மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்
மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப்
பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும்
இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று...
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும்
செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல்
நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”
ஆனாலும்…
1.சுவாச கதியில் “கனம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற
“எண்ணத்தில் மோதுகிறது…”
ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை…
இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்)
உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும்
உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல்
கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”
1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் - மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல்
வேண்டும்.
அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத்
தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க
முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணரவும்
முடியும்.
நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.
பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும்
நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி
அலை அமிலங்கள்.
ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும்
பக்குவம் பெற்று...
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட
வேண்டும்.
அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும்
பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ
ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.
நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே…
ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.
பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை…
வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.
அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை…
அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும்
காண முடிவது போல… காண முடியும்.
அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின்
உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள்
எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற
சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக
எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள்
உண்டு.