ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2017

யாரும் சொல்லித் தராமல் தன்னிச்சையாக ஒளியாக ஆனவன் அகஸ்தியன்...!

நமக்கு முன் ஒரு விழுதை வைத்துக் கொண்டால் அல்லது ஒரு பச்சிலையே நசுக்கிக் கையில் வைத்துக் கொண்டால் பாம்பினங்கள் படம் எடுப்பதைத் தவிர்க்கின்றது. அதன் விஷத்தைக் கக்குவதில்லை.

இதே போல் ஒரு பச்சிலையை நசுக்கி விட்டால் அதன் மணத்தைக் கண்டவுடன் தேளினுடைய வீரிய விஷம் ஒடுங்குகிறது. வீரியச் செயல் இல்லை.

தேனீக்கள் தன் குஞ்சுகளைப் பாதுகாக்க அதனின் விஷத்தைக் கொண்டு எதிரிகளை வீழ்த்துகிறது.

மனிதன் ஒரு பச்சிலையை எடுத்து வாயால் மென்று அந்தக் கூட்டில் “பூ…” என்று  ஊதினால் போதும். அந்த மணத்தால் விஷங்கள் ஒடுங்குவதனால் அந்தத் தேனீக்கள் இவனைக் கொட்டுவதில்லை.

மனிதன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வருகின்றது.

இதே போலத்தான் ஆரம்ப நிலைகளில் காட்டு விலங்குகளுடன் வாழ்ந்த மனிதன் தன் குகையில் இரவில் உறங்கப்படும் போது விஷத்தை ஒடுக்கிடும் பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் பூசிக் கொள்கின்றான்.
1.தன் உடலிலிருந்து வரும் வெப்பமோ
2.உடலில் பூசிய மணங்களை வெளிப்படுத்துகிறது.

ஆதலால் இரவில் தூங்கும் போது இந்த உயிரினங்கள் தன் இரைக்காக நுகர்ந்தறிந்து செல்லும்போது இவர்கள் பக்கம் திசை திருப்பினால் இவர்கள் உடலில் உள்ள விஷத்தன்மைகள் அவைகளை இருளடையச் செய்கின்றது.

அவர்கள் படுத்திருக்கும் பக்கம் இந்த மிருகங்கள் போவதில்லை.

இவ்வாறு பச்சிலையின் பாதுகாப்பில் படுத்து மறைந்து அவர்கள் வாழ்ந்து வந்தாலும் மற்ற மிருகங்களுக்கு இரையாகாது தன்னக் காத்துக் கொண்டு (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த) மனிதன் அவனுக்குத் தெரிந்த அறிவால் வாழ்ந்து வந்தனர்.

ஏனென்றால் பல உணவுகளை உட்கொண்டு வந்தவன் தான் மனிதன். ஆனாலும்
1,இவன் அறிவு நுகர்ந்தறிந்த பின் எதற்குப் பயன்படும்…? என்று
2.அறியும் ஞானத்தால் இவன் இப்படி இதைச் செய்கின்றான்.
3.பச்சிலைகளைத்தான் தன் உடலில் பூசிக் கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொண்டான்.

ஆனால் இவர்கள் பூசிய பச்சிலைகள் விஷத்தை ஒடுக்குவதாக இருப்பினும் கர்ப்பமாகும் பொழுது அந்தத் தாய் கருவில் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கும் சிசுவுக்கும் அது படர்கிறது. ஆனால்
1இவர்கள் நுகரும் போது தாய் உடலில் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
2.தாய் கருவில் வளரும் சிசுவுக்கும் பச்சிலை விஷங்கள் போய்ச் சேர்ந்து
3.விஷத்தை ஒடுக்கும் அணுக்களாக விளைகின்றது.

இப்படி உடலில் விளைந்த உணர்வுகள் தான் அவன் (அகஸ்தியன்) பிறந்த பின் அவன் அருகிலே மற்ற யானையோ புலியோ பாம்போ தேளோ கொசுவோ விஷ வண்டுகளோ நெருங்குவதில்லை.

ஆனால் அதன் வீரியங்கள் குறைகின்றது. இப்படிக் விஷத்தின் வீரியத்தைக் குறைத்து வந்தவன் தான் தனக்குள் வளர்ச்சி பெற்றதனால் தன்னை அறிகின்றான்.

அவன் வானை நோக்கிக் காடுகளில் படுத்திருக்கும் போது சூரியன் இயக்கத்தைக் காணுகின்றான். ஏனென்றால் விஷத்தை ஒடுக்குவதனால் விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும் உணர்வுகளைக் காணுகின்றான்.

சூரியனின் செயலாக்கங்கள் இவனுக்குள் பதிவாகின்றது. ஆனால் சிறு குழந்தையாக இருப்பதால் சொல்ல முடிவதில்லை. சொல்லவும் முடியாது.

குளவி ஒரு புழுவை எடுத்துத் தாக்கி அதைக் கூட்டுக்குள் வைத்து மூடி விடுகின்றது. பின் குளவியின் விஷத்தன்மைகள் புழுவின் அணுக்களுக்குள் பட்ட பின் அந்த உணர்வின் தன்மையைப் புழுவை உருவாக்கிய உயிர் தன் துடிப்பின் நிலை கொண்டு இதை இயக்கிக் கொண்டிருப்பினும் இந்தக் குளவியின் விஷத்தன்மைகள் உட்புகுந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு குளவியாக மாறுகின்றது.

