தீமைகளை
அகற்றும் ஆற்றலை நாம் எப்படிப் பயிற்சியாக எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்
என்பதற்குத்தான் இதை யாம் உபதேசிக்கின்றோம்.
உதாரணமாக
இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகின்றார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக்
கொள்கின்றார்கள். சாபமிடுவோரை நீங்கள் பார்க்கின்றீர்கள். அடுத்த கணம் என்ன செய்ய
வேண்டும்?
1.ஓ..ம்
ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை வேண்டுங்கள்.
2.கண்ணின்
நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.
3.சாபமிட்ட
நினைவு உயிரில் மோதாமல் தடுக்க வேண்டும்.
4.இது ஒரு
பழக்கத்திற்கு வரவேண்டும்.
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது
எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏங்கி
நினைக்க வேண்டும்.
1.தீமைகள்
மூக்கு வழியாகப் போவதற்கு மாறாக
2.இந்த
வழியில் திருப்பி விட்டுவிட வேண்டும்.
இதில் உங்களுக்கு
என்ன என்று சந்தேகம் இருந்தால் ஒரு எலுமிச்சம் பழத்தை நீங்கள் புருவ மத்தியில்
வையுங்கள். அது எப்படி இழுக்கிறது…? என்று தெரியும்.
அதே மாதிரி
ஒவ்வொன்றையும் விஷமான பொருளை எடுத்து இந்த இடத்தில் நெற்றிக்கு அருகில் ஆட்டிப்
பாருங்கள். அது எவ்வளவு இழுக்கின்றது என்று தெரியும்.
ஏனென்றால்
நம் உயிர் உள்ளுக்குள் (புருவ மத்திக்குள்) இருக்கிறது.
நாம்
கண்ணால் தான் பார்க்கிறோம். கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் எடுத்து
நம் ஆன்மாவில் கொடுக்கிறது. அப்பொழுது அவர் கெட்டது செய்தார் என்று தெரிந்து
கொள்கிறோம். அவர் திட்டுகிறார் என்று தெரிந்து கொள்கிறோம்.
ஆனாலும்
நம் உயிரில் படும் போது தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும்.
தெரிந்த
பிற்பாடு என்ன செய்கிறது?
உதாரணமாகத்
தீ எரிகிறது பார்க்கின்றோம். காலை வைத்தால் சுடுகிறது. தெரிந்தும்… காலை வைத்தால்
சுடாமல் என்ன செய்யும்? சுடத்தானே செய்யும்.
“சுருக்…”
என்று சுட்டவுடனே நாம் காலை எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா.
அதே போல்
சுடு தண்ணீரைக் காய வைக்கிறோம். தண்ணீர் காய்கின்றது என்று தெரிகிறது.
முதலில்
கையை வைக்கிறோம். வைத்தவுடனே என்ன செய்ய வேண்டும்? “சுரீர்…ர்ர்…” என்றதும்
“வெடுக்…” என்று எடுக்க வேண்டும்.
சுட்டுவிடும்
என்று தெரிந்தும் “லபக்..”. என்று உள்ளுக்குள் கையை விட்டால் என்ன செய்யும்? கை
பொத்துப் போகுமா… இல்லையா…?
தண்ணீராகத்தான்
தெரிகிறது. ஆனால் “எவ்வளவு சூடு..?” என்று தெரியவில்லை.
விரலை
விட்டுத் தொட்டுப் பார்க்கிறோம். தொட்டுப் பார்க்கும் போது முதலிலேயே
முழுவதும் கையை விட்டால் என்ன செய்யும்?
கை வெந்து
போகுதா… இல்லையா…?
இதே
மாதிரித்தான் ஒரு சாபமிடுவோரைப் பார்த்தோம் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஈஸ்வரா
என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போக வேண்டும்.
அதாவது
உங்கள் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். அப்பொழுது சாபமிட்டது
உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.
தண்ணீர்
சுடும் என்று தெரிந்து கையை “விசுக்.,.” என்று எடுக்கின்றோம் அல்லவா…! அதைப்
போன்று தான் சாபம் விடுகிறார்கள் என்று தெரிகிறது அல்லவா…!
அப்பொழுது
உடனே என்ன செய்ய வேண்டும்?
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் இரத்த
நாளங்களில் கலக்க வேண்டும் என்று புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் செலுத்த
வேண்டும்.
துருவ
நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து இதன் வழி நம் உயிரில் மோதினால் அகக்கண்.
1.நம் உயிர்
என்ன செய்கிறது. உடலுக்குள் உணர்த்துகின்றது.
2.அதைப்
பார்க்க முடியுமா? என்றால் முடியாது.
3.கண்ணால்
பார்க்கிறோம்… அந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டபின் அந்த அறிவாக நாம் தெரிந்து
கொள்கிறோம்.
