ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2024

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

நல்லவர்கள் அனைவரையும் காக்க வேண்டும் என்றார் குருநாதர்


உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றேன் என்றால்
1.உணர்வின் இயக்கங்கள் மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?
2.நல்லவன் எப்படிக் கெட்டவனாகினான்…?
3.நல்லது செய்தே பிறருக்குக் கெட்டவனாகின்றான்… நல்லதைச் செய்தே தன் உடல் நலிந்து போகின்றது
4.நல்லவர்கள் குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் படுகின்றார்கள்…?
5.தவறு செய்யவில்லை நன்மை செய்தவர்களே பெரும்பகுதி இந்த நிலைக்கு ஆளாகின்றார்கள்.
6.நன்மை செய்தவனுடைய நன்மைகள் வளர வேண்டுமல்லவா..? அதற்கு வேண்டிய உபாயம் தேவையா இல்லையா…?
7.அதன் உணர்வுகளை நீ உணர்த்து நல்லவரை நல்லவராக்கு
8.தீமைகள் வரப்படும் பொழுது தீமைகளை அகற்றிடும் வல்லமையால் அவர்களை நல்லவராக்கும் உணர்வினை நீ செயல்படுத்த வேண்டும்
9.இதுவே நீ ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய சேவை என்றார் குருநாதர்.
 
ஒவ்வொரு உயிரும் அந்தந்த உடலை ஆளுகின்றது அப்படி ஆளும் அந்த ஆண்டவனுக்கு அந்த உடலில் சிந்தனையுடன் செயல்பட்டு அந்த உயர்ந்த குணங்களை பரப்பும் நிலைகள் பெற வேண்டும்.
 
அந்த உடலில் உள்ள நல்ல உணர்வுகள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் ஒவ்வொரு உயிரான ஆண்டவனுக்கு நீ சேவை செய்கின்றாய்.
 
ஒவ்வொரு ஈசனுக்கும் உருவாக்கும் தன்மை கொண்டு உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டும் என்றால் உன் உயிரான ஈசன் உனக்குள் அந்த உணர்வினை வளர்க்கின்றது.
 
இந்த உணர்வினைச் சொல்லும் பொழுது அவர்கள் செவிகளில் விழுந்து இருளை அகற்றும் உணவுர்கள் அங்கே பெருகுகின்றது. ஆகவே உன்னுடைய சேவை எதுவாக இருக்க வேண்டும்…? என்று வினா எழுப்பினார் குருநாதர்.
 
வ்வொரு மனிதனின் உயிரையும் ஈசனாக மதி…! அவனால் அமைக்கப்பட்ட உடல் என்பதை ஆலயமாக மதி…! இந்த உணர்வால் நுகரப்பட்ட சிவமென்று அந்த உடலை மதி…!
 
அந்த உணர்வின் தன்மை கண்கள் வழிகாட்டி மனிதனை உருவாக்கிய கண்களே கண்ணனாகின்றது. வேதனை என்ற உணர்வை அடிக்கடி நுகர்ந்தால் கண்களிலே அது படப்பட்டுக் கண் நாளடைவில் தெரியாது போகின்றது. கரு விழியில் விஷம் தோயப்படும் போது நல்ல உணர்வை அறியாது போகின்றான்.
 
கண்கள் பிறக்க எத்தனை உபாயங்களைக் கையாண்டது…? தான் பார்க்க வேண்டும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை எண்ணத்தால் எண்ணி எண்ணித் தான் முதலிலே கண்கள் உருவானது.
 
கண்கள் உருவான பின் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வினை வேகமாகக் கூட்டுகின்றது. தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கி மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது.
 
கண்களால் தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதைத் துடைக்கத் தவறினால் வேதனை என்ற உணர்வுகள் அடிக்கடி கண்ணின் கருவிழிகளிலே பட்டால் அதைக் கவரும் தன்மை ஆகி விடுகின்றது.
 
