ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2017

மாசி மாதம் ஏன் “அம்மை நோய்” வருகின்றது?

எந்தெந்தக் காலங்களில் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வரும் உணர்வின் அலைகளை நம் பூமி கவர்கின்றது? அதனால் இந்தப் புவிக்குள் உணர்வுகள் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைகின்றது என்பதை அறிந்தவர்கள் ஞானிகள்.

அந்த உணர்வின் செயலால் மக்களுக்குள் இந்த உணர்வின் கொதிப்படையப்போகும் போது இந்த மாசி மாதங்களில் தான் அம்மை நோய் (வார்ப்பு) ஜாஸ்தி இருக்கும்.

ஏனென்றால் கொதிகலனாகக் கோபம் வெறுப்பு என்ற உணர்வுகளை எவர் ஒருவர் அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த அம்மை வரும்.

காரணம் கொதிப்பின் தன்மை அடையும் போது எதிர் நிலையான உணர்வுகள் “நெகட்டிவ் பாசிட்டிவ்”.

கோபத்தின் உணர்ச்சிகள் தனக்குள் எல்லை கடந்து செல்லும் போது
1.அதை உள்ளுக்குள் அடக்கி வைத்தாலும் சரி
2.அல்லது மற்றவர்கள் செய்ததை வெளியிலே பேசாதபடி அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்டால்
3.எலும்புக்குள் அந்த ஊனின் தன்மையைப் பதிவு செய்து கொள்கின்றது.

அந்த உணர்வின் வேகம் அதிகரிக்கும் போது இந்த வெப்பக் காலங்களில் உமிழ்த்தப்படும் உணர்வுகள் இது அதிகமாகத் தனக்குள் சேர்த்து அம்மை வார்க்கத் தொடங்கி விடும்.

காரணம் இதெல்லாம் எலும்பில் இருந்து ஊடுருவி விடும்.

1.அந்த உற்பத்தியின் கொதிப்பின் நிலைகள்
2.அது அணுக்களின் செல்களாக வெளிவரும் போது
3.உள் இருந்தே அது கொப்பளித்து வருகின்றது.

மாசி மகம் என்று பொங்குவது போல நமக்குள் கோபம் வெறுப்பு ஆத்திரம் என்ற உணர்வின் தன்மைகள் எதுவோ அதனின் உணர்வின் தன்மை பொங்கும் போது இது அம்மையாக மாற்றுகின்றது. அதைப் போலத் தான்
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகள் நமக்குள் எடுத்துக் கொண்டால்
2.ஒளியின் சுடராக அது பொங்கும் உணர்வாக
3.தீமையை அகற்றிடும் நிலையாக நமக்குள் விளைகின்றது.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம். இந்த உணர்வின் சக்தியை ஆழமாக நீங்கள் பதிவு கொள்ளுங்கள்.

ஒரு டேப் செய்யக்கூடிய நாடா எப்படிப் பதிவாக்குகின்றதோ அதைப் போல இந்த உபதேசங்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் போதும்… இது பதிவாகும்.

அடுத்து யாம் உபதேசித்ததை என்ன சொன்னார் என்று நினைத்தால் போதும்,
1.உங்கள் வாழ்க்கையில் தீமையை விலக்கிச் செல்லும்
2.அருள் ஞானம் உங்களுக்கு வரும்.