ஒரு உயிர் பூமிக்குள் வந்த பின் உயிரணு. உயிரணு
தன் துடிப்பால் மின்னிக் கொண்டிருக்கும் அந்த உணர்வே உயிரின் நிலை.
அந்த உயிரணு நம் பூமிக்குள் வந்த பின் உதாரணமாக
ஒரு பருத்திச் செடியின் மீது அந்த உயிரணு விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது
1.பருத்திச் செடியிலிருந்து வெளிப்படும் அந்த
இலையின் சத்தை
2.இந்த உயிரணுவின் (தன்) துடிப்பின் ஈர்ப்பால்
ஈர்க்கப்பட்டு
3.அந்த உயிரைச் சுற்றி மூடி விடுகிறது.
1.ஒரு “சப்…” என்று இருக்கும் பொருளில்
2.நாம் பாகைக் காய்ச்சி ஊற்றிய பின்
3.(முலாம் பூசியது போல்) மேலே மூடிக் கொள்வது
போல்
4.பருத்திச் செடியின் சத்து அந்த உயிரணுவை மூடி
விடுகின்றது.
பருத்திச் செடியிலிருந்து வெளிப்படும் அந்தச்
செடியின் சத்தை சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அதை அலைகளாக படரச்
செய்கின்றது.
அவ்வாறு படரச் செய்து கொண்டிருக்கப்படும் போது
எந்தச் செடியின் மேல் உயிரணு வீழ்ந்ததோ அதிலிருந்து வெளிப்படும் அலைகள் அணுக்களாக
மாறுவதை
1.அந்த உயிரணு அதைக் கவர்ந்து அதைச் சுவாசித்து
2.“ஓ…” என்று ஜீவனாக்குகின்றது.
இந்த உயிரணு எவ்வாறு தோன்றியதோ இதைப் போல
அந்தத் தாவர இனச்சத்தை அது நுகர்ந்து
1.இந்த உயிரின் துடிப்பு போல
2.தாவர இனச் சத்தையும் துடிப்பாக
உருவாக்குகின்றது.
அப்பொயழுது அது ஜீவ அணுவாக மாற்றுகின்றது. அது
தான் “ஓ…” பிரணவம், ஜீவனாக உருவாகத் தொடங்கி விடுகின்றது. அந்த உணர்வின் சத்து
உடலாக ஆகும் போது “சிவமாகின்றது”.
1.இந்த உயிரணு
2.அந்தத் தாவர இனச்சத்தால் மூடப்படும் போது
இரவு.
3.இது தான் சிவன் ராத்திரி.
முதன் முதலில் இவ்வாறு தோன்றிய உயிர் பரி\ணாம
வளர்ச்சியாகி இன்று நாம் மனிதனாக இருக்கிறோம் என்றால் அது தான் “மகா… சிவன்
ராத்திரி”.
எத்தனை விதமான குணங்களை நமக்குள் எடுத்தாலும்
உடலுக்குள் இருக்கும் இந்த உணர்வின் தன்மை கொண்டு அறிகின்றோம்.
1.ஆனால் உடலுக்குள் நமக்குள் பலவும்
மறைந்திருக்கின்றது.
2.இது தான் மஹா சிவன் ராத்திரி.
ஒரு உயிரணு… “மனிதனாக முழுமை பெற்ற நன்னாள்”
என்ற நிலையினைத் தெளிவுபடுத்துவதற்குத் தான் மகா சிவன் ராத்திரி என்று மகரிஷிகளால்
உணர்த்தப்பட்டது.