அப்போது கருவிழிக்கு இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்கள் விஷத் தன்மையாகி அது பலவீனமானால் கண்கள் தெரியாது போய் விடுகிறது. ஆகவே கண்ணனுக்கே நாம் தீங்கு செய்கின்றோம்.
 
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிரான ஈசன் மனித உடலை உருவாக்கியது
1.நாம் எடுக்கும் உணர்வுகள் சீராகச் செயல்படவில்லை என்றால் இந்த உடலுக்குள் உடலான சிவனுக்கே துன்பம் செய்கின்றோம்.
2.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அடிக்கடி வேதனைப்பட்டால் உயிரான ஈசன் வெளியே சென்று விடுகின்றது.
 
இந்த உடலின் ஆசைக்கு வளர்த்துக் கொண்ட உணர்வுகள்… எதை எதை எல்லாம் எண்ணி வேதனைப்பட்டோமோ விஷத்தின் அணுக்கள் விளைந்து உயிர் வெளியே சென்ற பின் இந்த உடல் சவமாகி விடுகிறது நீசமாகி விடுகின்றது.
 
உடல் நீசம் ஆகிவிட்டால் நாற்றமாகிறது… அருகிலே நாம் செல்ல முடிகின்றதா…? செல்வந்தராக இருந்தாலும் பாசத்துடன் வாழ்ந்து இருந்தாலும் உடல் நீசமான பின் அருகிலே நிற்க முடிவதில்லை.
 
இயற்கையின் உண்மை நிலைகள் இவ்வாறாகும் பொழுது நாம் அணுக வேண்டியது யாரை…?
1.அருள் உணர்வுகள் பெற வேண்டும்
2.இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும் ன்ற இந்த உணர்வினை உயிருடன் ஒன்றச் செய்தால் இருளை அகற்றும்.
3.இருளை அகற்றினால் மகிழ்ச்சி என்ற உணர்வை ட்டும்.
4.மகிழ்ச்சி என்ற உணர்வை ட்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தால்
5.நமது வாழ்நாளில் இருளை அகற்றும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறும்.
6.அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
 
ஆகவே… மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! மனிதனான பின் தீமைகளை நீக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?

பகலிற்கு மேல் “இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது” என்பதனை உணர்ந்திருக்கின்றோமா…?


நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம்தான் இந்நிலையில் இருந்து நம் எண்ணத்தை அவ் ஓம் என்ற ஜெபத்துடனே சுழல விட்டு நம் ஆத்மாவையே அவ் ஓம் என்ற ஜெபத்துடன் சுழல விட வேண்டும்.
 
காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல…
1.பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்
2.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
3.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்ணத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி
6.அதன் எண்ணக் கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில்தான் நமக்கு ஏற்படும் கனவுகளில்
7.நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல் நிலைகள் எல்லாம் நாம் நம் கனவில் காணுகின்றோம்.
 
உடலை விட்ட ஆத்மாக்களுக்குத் தான் உணவுமில்லை உறக்கமும் இல்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில் அதனுடைய எண்ண நிலைக்கேற்ப ஆத்மாக்களை இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து தன் எண்ணத்தைச் செயல்படுத்த நம் வட்டத்திற்குள் வந்து நம் எண்ணத்தைத் தூண்டுகிறது.
 
இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு நம் நினைவில் வருவதை வைத்து அதே எண்ண ஓட்டத்தில்
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே கனவு பலித்திடும்…! என்று செப்புகின்றனரே என்ற எண்ணத்தில் மோதவிட்டு
2.அதே நினைவுத் தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து
3.அதன் தொடர்ச்சியில் நம் செயல்நிலை இழுக்கப்படுகின்றது.
 
நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்நிலையே. கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர்பு கொள்கின்றன.
1.பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை
2.பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகிறது என்பதனை உணர்ந்தீரா…?
 
