ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2025

திரு + பதி = திருப்பதி

திரு + பதி = திருப்பதி


தாய் சக்தியுடன் ஒன்றிட்டே செல்வநாயக சூத்திரம் பெறும் ஸ்ரீனிவாச கொங்கணரும்
1.மலைமுகட்டுக் குடிசை முன் (இப்பொழுது வெங்கடாஜலபதி கர்ப்பக்கிரகம் உள்ள இடத்தில்) தவமியற்றும் மாமுனி
2.தாயம்மை புதைக்கப்பட்ட இடம் கடும் மழைநீரால் கரைந்து அவ்விடம் கரைவெய்தி காந்தப் பாறை எனும் சுயம்புஉள்ளடங்கி
3.உள்ளே ஓர் பெரும் பாறைப் பகுதி வெளிப்பட்டுவிட அதன் மேலே அமர்ந்து காந்த நீர் சக்தியை ஈர்த்து
4.தன் அவதார மகிமையை வெளிப்படுத்தியது என்பது எல்லாம் சூசகமாய் மறைக்கப்பட்டு விட்டது.
 
பரணி தரணி ஆளும் என்கின்ற சொல் சூட்சுமத்தில் எலும்புகளுக்கு சரீரம் தொட்டு வலு நிலை கூடி அதன் ஈர்ப்பின் தொடரில்
1/பரணி நட்சத்திர அமில சேர்க்கையின் செயல்பாட்டில் ஒளி காந்தத்தைக் கூட்டி கூட்டித்
2.தக்க வைத்துக் கொள்ளும் சேமிப்புக் கிடங்காய் செயல் கொண்டிடும் சூட்சுமத்தில்
3.அறிவின் சூட்சுமத் தொடருக்கு கார்த்திகை அமில குண சேமிப்பும்
4.சூரிய ஒளி காந்தத்தை ஈர்க்கும் தொடரில் சமைக்கும் சமைப்புக்கு மூலமாய்
5.விஷ்ணு சக்தி எனும் சந்திரன் ஒளி காந்தத்தையும் சேர்த்து எடுக்கும் சமைப்பும் கலந்திட்ட நாளே அந்நந்நாள்.
 
அந்நாளிலே அவ்விடப் பதிகொண்ட காரணம் தொட்டே திருஎன்று அடைமொழி சேர்க்கப்பட்டு திருப்பதிஎன்ற சொல் வழங்க காரணமாயிற்று.
 
அபூர்வமாய் ஏற்படும் இந்நாளில் அப்பதிதனில் தவமியற்றப்பட வேண்டும். செல்வம் தொட்டு இல்லாவிட்டாலும் மண்டல செயல் நிலைப்பட அருளாசி வேண்டித் தவமியற்றப்பட வேண்டும்.
 
கொங்கணச் செல்வ நாயகன் கொலுவிருந்த அப்பதியின் பத்மாவதி ஸ்ரீனிவாசனுமாய் கோடி வீட்டுப் புருஷனே குபேரனாய் மாடி வீட்டின் அரசனாய் மருமகனுமாய் ஆன கதைத் தொடர் விசேஷம்.
 
பதினாறு வயதுடைய வாலிபனுக்கு ஏற்பட்ட அனுபவ ஞானம் என்பது விசேஷம் மட்டுமில்லாது அவன் ஜெப வழித்தொடருக்கு வைராக்கிய சிந்தனைக்கு வலுக்கூட்ட வந்த சக்திதான் எத்தனை எத்தனை…?
 
