பழனியில் முருகன் சிலைக்குப் பக்கத்தில் போகர் சமாதி
வைத்திருக்கின்றார்கள்.
முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்து விட்டுப்
போகர் சமாதிக்கு வந்து “உனக்கு ஒரு கும்பிடு..! என்று கும்பிட்ட பின்
காணிக்கையும் கொடுத்து விட்டுத் தன் பிள்ளைகளுக்கு ஏதாவது அர்ச்சனை செய்து கொண்டால்
போதும்.
இதைத்தானே நாம் செய்கிறோம்? முருகன் கோயிலில் அந்தப்
போகரை சமாதியாக வைத்திருக்கின்றார்கள். ஆனால் “அவர் யார்…?” என்பது தெரியாது.
முருகனைப் பார்த்த பின்… இந்தத் தெய்வ குணத்தை உணர்த்திய
அந்தப் போகமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று இப்படி எண்ண
வேண்டும்
முருகன் சிலையைச் சிருஷ்டித்துக் கொடுத்தவன் போகன்.
சிலையை ஏன் அமைத்தான்? எப்படி அமைத்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாவது அறிவின் தன்மை இந்தப் பிரபஞ்சம் எப்படி மனிதனாக
உருவாக்கியது என்பதை அறிந்து கொண்டவர் போகர்.
1.பிரபஞ்சத்தில் விளைந்தவை நவக்கோள் அது தான் “நவபாஷாணம்…”
2.இருபத்தேழு நட்சத்திரங்கள் இது “வைரம்…”
இருபத்தேழு நட்சத்திரங்களின் சத்தை இணைத்து சூரியனிலிருந்து
உமிழ்த்தும் காந்தப்புலன் அறிவு “பாதரசம்…”
கோள்களின் சத்தையும் நட்சத்திரங்களின் ஆற்றல்களையும்
சூரியன் தனக்குள் எதைக் கவர்ந்து கொண்டதோ அதனின் உணர்வின் செயலாக உலகை மாற்றுகின்றது
என்ற நிலையை அவன் உணர்ந்து அதைப் போன்றே உணர்வின் செயலாக முருகன் சிலையை உருவாக்கினான்.
எந்தக் கோள் உமிழ்த்துதோ அது பூமிக்குள் பரவி வந்தாலும்
தன் இனத்தைக் கவர்ந்து அது பாஷாணமாக உருவாக்கும்.
இதே போல் இருபத்தேழு நட்சத்திரம் அது ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து
உமிழ்த்தும் உணர்வுகள் புவிக்குள் பரவி ஒவ்வொரு வைரமும் ஒவ்வொரு கலராக இருக்கும்.
நட்சத்திரத்திலிருந்து வரும் மின் அணுக்கள் புவியின்
ஈர்ப்புக்குள் வந்து தனித்து எதிலும் சிக்காது வீரிய உணர்வு கொண்டு சந்தர்ப்பவசத்தால்
பூமியிலே பதிந்து விடுகின்றது.
அப்படிப் பதிந்து விட்டால்
1.எந்த நட்சத்திரம் எந்தக் கல் எந்த மண் எந்தச்
செடியிலே
2.இது அதிகமாகக் கலந்து இருக்கின்றதோ அதனின் சத்து
வந்த பின்
3.இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் மண்ணிற்குள் மறைந்து
கருவாகி
4.தன் சத்தை மட்டும் அது உறிஞ்சி
5.ஒளியின் சிகரமாக அந்த வைரம் விளைகின்றது.
இதை எல்லாம் போகன் கண்டுணர்ந்தான்.
இந்தச் சத்துகள் எல்லாத் தாவர இனங்களிலும் எல்லா
மண்ணுகளிலும் கலந்து இந்த உணர்வின் இயக்கமாகச் சூரியன் எவ்வாறு ஒளிச் சுடராக இருக்கின்றதோ
இதைப் போல ஒளியின் சிகரமாக அறிந்திடும் அறிவின் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்று போகன்
கண்டுணர்ந்தான்.
அவ்வாறு தான் அறிந்துணர்ந்த நிலைகள் கொண்டு இந்தப்
பிரபஞ்சம் உருவானதையே மனித உரு போல அந்த உருவத்தை உருவாக்கினான் போகன். அது தான் முருகன்
சிலை.
மனிதனுக்கு வேண்டிய ஜீவாதாரமான அறிவின் தன்மையும்
தீமைகளை அகற்றும் உணர்வையும் கொடுக்கும் தாவர இனங்கள் அது எவ்வாறு உருவானதென்ற நிலையையும்
அறிந்து கொண்டான் போகன்.
சிலையை உருவாக்கும் பொழுது மனிதனுக்கு ஜீவாதாரமாகவும்
தீமைகள் அகற்றிடும் உணர்வின் தன்மை எண்ணங்கள் வடித்த அந்தத் தாவரங்களின் உணர்வுகளை
அவன் கவர்ந்து அதைச் சாரணையாகக் கொடுக்கின்றான்.
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து மனிதனாக வரும்போது
பல வகையான தாவர இனங்களை உணவாக உட்கொண்டது.