நாம் உறங்குவதற்கு முன் ஒரு நிமிடம் நம்மையே அஜ்ஜெபமுடன் கலக்கும் நிலைப்படுத்தி
1.நம் தாய் தந்தையரை வணங்கி நம் இஷ்ட தெய்வமான எத்தெய்வமாய் இருந்தாலும் சரி
2.அவ் ஓம் என்ற நாதத்துடன் ஓம் ஈஸ்வரா ஓம் இயேசுவே ஓம் முகமது நபியே என்று ஒரே எண்ணத்தில்
3.அவரவர்கள் பக்தி கொண்டு பூஜிக்கும் அவ்வாண்டவனின் ஜெபத்தையே  உறங்கும் முன் ஜெபித்துக் கொண்டே உறங்கிடல் வேண்டும்.
 
அப்படிப்பட்ட உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ் ஓம் என்ற ஆண்டவனின் ஜெபமே சுழன்று கொண்டே இருக்கும்.
1.அந்நிலையில் நம் எண்ணமும் நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும் அதன் தொடரில் நாம் காணும் கற்பனை எண்ணங்களும்
2.இஜ் ஜெப நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதும் இல்லை பல கனவுகள் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.
 
நம் உயிராத்மாவும் நாம் உறங்கும் நிலையிலும் அமைதி கொண்டு நம்மைக் காக்கும் இவ்வெண்ணத்தினால்தான் ஒவ்வோர் உயிராத்மாவின் செயல் நிலை செயல்படுகின்றது.

November 21, 2024

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?

ஆடைகள் மூலமாக நமக்குத் தெரியாமலே நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்திருக்கின்றோமா…?


அக்ரிகல்ச்சரில் விவசாய நிலங்களில் களைகள் முளைத்தால் களைக் கொல்லிகளைப் போடுவார்கள். முதலிலே உழுகும் பொழுது களைக்கொல்லிகளை மண்ணிலே தெளித்து விட்டால் அந்தக்ளைகளுக்குக் கிடைக்கும் சக்திகளைக் குறைத்து விடுகின்றது.
 
ஆனால் அதே சமயத்தில் களைக்கு வரும் விஷம் வேறு பயிரினங்களுக்கு வரும் விஷம் வேறு. இதை மாற்றி அமைத்துத் தடுக்கும் சக்தி கொடுக்கப்படும் பொழுது விஷத்தின் ஆற்றலை அதிகமாகக் கொடுத்துப் பயிரினங்களை வளர்க்கச் செய்கின்றனர்.
 
பயிரினங்களில் விஷத்தன்மைகளைப் போட்டு வித்துக்களை வளர்க்கப்படும் பொழுது
1.களைகளை அடக்குகின்றது… பயிரைக் காக்கின்றது ஆனால் திலே விளைந்த வித்துக்களில் என்ன செய்கிறது…?
2.விஷம் கலந்த வித்துக்களாக உருவாகின்றது
3.மனிதன் இதைச் சுவாசித்து உணவாக உட்கொள்ளும் பொழுது விஷத்தின் தன்மை ரத்தத்திலே கலந்து
4.உடலில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தன்மை அடைந்து விடுகின்றது.
 
யிரைக் காக்க விஞ்ஞானத்தின் மூலம் மருந்துகளை உபயோகப்படுத்துகின்றான். ஆனால் அதே சமயத்தில் மனிதனுக்குள் இந்த நிலை ஆகிவிடுகின்றது.
 
இதே போல பருத்திச் செடிகளில் தண்டுப்புழு என்று உருவாகும். அதைக் கொல்வதற்காகப் பல விஷங்களை இடுகின்றனர் ஆனால் இப்படிப் போடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை பருத்திகளிலே கலந்து விடுகின்றது.
 
அப்படி விஷத்தின் தன்மை தோய்ந்தபின் அதைடையாக உருவாக்கும் நிலைகளில்
1.அந்த ஆடைகளை நாம் அணிந்தால் அந்த விஷத்தினைக் கவரும் நிலையாகின்றது
2.நம்மை அறியாதபடி உடலிலே பல நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.
 