4.வேதனைப்படுகின்றான்
அல்லது வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகிறது. அது ஹரி ஓம்… = அதை அறிவோம்.
சாபமிட்ட
உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த எண்ணம்… சொல்… பதட்டம்… என்று எல்லாம்
வருகிறது. “இப்படிச் சொல்லிவிட்டானே பாவிப் பயல்…!” அடுத்து உள்ளுக்குள்
இழுக்கின்றது.
அப்பொழுது
அதைத் தடுக்க வேண்டும்.
தடுப்பதற்கு
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தல்
வேண்டும். எடுத்தால் உள்ளுக்குள் கண்ணின் நினைவு கொண்டு இங்கே வலுவாகின்றது.
வலுவான
பிற்பாடு – இங்கே உள்ளுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தி அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றபின் என்ன செய்கிறது?
உள்ளுக்குள்
இழுக்க மறுக்கின்றது. அப்பொழுது சாபமிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் “அனாதையாக…”
போகின்றது,
“ஒரு
நிமிடம்… இரண்டு நொடி…” எண்ணினால் கூட போதும்.
நமக்குள்
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுவான பிற்பாடு அதைச் சூரியன் இழுத்துச்
சென்றுவிடுகிறது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.
ஏனென்றால்
நாம் இங்கே இழுக்க மறுக்கின்றோம்.
சாபமிடும்
உணர்வுகள் அவர்களை விட்டு வெளியே வருகிறது. சூரியனின் காந்த சக்தி இழுத்து
வைத்துக் கொள்கிறது. யார்? சாபமிட்ட உணர்வைச் சூரியன் இழுத்து வைத்துக் கொள்கிறது.
நமது கண்
என்ன செய்கிறது?
அவனைப்
பார்த்தவுடனே நமக்குள் பதிவாக்குகிறது. பதிவாக்கிய பின் என்ன செய்கிறது?
கண்ணுடன்
சேர்ந்த காந்தப் புலன் அவர் பேசியது வெளி வந்ததை அதை இழுத்து நம் ஆன்மாவாக
மாற்றுகின்றது.
நம் உயிர்
கண்ணை ஒட்டி இருக்கிறதால் அதை இழுத்து இங்கே கொண்டு வந்து கொடுக்கின்றது.
உயிருக்குக்
கொடுத்தவுடன் அவர் சாபமிடுவது கண்களுக்குத் தெரிந்தாலும் அந்த உணர்ச்சியாகவும்
அதனின் அறிவாகவும் தெரிகிறது. “அவன் சாபமிடுகின்றான்…” என்று எல்லாம் தெரிகிறது.
ஒரு பயிற்சி:-
1.நீங்கள்
கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண்
பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு
பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.
3.நம் கண்
பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
4.நம்
நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்
செய்து
பாருங்கள்.
இதைப்
போன்று தான் அவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த
நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே
வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள்
நினைத்துப் பாருங்கள்.
சாபமிட்ட
அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம்
அங்கே அது முதலில் வந்துவிடுகின்றது.
நண்பர்
நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன
அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ..
நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த
நேரத்தில் “நின்று…”
3.சாபமிடுபவன்
சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது
அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.
5.எவனோ…
என்னமோ பேசுகிறான்…! என்று எண்ணிவிட்டு
நீங்கள் போவீர்கள்.
இந்த
மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது
அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.
அதே
மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.
அவன்
உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம்.
அடுத்தது
என்ன எண்ண வேண்டும்?
1.பதிவு
செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா
என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
நாம்
வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு.
ஆனால் நாம்
சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதிலிருந்து போன பிற்பாடு
நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!
துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும்
படரவேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும்
ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.நல்ல
குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச்
சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது?
3.சாப
அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.
அப்பொழுது
நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதைச் சொல்லால்
சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்.
சாபமிட்டவர்கள்
ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே
பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்?
1.நம்
உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை
உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள்
ஒன்று பட்டு வாழவேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.
இப்படிச்
செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்?
நடு
ரோட்டில் சாபமிட்டார்கள் என்று நினைக்கும் போதெல்லாம் இவர்கள் விட்ட
சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
1.அவர்களிடம்
இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
2.நமக்குள்ளும்
இதை வளர்த்துக் கொள்கிறோம்.
இந்த
வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது. இதையெல்லாம் நாம் மாற்ற
வேண்டும்.
அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து
ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும்
உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.
நாம்
யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி
இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.
1.எது எது
பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம்
சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல
கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப்
பரமாத்மாவும் சுத்தமாகின்றது.
நம்
குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி” இது
தான். செய்து பாருங்கள்.