ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2025

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்

துருவ நட்சத்திர அணுக்களின் பெருக்கம்


நமது வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களையும் துயர்களையும் வேதனைகளையும் கோங்களையும் குரோதங்களையும் கேட்டறிகின்றோம் சந்தர்ப்பத்திலே.
 
அவர்கள் உடலில் விளைவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து விடுகின்றது. அவர்களை உற்றுப் பார்த்தால்
1.நம் கண்ணின் கருவிழி ருக்மணி நம் உடலிலே பதிவாகி விடுகின்றது எலும்புக்குள்.
2.கண்ணோடு சேர்ந்த காந்தப் புலனறிவு அந்த உணர்வலைகளை நுகர்ந்து அறியச் செய்கின்றது உயிருடன் ஒன்றி.
3.நுகர்ந்தறியப்படும் பொழுது அவை அனைத்தும் ரத்தத்திலே கருக்களாக முட்டைகளாக ருப் பெறத் தொடங்குகிறது.
 
உயிரினங்கள் பலவும் முட்டைகளை இடுகின்றது. முட்டையை அடைகாத்துக் குஞ்சுகளாகப் பொரிக்கச் செய்கின்றது. கருமுட்டை என்றால் கருவில் இருந்து தான் குஞ்சின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வருகின்றது.
 
மாடு ஆடு இவைகள் அனைத்தும் அது நுகர்ந்த உணர்வுகள் அணுக்கருக்களாக உருவாகி அதன் துணை கொண்டு கருப்பையில் உருவாகி குட்டிகளாக ன்று அதன் இனத்தை அது வளர்க்கின்றது.
 
இதைப் போன்று தான் நாமும் அதன் வழியில் வளர்ந்தவர்கள் கருமுட்டையின் தன்மை கொண்டு தன் இனத்தை வளர்க்கும் சக்தி பெற்றது.
 
ஆனாலும் நம் உடலுக்குள் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அனைத்தும் உதாரணமாக ஆத்மா நோயுற்றவரைப் பார்த்தோம் என்றால் அவரைப்ரிவுடன் அணுகுகின்றோம்… நோயினைக் கட்டறிந்து அதை நுகர்ந்தே அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம்.
 
அப்போது அந்த உணர்வுகள் அணுக்கரு முட்டையாக நம் உடலில் ரத்தங்களில் கருவுறத் தொடங்கி விடுகின்றது… முட்டையாகி விடுகிறது. நாம் கண் கொண்டு பார்த்த கரு விழி எலும்புக்குள் பதிவாக்கி விடுகின்றது.
 
அதன் தொடர் வரிசையில் கவரும் தன்மை நமக்கு அந்த வலு (நோயின் பாதிப்பு) ஏற்படுகின்றது…”
 
இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் நம் நினைவாற்றலை அங்கே செலுத்தி
2.அதனைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வினை ந்தி அதன் உணர்வின் தன்மை நுகரச் செய்தால்
3.”த்தகைய கருக்களை” - துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை
4.ஒளியின் சக்தியாக வளர்க்கும் கருமுட்டைகளை உங்களுக்குள் உருவாக்க முடியும்.
 
அதற்குத் தான் உங்களுக்குத் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம். அதனை அடிக்கடி வளர்த்துப் பழகுதல் வேண்டும்.
 
அப்பொழுதுதான் ஒளியான உணர்வுகளாக நமக்குள் பெருகும் ஒளியின் அணுக்களும் விளையும் உயிரோடு ஒன்று உணர்வுகளும் ஒளியாக மாறும் நாம் ஒளியின் சரீரமும் பெற முடியும்
1.இரத்தங்களிலே அடிக்கடி துருவ நட்சத்திர உணர்வைப் பெருக்கிக் கருக்களாக்கி முட்டையாக்கி ஒளியான அணுக்களாகப் பெருக்கச் செய்யத்தான்
2.ஆத்ம சுத்தியைச் செய்யச் சொல்லி வாழ்க்கையை தியானமாக்கும்படி அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம்.