ஆடைகளிலே விஷத்தன்மை கொண்ட பல கலர்களை இடுகின்றனர். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் அது எத்தகைய விமோ காற்றிலே அந்த விஷத்தின் தன்மை ஆவியாகப் பரவிச் செல்வதை ழுத்து நம் சுவாசத்திற்கு கொண்டாருகின்றது.
 
நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் சென்று ரத்தங்களிலே கலக்கப்பட்டு உடலில் விஷத்தன்மையாக பரவுகின்றது.
 
சிலர் கருப்பு நீம் இதைப் போன்ற நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிந்து சுவாசித்தார்கள் என்றால்
1.அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்
2.மனநோய் பிடித்த மாதிரி அடிக்கடி சஞ்சலமாகக் கவலை தோய்ந்தவர்களாக இருப்பார்கள்.
 
அந்த ஆடைகளில் இருக்கக்கூடிய நிலைகள் இவ்வாறு செய்து விடுகின்றன. ஆனால் அவர்களுக்கு அந்த ஆடை தான் பிடிக்கும். வெண்மையான ஆடையாக இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது.
 
விஷம் கொண்ட நிறங்களாகச் சேர்க்கப்படும் பொழுது அந்த நிறத்தை உருவாக்கும் ஆவியின் தன்மை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது
 
நம் உடலில் ஆடையாக அணிந்த நிலையில் காந்த்த்தால் ஈர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றி விடுகின்றது. சுவாசித்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வலைகள் ரத்தத்தில் கலந்து உடலிலே பெருகத் தொடங்குகின்றது.
 
அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சேலையைத்தான் அவர்கள் எடுப்பார்கள் நல்ல சேலைகளை ஒதுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த உணர்வு பெற்றபின் அதே உடைகளைத் தான் எடுப்போம் அந்த உணர்வுக்கொப்பதான் அது செயல்படுகின்றது.
 
கடந்த காலங்களில் அன்றைய ஞானிகள் இயற்கையின் உணர்வின் தன்மையை தாவர இனங்களில் இருந்து
1.விஷத்தை நீக்கும் தாவர இனங்களாக
2.ஒன்றுடன் ஒன்று இணைந்தால் விஷத்தினை நீக்கும் தன்மை பெற்று ஆடைகளுக்கு நிறத்தைக் கொடுத்தார்கள்.
 
தாவர இனங்களின் விஷத்தின் தன்மை
1.அந்த மணத்தைக் கண்ட பின் யானையோ, புலியோ நரியோ கொசுவோ அவைகள் விலகிச் செல்கின்றனவோ
2.அதைப் போன்ற நிலைகளை ஆடைகளிலே கலந்துவிட்டால் “விஷத் தன்மை கொண்ட கொசுக்கள் நம் அருகில் வருவதில்லை…”
 
ஏனென்றால் அனுபவரீதியிலே அந்தப் பச்சிலைகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வினைக் கலக்கச் செய்து சாயத்தை உடையிலே ஏற்றுவார்கள்.
 
இதே போன்று பண்டைய கால ஆலயங்களிலே பார்த்தோம் என்றால் பச்சிலைகளைக் கொண்டுதான் அங்கே வர்ணங்களைத் தீட்டியிருப்பார்கள். அதிலே கெமிக்கல் கலந்த சாயங்கள் கிடையாது.
 
கடந்த கால கோவில்களில் இதைப் போல வர்ணங்களைத் தீட்டப்படும் பொழுது அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை பதிவாகின்றது.
 
1.அந்தப் பச்சிலை விஷத்தின் தன்மைகளை எப்படி நீக்கியதோ அதைப் போல அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆன பின்
2.நம் உடலில் உள்ள விஷத்தின் தன்மைகளை நீக்கிடும் உணர்வைச் சுவாசித்து அதைக் கவரும் சக்தியாக நம் உடலில் உருவாகின்றது.
 
இது எல்லாம் மெய் ஞானிகள் செய்த நிலைகள்.
 
