ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2017

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிப்பதால் "தொழிலில் ஏற்படும் பலன்கள்”

உதாரணமாகத் தொழிலில் நஷ்டம் ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது மனச் சோர்வு அல்லது வேதனை இரண்டும் நமக்கு வரப்போகும் போது
1.இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை ஊட்டி விடுகின்றது.
3.சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது.
4.தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகின்றது.
5.கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவரும் அந்த வேதனையை நுகரப்படும்போது அவர்கள் உடலுக்குள்ளும் அவருக்குத் தக்கவாறு சில நோய்கள் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டும் என்றால் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானம்.

நாம் வேதனை வேதனை என்று எண்ணும் போது அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்தால் நம் உடல் உறுப்புகளிலுள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

விஷத்தின் தன்மை பெற்றால் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் கலந்து எந்த உறுப்புகளில் விஷத்தன்மை அதிகமாகின்றதோ அந்த உறுப்புகளில் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.

விஷத்தின் தன்மைகளை முறித்து ஒளியின் உடல் பெற்றது அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன நிலைகள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வினைச் சூரியன் கவர்வதனால் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி நம் இரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

அப்பொழுது நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று அதன் வலிமை பெறுகின்றது.

இப்படி நாம் தினமும் அதைச் சேர்த்துக் கொண்டு வந்தால்
1.நம் உடலிலுள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் மாற்றும்.
2.சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

நம் இருதயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
1.இருதய வால்வுகள் சீராக இயங்கி
2.இருதயத்தை இயக்கும் அணுக்கள் வீரியமடைந்து
3.நாம் மன உறுதி பெற்று மன பல கொண்டு
4.சிந்தித்துச் செயல்படும் சக்தியும் வருகின்றது.
5.அமைதியும் சாந்தமும் கொண்டு இந்த வாழ்க்கை வாழ முடியும்.

இவ்வாறு வேதனை என்ற நிலையை நீக்கிச் சிந்திக்கும் வலிமை பெறும்போது
1.ஒவ்வொரு செயலையும் நாம் எப்படிச் செய்யலாம் என்ற உறுதியான எண்ணமும்
2.பிறரிடத்தில் உதவியோ அல்லது நல்ல சொல்களைச் சொல்லப்படும் போது
3.அதனால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
4.அமைதியும் சாந்தமும் கொண்டு பண்பும் பரிவும் கொண்டு வாழ இது உதவும்.
5.குடும்பத்திற்குள் பெரு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆகையினால் தினசரி அதிகாலையில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அந்தச் சக்தியை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.