புழு குளவியான பின் வளர்ச்சி பெற்றபின் உமிழ் நீர் கூடுகின்றது. மண்ணாலே அடைக்கப்பட்ட கூட்டில் உமிழ் நீரைப் பாய்ச்சி அதைப் பிரிக்கின்றது. குளவியாக வெளி வருகின்றது.

வெளி வந்த பின் தாய் என்ன செய்ததோ அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் இதுவும் இயங்குகின்றது.
1.புழுவின் நிலைகளை அது மறந்து விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது (புழுவின் எண்ணங்களை இழந்து)
3.குளவியின் உணர்வுகளே வருகின்றது.

குளவியாக மாறிய பின் அதற்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை.

இந்தக் குளவி எந்த வகையில் செயல்பட்டதோ இதைப் போன்று அந்த குளவிக்கும் உமிழ் நீர் சுரக்கின்றது. மண்ணைப் பிசைந்து கூடு கட்டுகின்றது.

அதே போன்று தான் இவனுடைய வாழ்க்கையில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்கள் அகஸ்தியனுக்குள் விளைகின்றது.
1.இளம் பருவத்தில் ஒவ்வொன்றையும் அறிந்திடும் நிலையும்
2.வலுகொண்ட உணர்வும் அவனுக்குள் வருகின்றது.
3.எந்த மிருகமாக இருந்தாலும் இவனைக் கண்டு அஞ்சி ஒடுங்குகின்றது.

இதே போல தாவர இனங்களில் நீக்கிய நிலைகள் இவன் உணவாக உட்கொண்ட உணர்வின் தன்மை வரப்படும் போது தாவர இனங்கள் ஒடுங்குவதைக் காண்கின்றான். அதன் இயக்கத்தை உணர்கின்றான் தன் இளமைப் பருவத்தில்.

எப்படிக் குளவிக்கு
1.யாரும் சொல்லிக் கொடுக்காத நிலையில் வந்ததோ
2.இதே போல இந்த உணர்வின் இயக்கங்கள் வருகிறது.
3.அவன் அறியாதே சில செயல்களைச் செய்கின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மை வரப்படும் போது
1.மற்றவர்களுக்கு விஷம் தாக்கினால் மயக்கம் வருகின்றது.
2.ஆனால் விஷச் செடியின் அருகில் அகஸ்தியன் சென்றால்
3.மீண்டும் இவன் வீரியம் அடைகின்றான்.

விஷத்தை ஒடுக்கும் தன்மையின் வல்லமை வருவதனால் அவன் தெளிந்த மனமும் வலுவான உணர்வு கொண்டவனாக மாறுகின்றான். இப்படி அவன் ஐந்தாவது வயது வரப்படும்போது புவியின் ஈர்ப்பு தன்மையை அடைகின்றான். ஆனால் அதை அறிகின்றான்.

அதே சமயத்தில் நமது பூமி எப்படித் தனக்குத் தேவையான ஆகாரம் எடுக்கிறது என்பதை உற்று நோக்குகின்றான். வானுலகை இளமைப் பருவத்தில் கண்டுணர்ந்தாலும் பிரபஞ்சத்திலிருந்து நமது பூமி துருவப் பகுதி வழியாகக் கவர்வதை உணர்கின்றான்.

ஆனால் உணர்ந்தாலும் விஷத்தின் தன்மையே மேலிருந்து வருகின்றது. இந்த உணர்வின் தன்மை தாவர இனங்கள் விஷத்தின் உணர்வின் செயலால் தான் வளர்கின்றது. இருப்பினும்
1.தாவர இனங்களுக்குச் செல்வதை இவன் நேரிடையாக உட்கொள்கிறான்.
2.உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
3.துருவத்தை உற்று நோக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை அறிகின்றான்.

இவனுக்குள் விஷத்தின் ஆற்றல் உருவாகும் பொழுது விஷத்தின் அளவு கோலால் எப்படி விஷம் உண்டானது என்ற நிலையையும் “முதல் மனிதனின் உடலில் இதை உணர்கின்றான்”.

இதை வைத்துத்தான் அகன்ட அண்டம் எப்படி இருந்தது? அதனின் நிலைகள் கொண்டு எப்படி வளர்ந்தது? இதை இவன் துருவத்தை உற்று நோக்கும் போது தான் இந்தப் பிரபஞ்சமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது என்ற நிலையை இவனுக்குள் கண்டறிகின்றான்.

விளைந்த உணர்வுகள் இவனின்று வெளிப்படுவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அலைகளாக மாற்றுகின்றது. அதன் வழி கொண்டு தான்
1.அகஸ்தியனுக்குப் பின் வந்த மக்கள் அதனை அறிவாகக் அறிகின்றனர்.
2அதனின் வளர்ச்சியாகத் தெரிகின்றனர்.
3.இருளை வெல்லும் செயல் பெற்ற முதல் மனிதன் அகஸ்தியனே.

ஐந்தாவது வயதில் அவன் வளர்ச்சியில் துருவன் ஆனான். தனக்குள் கண்டுணர்ந்த நிலைகளை 16 வயது ஆகும் போது அக்கால மக்கள் அவனுக்கு உறுதுணையாக இருக்கத் திருமணம் செய்து வைக்கின்றார்கள். 

அதுதான் அருந்ததி என்பது