பண்டைய கால கோவில்களுக்கும் இன்றைய ஆலயங்களுக்கும் இந்த வித்தியாசங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
 
இது எல்லாம் எதைக் குறிக்கின்றது…? விஞ்ஞானம் வளர வளர ஞ்ஞானமாக வாழ்கின்றோம்.
1.ஆனால் மெய்ஞானத்தால் ஞ்ஞானம் அகற்றப்படுகின்றது.
2.இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்

“நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை” நாம் பிரித்தெடுத்து வாழ வேண்டும்


காட்சி: பாட்டிலில் புனல் வைத்து திரவத்தை ஊற்றும் நிலை காட்டல்.
 
1.முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது.
2.“எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…
 
குப்பியில் புனல் வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டாய். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது. புனல் இல்லாவிட்டால் எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும் அத்திரவம் சிந்தி விடுகின்றது.
 
இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.
1.புனலைப்போல். நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம்
2.இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.
 
இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமித்தைத் தான் ஈர்க்கும்.
 
மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச்சத்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில் தான் அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும் செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.
 
இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில் தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.
 
இம்மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால்
1.அவ்வெண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.அவ்வெண்ண சக்தியின் தொடர்நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்
3.எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தின் அலையுடன்
4.நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.
 
நம் விழியை மூடிக்கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து நமக்கு எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே நாம் காணலாம்.
 
இக்காற்றில் உள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி வருகிறது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.
 
இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல் எம் மண்டலத்தில் இருந்தாலும் நம் உயிர் ஆத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.
 
இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக்காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும் பல பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தியும் பிற கருவியின் உதவி கொண்டு அங்குள்ள நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.
 
ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்புச் சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.
 
1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்… அச் சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
2.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.
 
இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால் தான் அந்நிலை பெறல் முடியும்.
 
சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு. இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.
 
இம் மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் இச்சக்தி நிலையுண்டு என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்காகச் செப்பவில்லை.
 
இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத் தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.
 
இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.
 
1.பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள்
2.பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளை எல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயே தான் வாழ்ந்தார்கள்.
 
இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்.
1.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றி
2.நமக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்தென்ன பயன்..?

November 20, 2024

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்

“துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் கொண்டு” தீமைகளை மாற்றியமைத்து விடலாம்


நம்முடைய மனித வாழ்க்கையில் பிறர்படும் கோப குணத்தினால் வரும் கார உணர்ச்சிகளையும்… வேதனை உணர்ச்சிகளையும் சுவாசிக்கப்படும் பொழுது எதிர் நிலையாகி
1.நம்முடைய மன நிலைகள் அதனால் மாறுகின்றது.
2.அப்போது உடலிலும்… நாம் உணவாக உட்கொண்டதை ஜீரணிக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.
3.நம் உடலில் எது அதிகமோ அதற்கும் இதற்கும் இந்தப் போராட்டங்கள் வருகின்றது.
 
இதைப் போன்று இயற்கை நியதிகள் வருவதனால் இதனால் ஏற்படும் விளைவுகளில் இருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் வேதனைப்படும் சொல்களையோ வேதனைப்படும் உணர்ச்சிகளையோ சுவாசிக்க நேரும் போதெல்லாம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ங்குங்கள் அந்த உணர்வுகள் என் உடல் முழுவதும் டர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.
 
என் உடலில் உள்ள ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
கண்ணின் நினைவு எவரை உற்றுப் பார்த்து அது பதிவானதோ அந்த உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படவேண்டும் என்று இணைத்து விட்டு அடுத்து
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மையானால்
2.அவன் செய்த வேதனை உணர்வை அடக்கி அந்த வேதனையைத் தனக்குள் வளர்க்காதபடி
3.பகைமை நமக்குள் வளர்க்காதபடி அந்த வீரிய உணர்வு தடுக்கப்பட்டு நல்ல உணர்வுகளாக நமக்குள் மாற்றிவிடலாம்.
 
ஆக இது எல்லாம் ஞானிகள் காட்டியது. சிறிது காலம் சிரமமாக இருக்கும்.. பழகிக் கொண்டால் எளிதில் கிடைக்கும்.
 
