உதாரணமாக
மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.
அதைக்
காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது
புழு சாகின்றது.
1.புழுவைக்
கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த
மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.
அந்த
மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால்
விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.
மனிதன்
விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.
முந்தைய
காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு
பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.
சாணத்தை
எரிக்கும் பொழுது
1.அந்த
நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது
விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது
மாட்டுச்
சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள்.
சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு
மடிந்துவிடும்.
ஆனால்
அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக
மாறுகின்றது.
அந்தச்
செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.
தாவர இனக்
கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும்
சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த
மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ
மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.
புழுக்கள்
அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு
காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.
நெற்
பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த
காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.
இப்போது
விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய
முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த
விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.
அடுத்து
இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.
அதே சமயம்
செடிக்குள் விஷத்தன்மை கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து
விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை
என்றால் அவை விளைவதில்லை.
செடியில்
விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த
நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.
விஷத்தின்
தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய
செயலாக்கங்களைக் குறைக்கின்றது.
செடியில்
தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.
ஆக
செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள்
அந்த விஷங்கள்
கலந்துவிடுகின்றது.
அதன்
வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள
அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது
நம் ஆன்மாவாக மாற்றும்.
நம்
ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல
குணங்களுடன் சேர்த்து
2.அந்த
விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள்
சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும்
பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள்
நயம் கெடுகின்றது.
விஷம்
கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல
நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின்
அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரை “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.
1.நன்மையின்
தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும்
தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின்
தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த
விஞ்ஞான அறிவால் வருகின்றது.
பண்டைய
காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல
பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும்
உருவாக்கினார்கள்.
பயிரினங்களில்
பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி
இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இன சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது
தடுக்கின்றது
அந்த
மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.
விஞ்ஞானம்
வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது
செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும்
நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.
இதையெல்லாம்
நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.