அந்தச் தாவர இனச் சத்தின் மூலமாக வளர்ந்து தன்னைக்
காத்திட அந்த ஞானத்தின் நிலைகள் எப்படிச் செயல்பட்டதோ அந்தத் தாவர இனச் சத்தை எல்லாம்
இந்தச் சிலைக்குள் சாரணையாகக் கொடுக்கின்றான்.
மனிதனான நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த
நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நல்லதை நம் உடலாக்கிக் கொள்கின்றோம்.
இதைப்போல இதற்கு நேர் எதிரிடையாக இந்த மனிதனின்
சிலையை உருவாக்கித் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்றும் நிலையாக ஆறாவது அறிவை முருகா
என்று காட்டினார் அந்தப் போகர்.
மண்ணுலகில் தன்னுடன் வாழ்ந்த மக்கள் அவர்களுக்குள்
அறியாது வந்த நஞ்சை நீக்கி மகிழ்ந்திடும் உணர்வின் தன்மையைப் பெருக்க வேண்டும்… விண்ணுலக
ஆற்றல் பெற வேண்டும் என்ற அந்த ஆசையுடன் தான் முருகன் சிலையைப் படைத்தார் போகர்.
முருகன் சிலையைப் பார்க்கும் மனிதர்கள் தனக்குள்
வரும் இருளை நீக்கி மெய் ஒளி காணும் உணர்வுகளைப் பெறச் செய்தார் போகர்.
அப்பொழுது அவர்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும்
பொழுது அந்த மகிழ்ச்சியான உணர்வின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியின் சுடராக மாற்றிச்
சென்றவன் போகன்.
இதைத் தெளிவாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றைய நிலைகளில் இந்தச் சிலையைப் போகர் உருவாக்கி
அதன் மீது நீரைச் சொட்டச் செய்தார். நீரின் நிலைகள் படும் போது வெப்பத்தால் சிலையிலிருந்து
ஆவியாக அலைகளாகப் படர்கின்றது.
சிலையை உற்றுப் பார்க்கும்போது அதிலிருந்து வரும்
அலைகளை அனைவரும் நுகர வேண்டும் என்பதற்கே அவ்வாறு வைத்தார் போகர்.
சிலையைப் பார்க்கும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?
எதை நுகர வேண்டும்?
1.முருக குணத்தைக் காட்டிய அந்தப் போக மாமகரிஷியின்
அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மனிதனான ஆறாவது அறிவின் தன்மை முழுமை பெற வேண்டும்.
3.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மெய்ப் பொருள் காணும் திறன் நாங்கள் பெற வேண்டும்
என்று ஏங்கி அந்தச் சிலையைப் பார்த்து நுகர வேண்டும்
அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால் நம்
வாழ்க்கையில் நம்மை அறியாது வரும் தீமைகளை மாற்றி நன்மையின் சக்தியாக அந்த ஒளியான நிலையை
நாம் பெற முடியும். கண்டு உணர்வின் வித்தினை தெளிவாகத் தெளிந்து தெளிந்திடும்
உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து அந்த உணர்வின் தன்மை தன் பார்வையால்
மகிழ்ச்சியாக இருக்கப்படுபவனைப் பார்க்கப்படும்
போது நமக்கு மகிழ்ச்சியும் வேதனைப்படும் ஒருவனை உற்றுப் பார்க்கப்படும் போது நம்மை
அறியாது வேதனையும் வருகின்றது. இதைப் போன்று
1.முருகன் சிலையை உற்று நோக்கி
2.அந்த உணர்வின் தன்மை எவெரெல்லாம் கவருகின்றனரோ
3.சிலையிலிருந்து வெளிப்படும் உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள்
சென்று
4.அறியாது வந்த தீமைகளை போக்கிடும் நிலைக்காகச்
செய்தான் அந்தப் போகன்.
5.இன்று அந்த மகரிஷியை யாராவது எண்ணுகின்றனரா?
6.அவர் காட்டிய அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று
எண்ணுகின்றனரா…?
உனக்கு நான் அர்ச்சனை செய்தேன்… அதனால் என்னை நீ
காப்பாற்று… என்ற நிலைகளில்தான் செல்லுகின்றோம்.
அந்தப் போக மாமகரிஷி
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
3.மகிழ்ந்த உணர்வின் அலைகளாகப் பரப்பும் நிலையைச்
செய்தான்
4.மனிதர் அனைவரின் உயிரைக் கடவுளாக மதித்தான்.
5.அனைவரும் தெளிந்த நிலைகள் கவர வேண்டும் என்று
ஏங்கினான்.
முருகன் கோயிலுக்குப் போனால் அர்ச்சனையும் இரண்டு
பழத்தைப் படைத்து விட்டு “என்னை நீ பார்த்துக் கொள்…” இதைத்தான் சொல்கின்றோம்.
மனிதனின் ஆறாவது அறிவைக் காத்திடும் நிலையாக அவன்
தெளிந்த உணர்வு கொண்டு விண்ணுலகம் சென்றான் போகன். ஒளியின் சுடராக இருக்கின்றான்.
மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கினான். நஞ்சினை
அடக்கிடும் உணர்வை மனித உடலிலே பெற்றான் அந்தப் போகமாமகரிஷி.
அந்தப் போகமாமகரிஷியை நாம் யாரும் நினைக்கின்றோமா…!