை உபயோகப்படுத்தி அதைக் குறைக்க முடியும்.

எருமை விஷத்தின் தன்மை கொண்டு உடல் வலிமை பெற்றது.

எருமைச் சாணம் சூடாக இருந்து அதைத் துணியில் எடுத்துப் புளிந்து மேலே போட்டால் மூட்டுவாதங்கள் மற்றும் குதிங்கால் வாதங்களை நீக்க உதவுகின்றது.

சாணம் போட்டதும் வெதுவெதுப்பான நிலையில் எடுத்துப் புளிந்து காலில் வைத்துப் பாருங்கள். அது ஒரு மருந்தாகப் பயன்படுகின்றது.

மிகவும் கடினமான விஷத்தை மனிதன் உட்கொண்டால் அந்த விஷத்தின் தன்மையைத் தடைபடுத்த எருமைச் சாணத்தை மிதித்தால் புவியின் ஈர்ப்பில் ஈர்ப்பாக இருப்பதால் இரத்தத்தில் கலந்து அந்த விஷங்களை முறிக்கின்றது.

எருமை மாட்டின் சாணத்திற்கு கடுமையான விஷத்தையும் முறிக்கும் ஆற்றல் இருக்கின்றது.

அக்கால மக்கள் பல கோடி உடல்களில் இருந்து தீமையை நீக்கினாலும் அவர்கள் சந்தர்ப்பத்தால் கண்டுணர்ந்த உணர்வுகளை மனிதனுக்கு வரும் உபாதைகளை நீக்கப் பயன்படுத்தினர்.

ஏனென்றால் இன்று விஞ்ஞான அறிவு இருப்பினும் கடந்த காலங்களில் இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிந்து தீமைகள நீக்க இவ்வாறு செயல்படுத்தினார்கள்.

இயற்கையின் நிலைகளில் தீமைகளை மாற்றினர். நோயை நீக்கினார்கள். இதையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.