ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2025

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்

துருவ நட்சத்திரத்தின் பேராற்றல்


நாம் யாரும் தவறு செய்யவில்லை…! அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டு தான் வாழ்கின்றோம். பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து விடுகின்றோம்
1.நம் உயிரிலே தான் படுகின்றது
2.அதன் உணர்வுகள் நமக்குள் கருவாகின்றது இந்திரலோகமாக மாறுகின்றது
3.கருவாகிப் பின் உருவாகி விடுகின்றது.
 
பிறிதொரு மனித உடலில் விளைந்த தீமையின் உணர்வுகள் அந்த விஷத்தன்மை நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும் ஊடுருவி அதை கருவாக்கி அணுக்கள் மாற்றமாகும் தன்மைக்கே வருகின்றது.
 
இதை நல்ல முறையில் மாற்றிக் கொள்வதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?
 
இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் துருவன்… அவன் துருவ மகரிஷியாக ஆனான் துருவ நட்சத்திரமாக ஆனான். திலிருந்து வெளிப்படும் சக்திகள் இன்றும் என்றும் வந்து கொண்டே உள்ளது.
 
உயிர் தோன்றி மனித உணர்வின் தன்மை பெருக்கிய பின் இன்றும் அகஸ்தியன் ஒளியின் சரீரமாக இருக்கின்றான்.
1.அதைக் கவர்ந்து தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் இந்த இருளை அகற்றி
2.உடலுக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றது.
 
இன்று விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து பல ஆயிரம் ஆண்டு காலம் வாழலாம் என்று சொல்கின்றான்.
1.ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியோ என்றும் ஏகாந்தமாக பல கோடி ஆண்டுகள் வாழும் நிலை
2.இந்தச் சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.அகண்ட அண்டத்திலிருந்து வரும் தூசுகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம் மனிதனான நாம்.
 
எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கியவன் அகஸ்தியன். அவன் எந்தத் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு ஒவ்வொரு பொருளின் தன்மையையும் மாற்றி செயல்படுகின்றான்.
 
எப்படி…?
 
இன்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது உணர்வின் அதிர்வுகளை வைத்து எதன் அதிர்வோ அதை மாற்றி அமைக்கும் பல நிலைகள் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.
 
ஒரு பாஷையில் எழுதினால்
1.அதில் எலக்ட்ரான் என்ற மோதலுக்கொப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் போன்ற உலகில் உள்ள நூறு பாஷைகளை மொழிபெயர்ப்பு செய்கின்றான்
3.உருவத்தின் அமைப்பையும் கொடுக்கின்றான் அதிர்வின் நிலைகள் கொண்டு.
 
இதெல்லாம் நாம் இன்று பார்க்கின்றோம் அல்லவா…!
 
எதன் உணர்வின் விஷத்தன்மை கலக்கின்றானோ இந்த உணர்வுக்கொப்ப இணைத்தால் து இன்ன ரூபமாகும்…” என்று ஒரு நொடியில் செய்து விடுகின்றான்.
 
நாம் படித்து அர்த்தம் கண்டு பல நிலைகள் எழுத்து வடிவிற்குக் கொண்டு வருவதற்கு முன் ஒரு நொடிக்குள் நூறு உணர்வை மாற்றிக்கொண்டு வருகின்றான் விஞ்ஞானி…”
 
அதைப் போன்று
1.ஒரு நொடிக்குள் ருள் உணர்வின் தன்மை பெற்று
2.தனக்குள் வருவதை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றார்கள்.
 
மனிதனானவன் தன் இனத்தின் தன்மை கொண்டு வாழப் படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று அங்கே செல்ல முடியு,
 
நம் தாய் தந்தை முன்னோர்கள் குல வழியில் வந்தவர்கள் அவர்கள் இதற்கு முன் விண் செல்லத் தவறினார்கள்.
1.இப்போது நாம் அதைப் பெற்ற பின் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்
2.அவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் கூட அதிலிருந்து வெளிவந்த பின்
3.நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வு கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.
 
துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் பெருக்கிப் பெருக்கி உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களை எளிதில் வின் செலுத்த முடியும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழச் செய்ய முடியும் பிறவி இல்லாத நிலை அடையச் செய்ய முடியும்.