ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 18, 2026

வேதனையைக் குறைக்கும் வழி

வேதனையைக் குறைக்கும் வழி


உடலிலே வலி வந்து விட்டால் அம்மம்மா மேல் வலிக்கிறதே…!” என்று அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கின்றோம். ஏதாவது தொல்லைகள் வந்து விட்டால் அதை ண்ணும் பொழுது அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.
 
1.சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி அதை நிவர்த்தி செய்யலாமா…? என்றால் முடியாது சந்தோமான வார்த்தை அங்கே எதிரி ஆகிறது.
2.வேதனைப்படும் நேரத்தில் யாராவது சந்தோஷமாகப் பேசுவதைப் பார்த்தால் அது உடனே எதிரியாக மாறுகின்றது.
 
ஆனால்… இந்த எதிரிகளை வென்றவர் யார்…? சந்தோஷத்தை ஊட்டியது யார்…? அந்த மகரிஷிகள்.
 
அந்த மகரிஷிகளை நாம் எண்ணும் பொழுது அதற்கு ஆகாரத்தைக் கொடுத்த பின் வலுவாகின்றது. அப்பொழுது உயிரான ஈசனிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்…?
 
1.யாம் பதிவு செய்த மகரிஷிகள் உணர்களை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.
 
மற்றவருடைய குறைகளையோ வேதனைகளையோ கண்ணுற்றுத் தான் நாம் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசத்தின் வழி இழுத்து அகக் கண்ணாக இருந்து…” உயிர் உணர்த்துகின்றது. அகக் கண்ணாக இருந்து பதிவு செய்து மீண்டும் நினைவு கொடுக்கின்றது.
 
அதே சமயம் நமது புறக்கண் படம் எடுத்து ஆத்மாவாகி உயிருடன் ஒன்றும் போது தான் அந்த உணர்வை அகக் கண்ணாகக் காட்டுகின்றது.
1.ஆனால் மகரிஷிகள் உணர்வைப் பதிவு செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது இந்த ஆன்மாவிலிருந்து வருவதைத் தடைப்படுத்துகின்றது.
 
வேதனை அதிகமாக இருக்கிறது என்றால் ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உயிர் வழி சிறிது நேரம் செலுத்தினால் மூச்சு திணறலோ உடலில் வலியினால் ஏற்படக்கூடிய வேதனையோ உபாதைகளோ து குறையும்.
 
முதலில் எடுக்கவே விடாது.
 
இருந்தாலும் ந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று
1.அந்த உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது
2.சிறுகச் சிறுக வலிகள் தணியும்செய்து பாருங்கள்.