உதாரணமாக… ஒரு தையல் மிஷினில் தைப்பவர் போன்று நாமும் லேசாகத் தைத்து விடலாம் என்று எண்ணினால் உடனே முடியுமா…?
 
அவர் நம்மிடம் பேசிக் கொண்டே நேராக அழகாகத் தைத்து விடுவார் இந்த உணர்வின் இயக்கம் சீராக இருக்கும். நாம் கூர்மையாகப் பார்த்து செயல் செய்தாலும் அது எங்கே கோணல் மணலாக நெளிந்து போகும்.
 
ஆகவே தியானத்தைச் சிறிது காலம் சீராகப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் எதிர் நிலை வந்தால் டக்… என்று அதை மாற்றிவிடும்.
 
இன்று கம்ப்யூட்டர் மூலமாகப் பல நிலைகளை இயக்குகின்றார்கள்.திலே தவறு வந்துவிட்டால்
1.அது ஏன் வந்தது…? என்று உடனே அதை சரி செய்வதற்காக மாற்று அழுத்தங்களை அங்கே கொடுத்து வைத்திருக்கின்றார்கள்.
2.இந்த மாற்று அழுத்தம் வந்தவுடன் அந்தத் தவறை மாற்றி விட்டு மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
3.அதாவது… அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அழித்துவிட்டு அந்தத் தவறை மாற்றி நல்லதைப் பதிவு செய்கின்றார்கள்,
 
நாம் பேப்பரிலே எழுதும் போது தவறானால் அதை அழிக்கின்றோம். ஆனால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் எனும் முறைப்படி கம்ப்யூட்டர் இயங்குகின்றது ஒரு பொருளின் ரூபம் வரும்பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு சீராக வரவில்லை என்றால் உடனே அழுத்தத்தை மாற்றி வேண்டிய உணர்வுக்கொப்பச் சீராகக் கொண்டு வருகின்றார்கள்.
 
கெமிக்கல் கலந்த உணர்வுகளில் அந்த உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ மாற்றுகின்றது. விளக்குகள் எப்படிச் சிறிதாகவும் பெரிதாகவும் எரிகின்றதோ அதைப் போல் அந்த எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒளியின் நிலைகளை உருவாக்குகின்றார். அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது விஞ்ஞானி இப்படிச் செய்கின்றான்.
 
இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்த்த வேதனை உணர்வுகள் நல்ல உணர்வுகளுடன் அது கலந்து எலக்ட்ரானிக்காக மாற்றி இதை அழித்து அதன் உணர்வைக் கொண்டு வருகிறது.
1.ஆனால் நம்முடைய நினைவைத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்தி அந்த அழுத்தத்தைக் கொண்டு வந்தால்
2.அவன் செய்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு நம்மைத் தெளிவாக்கும்.
 
நம் உயிரும் எலக்ட்ரிக் தான்… நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக் விஞ்ஞானிகள் இதை நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.
 
அன்று அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை அண்டத்திலே பாய்ச்சினன் தன் உடலின் உணர்வுகளை அறிந்தான். அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அதன் உனர்வின் ஆக்கங்கள் கோள்களின் நிலையும் அகண்ட அண்டத்தையும் அறிந்தான் அகஸ்தியன்.
 
அந்த உணர்வின் தன்மை அவனுக்குள் விளைந்தது நமக்கு முன் அந்தச் சக்திகள் காற்றிலே பரவி உள்ளது.
1.நமது குருநாதர் அதைக் கண்டார்… தனக்குள் பெற்றார்.
2.அதை எனக்குள் பதிவாக்கினார் இதை நினைவு கொள் என்றார் அதன் வழி நீ கடைப்பிடி என்று சொன்னார்
3.அதன் வழி அறிந்து தான் உங்களிடம் இப்பொழுது பேசுகின்றேன்.
4.கல்வியால் கற்றுணரவில்லை எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை
5.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன் நினைவு கொண்டேன் அறிய முடிகின்றது அதைத்தான் இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன்.
 
