ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 18, 2017

ஜோதிடம் பார்ப்பவர்கள் இன்று சாதாரண மனிதரிலிருந்து பெரிய ஆள்கள் வரை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் – “இது நடந்த நிகழ்ச்சி…”

இன்று உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது.  மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.

கோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்?

அவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை  எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து  சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…! என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள  அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

ஏனென்றால் இதைப் போன்ற ஜாதகக்காரர்கள் மக்கள் யார் யாரிடம் எல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் போய் அவர் ஜாதகங்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது.

ஜோதிடம் பார்ப்பதற்காக வரும் மனிதர்களின் நட்சத்திரம் என்ன…? ஏது…? அவர் உணர்வு என்ன…? என்று எல்லாம் அடுக்கு வரிசையில் தெரிந்து கொண்டு தன் இந்த மாதிரித் தவறுகளைச் செய்கின்றார்கள்.

இந்த லாட்ஜுகளில் கேம்ப் போட்டுச் செய்கின்றார்கள். இவர்களிடமெல்லாம் இந்த மாதிரி வேலைகள் ஏராளமாக உண்டு. ஒன்றும் தெரியாதது மாதிரிச் சொல்வார்கள்.

இதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே அனுபவபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

“மனிதனுக்கு ஜாதகம் இல்லை”.