ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2026

ஞான சக்தி

ஞான சக்தி


தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். தியானம் எடுத்தவர்கள் தொழிலில் நஷ்டம்…” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
1.சிறிது நேரம் இப்படி எடுத்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால்…?” என்ற அந்த ஞானம் வரும்.
2.திலே எந்தக் குறைபாடு இருக்கின்றதோ அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி வரும்.
 
ஐயோ… நஷ்டமாகி விட்டது நாளை என்ன செய்யப் போகின்றோம்…! என்று பதட்டத்தை அங்கே கொடுத்து விட்டால் நல்ல சிந்தனை வராது.
 
தொழில் வகையில் நாம் வளர்கின்றோம் என்றாலும் கூட சிறிது நஷ்டம் ஆனால் தியானத்தில் வளர்ந்து வரும் பொழுது நஷ்டத்திற்காக நாம் இந்த தியானத்தைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால் அந்த உயர்ந்த உணர்வு வலுவாகும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்கிற பொழுது அது வலுவாகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்கி அனைத்தையும் சீர்படுத்தும்.
 
1.எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
2.தீமைகளைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.
 
கண்ணிலே தான் பார்க்கின்றோம் நினைக்கின்றோம் ழுத்து மூக்கு வழி சுவாசித்து உயிரிலே படுகின்றது. இதே கண்ணின் நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும்படிச் சொல்கின்றோம்.
 
அதே கண்ணின் நினைவு கொண்டு கவர்ந்த சக்தியை உயிரிலே இணைக்கின்றோம். இணைத்தவுடனே அங்கே வலுப்பெறுகின்றது.
 
1.மற்றவர்கள் சங்கடமான வெறுப்பான இந்த உணர்வுகள் பதிவாகி இருந்தாலும் உள்ளே செல்லாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.
2.இப்படி அதை முதலில் நிறுத்திப் பழக வேண்டும்… அது நம்மை இயக்கிவிடக் கூடாது.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே நிலை நிறுத்திப் பழக வேண்டும். கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளே கொண்டு போக வேண்டும்.
 
உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி நாம் நாம் பழக்கத்தைச் செய்து வைத்திருக்க வேண்டும்.
 
சந்தர்ப்பங்களில் அதை எடுத்து வரிசைப்படுத்தி நம் உடலில் எல்லா உறுப்புகளை உருவாக்கிணுக்களுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று வலு கொடுக்க வேண்டும்.
1.தாவது அந்த நேரத்திலே எச்சரிக்கை செய்து
2.துரு நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே வலுவை ஏற்றும் பொழுது
3.நமக்குள் எந்தத் தீமையும் உள்ளே புகாது தடுக்கப்படுகின்றது.
 
ஏனென்றால் வேதனையோ வெறுப்போ நஷ்டமோ கஷ்டமோ இது எல்லாம் வாலி சக்தி வாய்ந்தது…! ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.
 
தீமை வருகிறது என்று அதன் மேல் இச்சைப் பட்டால் அது வலிமை கூடி விடுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக வேதனையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்பட்டால் உயிரில் இணைகின்றது. அந்த உணர்வு கிரியை.
 
உயிரிலே பட்டவுடன் உடல் முழுவதும் சென்று அந்தச் சக்தி கிரியை ஆகிறது.
1.அகஸ்தியன் எப்படித் தீமையை நீக்கித் துருவ நட்சத்திரமாக ஆனானோ அந்த உணர்வின் ஞானமாக நம்மை இயக்கத் தொடங்கும்.
2.அது தான் ஞான சக்தி… ஆகவே தீமை புகாது தடுத்துக் கொள்கிறோம்.
 
ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் சர்வ சாதாரணமாகச் செயல்படுத்தலாம்.