இந்த உணர்வினை நீங்கள் பதிவாக்கி விட்டால் நினைவு கொண்டால் அருள் ஞானிகள் பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம் உங்களுக்குள் வரும் இருளை மாற்றி அமைக்கும் சக்தி பெறுவீர்கள்.
 
இவ்வாறு எதை நீங்கள் மாற்றி அமைக்கின்றீர்களோ
1.அந்த உயர்ந்த சக்தி உள் நின்று கடவுளாக
2.தீமைகளை நீக்கிடும் உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா

ஒரு நிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா


எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம். எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.
 
உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும்.
1.அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது
2.எல்லா உயிரணுக்களும் ஒருநிலைப்பட்டுத் தியானத்தில் உள்ள நிலையில் இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.
 
அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டுவிடுகின்றது. ஒரு நிலைகொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை, அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எவ் அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.
 
அவ்வுடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்.. அமரலாம்.. உறங்கலாம், நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம். அவ்வுடலில் பின்னப்படாவண்ணம் எச்செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.
 
இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.அவ்வுயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.அவ்வுயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது.
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான்நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.
 
எம் மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும். நம்மை எதிர்நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.
 
தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின் இல்லத்தையும் அவர்களின் உடலையும் அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும் எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய்ச் செயல் கொண்டிடும்.
 
எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால் நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.
 
அன்பு தியானத்தை ஒரு நிலையுடன் வழி பெற்று இன்றைய காலநிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ் உலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்தவும் ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி இன்றைய அரசியலும் சரி ஆலயங்களும் சரி பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது.
 
இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில் இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன் அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவைச் செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது அவ்வாத்மா.
 
தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த‌ மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.
 
இன்னும் நமது நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி
1.அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து
2.“உண்மை வழி என்ற போர்வையில் வாழுகின்றனர்.
 
இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலை தொட்டே இவ் ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டுதான் பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டையிட்டுப் போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.
 
அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு வழி வழியாய் எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.
 
எவ்வுயிரணுவும் தான் அழிவதில்லையே..! இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலை கொண்ட ஜெப சக்தியில் சலிப்பு, கோபம், குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
2.நமது ஆத்மாவை ஒருநிலை கொண்ட ஜெபத்தினால் ஒன்றினால் மட்டும்தான் நல்வழி கொண்டிட முடியுமப்பா.

November 19, 2024

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?

மனிதனின் வாழ்க்கையில் இனி எங்கே செல்வது…?


கஸ்தியன் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல் உறுப்புகள் மாறியது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றான்… துருவ நட்சத்திரமாக உள்ளான்.
 
மின்னல்கள் வருகிறது என்றால்
1.வெள்ளிக்கோள் அதை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல்
2.மின் கதிர்களானால் அந்த ஒளியின் தன்மையை அகஸ்தியன் கவரும் போது
3.அவன்ன் உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல பரிமணம் ஆகின்றது.
4.அணுக்கள் பரிமாணமாகப்படும் பொழுது விஷத்தின் தன்மை உமிழ்த்தி விஷத்தையே ஒளியாக மாற்றம் திறன் வருகின்றது.
 
பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மை எடுத்துக் கொள்கின்றது. அந்த விஷம் சேமிப்பாகும் போது நாளடைவில் வைரமாக மாறுகின்றது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
ஆக… விஷத்தின் ஆற்றலானாலும் அந்த வைரத்தைத் தட்டிச் சாப்பிட்டால் ஆளை உடனே கொன்றுவிடும். ஆனால் வெளிச்சம் தருகின்றது.
 
