ஞானிகள் காட்டிய நெறி
நமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வெறுப்பு வேதனை சலிப்பு,
சஞ்சலம் நம் உடலுக்குள் நுகர்ந்த இவை அனைத்தும் வினையாகச் சேர்த்து அந்த உணர்வுகள் மாற்றமடைகின்றது. அப்படி மாறாது பாதுகாத்துக்
கொள்ள வேண்டும் அல்லவா.
அதற்குத்தான் விநாயகருக்கு அருகிலே
வேம்பையும் அரசையும் வைத்தது.
நாம் காலையிலிருந்து நுகர்ந்த
உணர்வுகள் அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று
சதாசிவமாகிக் கொண்டே உள்ளது.
ஆனால் நல்லதைத் தான் எண்ணுகின்றோம்.
1.ஒருவன் தவறு செய்கின்றான்
என்றால்
2.அதை நுகர்ந்து நாம் வேதனைப்படுகின்றோம்.
குழந்தைகளை நல்ல முறையிலே வளர்க்க
வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்… வேண்டிய
உபகாரத்தையும் செய்கின்றோம்.
1.ஆனால் சொன்னபடி அவன்
கேட்கவில்லை என்றால் வேதனையைத் தான் நுகர்கின்றோம்.
2..நம் நல்ல குணங்கள்
அனைத்தும் வேதனை கலந்து விடுகின்றது
ஒருவருக்குக் கடனைக் கொடுத்து உதவி
செய்கின்றோம் குறித்த காலத்திற்குள்
1.கொடுத்த பணம் வரவில்லை
என்றால்
2.“நான் கொடுத்தேன் அவர்
திரும்பத் தரவில்லையே…” என்று வேதனைப்படுகின்றோம்.
வியாபாரம் நன்றாகச் செழித்து வளரும் என்று எண்ணுகின்றோம். புதிதாகக் கடை வைக்கும்
பொழுது செழித்து வருகின்றது. அடுத்து அது குறைந்தால் நாம்
வாங்கியவர்களுக்கு பணத்தைக் கொடுக்க முடியவில்லை மற்ற நிலைகளைச் செயல்படுத்த முடியவில்லை வட்டி கட்ட
முடியவில்லை என்றெல்லாம் எத்தனையோ எண்ணி வேதனைப்படுகின்றோம்.
இந்த வாழ்க்கையில் எந்த நல்லது பெற
வேண்டும் என்றாலும் இந்த வேதனைகளைச் சுவாசிக்கும் போது அது அனைத்தும் விஷம். ஆக இந்த உணர்வுகள் வினையாக
வளர்கின்றது.
இப்படி வளர்ந்து விட்டால் வேதனை வேதனை
என்ற உணர்வு வரும் பொழுது கை கால் குடைச்சல் மூட்டு வலி இதைப் போன்ற உணர்வு நம் உறுப்புகளில் விளையத்
தொடங்கி விடுகின்றது.
நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் இப்படி வருகிறது. இதை நாம் துடைக்க முடிகின்றதா…? துடைக்க வேண்டுமா
இல்லையா…?
துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம்
கையிலே அழுக்குப் பட்டால் கழுவி விட்டுச் சாப்பிடுகிறோம். ஆனால் நம் ஆன்மாவில் பட்ட
அழுக்கினைத் துடைக்க வேண்டுமா இல்லையா…!
1.அதை நாம் எப்படிச் செய்ய வேண்டும்…?
2.எதன் வழி செயல்படுத்த
வேண்டும்…? என்பதற்குத்தான்
3.வேப்ப மரத்தையும் அரச
மரத்தையும் விநாயகர் அருகே வைத்தது.
மனிதனின் வாழ்க்கையில் நல்லதைச் செய்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு கசந்த வாழ்க்கையாக மாற்றி விடுகின்றது. அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.
ஒருவருக்கு நாம் பணத்தைக் கொடுத்திருக்கின்றோம்…
பணம் வரவில்லை அப்பொழுது வேதனைப்படுகின்றோம்.
அந்த வேதனையை எண்ணும் பொழுது அது
நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
நான் இவ்வளவு
தூரம் கஷ்டப்பட்டேனே… பணத்தை அவர்
கொடுக்கவில்லையே என்று சோர்வடைகின்றோம். அதே சமயத்தில் “என்னால்
முடியவில்லையே நாளைக்கு என்ன செய்யப் போகின்றேன்…?” என்று எண்ணும் பொழுது கோபப்பட்டு விடுகின்றோம்.
வேதனையும் கோபமும் வரும் பொழுது அதனின் உணர்ச்சியின் அணுக்கள் விளைந்து விட்டால் அணுத்தன்மை ஆன பின் உடலிலே மூட்டுக்கு மூட்டு
குத்தலும் குடைச்சலும் வந்துவிடுகிறது.
கார உணர்வுகளும் வேதனை உணர்வுகளும் அந்த
விஷமான உணர்வுகள் சாடப்படும் பொழுது நம்மை அறியாமலே அது இயக்கத் தொடங்கி விடுகின்றது. நாம் தவறு செய்தோமா…? இல்லை.
இத்தகைய நிலை வராது தடுக்க “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை நாம் பருகுதல் வேண்டும்.
அதை அதிகாலையில் நாம் பெறுவதற்குத் தான்
வட மேற்கில் விநாயகரை வைத்து வட கிழக்காக நம்மைப் பார்க்கும்படி செய்து அருள் உணர்வுகளை அதிகாலையிலேயே
நம்மைப் பருகும்படி செய்தார்கள்.
1.துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும்
3.உடல் உறுப்புகளை
உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரழிவு பெற வேண்டும்
என்று
4.கண்ணின் நினைவை
உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இப்படித் தீமையிலிருந்து நாம் விடுபட்டு அருள் வழி வாழும் நிலையை நெறிப்படுத்திச் சென்றார்கள் ஞானிகள்.