தாய் சக்தி பெற்ற தன் சக்தியையும் வலுக்கூட்டிக் கொண்டு வாலிபனாய் உலா வரும் பொழுதே தன் ரிஷி சக்தியின் தொடருக்கு வலுக்கூட்டும் சக்தி மண்டலமாய்
1.வாக்தேவி, அன்னபூரணி, அஷ்டலட்சுமி எனும் நட்சத்திரத் தொடரில்
2.அஷ்டலட்சுமி நட்சத்திர சக்தியின் தொடர்பே பத்மாவதி என்னும் தொடர்பையும் அறிந்து கொண்டு
3.அஷ்டலட்சுமி சக்தி தன்மையின் அவதார நிகழ்வே தன் சக்திக்கு மேலும் சக்தியூட்டும் என்பதறிந்து
4.மணமுடிக்கும் மார்க்கமாய் கொண்டு வந்த குபேரப் பொருள் எங்கிருந்து வந்தது…?
 
இந்தக் கேள்வியின் ஞானத்திற்கு சித்தின் செயல் தொடரின் பரிணாம முதிர்வே மாமுனிவன் சக்திக்கு சக்தியூட்டும் வகுளாம்பிகை தாய்சக்தி மூலம் பெறப்பட்ட தொடரெல்லாம் சூட்சுமமே.‌..!
 
பத்மாவதி எண்ணம் ஸ்ரீனிவாசன் மேல் விழுந்தவுடன் அக்கணமே கொங்கண மாமுனி தன் சக்திக்குச் சக்தியூட்ட அவதார மகிமையின் மூலம் செல்வநாயகனான நிலை முழுமை பெற்றுவிட்டது…
 
கொங்கண மாமகரிஷி தன் மண்டல செயலுக்கு வரும் முன்பு பத்மாவதி நாயகன் என்ற தொடரில் தவம் இயற்றும் தவ வாழ்வு செல்வநாயகனான பின்பு தான் அதிகப்பட்டுவிட்டது.
 
பத்மாவதி அம்மன் தன் நாயகனின் ரிஷி சக்திக்கு பக்கபலமாய்த் தன் ரிஷி பத்தினி சக்தியை ஒன்றச்செய்து ஒழுகும் இல்லறப் பயன் வாழ்வில் கொங்கணர் மாமகரிஷி சக்தி பெறவே ஓர் திருப்புமுனை ஏற்பட்டது.
1.அது பத்மாவதியும் தன் தவத்தின் முழு சக்தியையும் கணவருடன் ஒன்றிச் செயல் கொண்டிட மூல சக்தியாய் கலக்கும் செயலுக்கு
2.தன் பூத உடல் நீத்துத் தன் கணவருக்கு வலுக்கூட்டிட்ட சூட்சும சக்தியான மூலத்தில் கலந்ததுதான்.
 
அதன் பின் மலை முகட்டுப்பாறை மீது தவமியற்றும் மகரிஷி சக்தியாய் சக்தி பெறும் மார்க்கம் வந்துற்ற பொழுதே அவருடன் ஒன்றி வழி நடந்திடும் தாய் சக்தி வழிகாட்டியாய் அவருக்கு அமைந்த விதம் விண்டுரைக்க முடியாதது.
 
1.ரிஷித் தன்மை பெற்றுவிட்ட கொங்கண மகரிஷியால் அமைக்கப்பட்ட விஸ்வரூப சிவலிங்கம் தவமிருந்த பாறையின் உள்ளிருக்கும் குகை அமைப்பும்
அதனுள் எழுந்த சுயம்பு காந்த பாறையும்.. காந்த சுயம்பு மேல் அமைக்கப்பட்ட விஸ்வரூப சிவலிங்கமும்
3.நீர் காந்த சக்தி தாரையாய் அந்த லிங்கத்தின் மீது வர்ஷிக்க அதன் எதிர் அமர்ந்து தன் சரீரத்தைப் பக்குவ கதியாக்கி
4.உயிரான்ம சக்தியின் ஈர்ப்பினால் மின்காந்த சக்தி பெற்று தனக்கென ஓர் மண்டலமாய் உருமாறும் சக்தியை உருவாக்கி
5.இன்றோ மண்டலத் தன்மைக்கும் சென்றிட்டார்…!