இதைப்போல தான் விஷத்தை ஒடுக்கும் உணர்வு பெற்ற ஒளியின் தன்மை ஆன பின்
1.துருவ நட்சத்திரம் எத்தகைய வித்தின் தன்மை வந்தாலும் தனக்குள் அதை ஒளியாக மாற்றுகின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தில் ஒரு துளி அளவு நாம் நுகரும் தன்மை வந்தால் விஷத்தினைக் கொல்கிறது.
3.அந்த விஷத்தின் தன்மையைக் கொல்லும் நிலை வரும் போது தீமையை அடக்கித் தனக்குள் ஒளியின் உணர்வாக மாற்றுகின்றது.
 
இந்தக் காற்றிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகாலை நீங்கள் கவர்ந்தால் உங்களுக்குள் வரும் விஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்… அதை ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.
 
விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் பாம்பினம் அந்த விஷம் அதிகரித்து உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
 
இதைப்போல தான் அகஸ்தியன் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆனது. அந்த நிலையை நாமும் பெறச் செய்தல் வேண்டும்.
 
உங்களுக்கு யாம் இதை உபதேசித்தது வீண் அல்ல…!
 
எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா பாவி…! என்று அமெரிக்காவில் இருந்து நினைத்தாலும்… இங்கே கார் ஓட்டிக் கொண்டிருந்தால் சிந்தனை இழந்து விபத்து ஆகின்றது.
 
உணவு உட்கொண்டு கொண்டிருந்தால் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது. ஒரு பருக்கை சுவாசிக்கும் சுவாசப் பையிற்குள் சென்றால் மரணமே ஏற்பட்டு விடும்.
 
இதைப்போல நாமும் துரோகம் செய்தான் என்று எண்ணினால் நமக்கும் நல்லது செய்யவிடாதபடி தடையாகிறது. அங்கேயும் இடைஞ்சலாகிறது. ஒருவருக்கொருவர் இப்படி இரண்டு பேருமே பாழாகும் நிலை வருகின்றது.
 
அதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
1.நான் பதிவு செய்ததை நீங்கள் எண்ணி ஏங்கி .எடுத்தால்
2.உங்களுக்குள் அந்தச் சக்தி இயக்கச் சக்தியாக மாறி
3.உங்களையும் ஒளியின் சிலராக மாற்றும்.

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்

“அழுக்குப்படிகிறதே” என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது… அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்


நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா...?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
 
புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா...?
 
அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.
 
1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.
 
நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் நான்என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.
 
1.நான்... எனது... என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனைப் பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி அந்த நிலை அந்த நானாகிவிடுகின்றது…
 
பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்... மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.
 
 இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் நான் என்ற நிலையில்தான்... அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது...!
 
பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்...? என்ற வினா எழும்பலாம்.
 
பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்... உண்மைதான்…!
 
ஆனால்... அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.
 
தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்.
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.
 
ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் இச் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்திக் குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்.
 
இன்னும் ஒரு சாரார் அப்பக்தியை பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்.
 
இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும் அவ் ஆண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு மடாலயம் கட்டி மதகுருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.
 
எல்லா மதத்திலும் இந்நிலை தான்.
 
உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன. இதிலிருந்து எல்லாம் நமது ஆத்மாவை
1.எல்லாமில் எல்லாமாய் அவன் அருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே
2.எல்லாவற்றுடனும் எல்லாமாய்த் தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
3.அழுக்குப்படிகிறதே என்று அஞ்சி ஒதுங்கிடலாகாது. அழுக்கை அகற்றிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
 
மண்ணில் இருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் இதையா நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்.
 
அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.
 
அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளது என்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?
 
மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்குதலாகாது.
 
ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட
1.அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப்போல்
2.உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.
 
வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள் தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.
 
குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபம் இருக்கும் ஆத்மாவானாலும் சரி
1.அவ் ஆத்மாவும் உடலைவிட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
2.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகிறேன்.
 
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் நம் எண்ணமுடன் கூடிய சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்து தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.
 
ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல் உணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாக நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்திட வேண்டும்.
 
இதை உணர்ந்து
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழிமுறை பெற்று எல்லாமே ஒளிரச் செய்ய வேண்டும்.