வலுவாகத் தியானம் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
துன்பத்தை விளைவிக்கும் அணுவாக உடலில் வளர்ந்து விட்டால்
1.உயர்ந்த ஞானிகள் உணர்வை நாம்
நுகர்ந்தாலும் இது அணுக்களாக வளரப்படும்
போது அது (துன்ப அணுக்கள்) அஞ்சும்…
2.அது கிளர்ச்சியை உண்டாக்கும்… அது நடுங்கும்… உணர்ச்சிகளை ஊட்டும்.
3.அப்போது மேல் எல்லாம் வலிக்கிறதே என்போம்.
நான் தியானம் செய்கின்றேன். எனக்கு மேல்
வலிக்கிறதே என்று சொல்வார்கள். சில பேர் நான்
தியானம் இருக்கின்றேன்… எனக்கு நல்ல
எண்ணங்களே வர மாட்டேன் என்கிறது…! என்று சொல்வார்கள்.
நுகரப்படும் பொழுது என்னுடைய எண்ணங்களை எங்கோ அழைத்துச் செல்கின்றது என்றும் சொல்வார்கள்.
அழுக்குப் பட்டு விட்டால் அதை நுகர்ந்தால் அந்த அழுக்கின் மணமே
வரும். அந்த அழுக்கு நமக்குள் நிலைத்திருக்காது அருள்
மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று மீண்டும்
மீண்டும் எண்ணினால் இந்த அணுக்கள் விளைந்து
அசுத்தத்தை உருவாக்கும் அணுக்கள் மடிகின்றது.
1.மடியும் போது
எப்படித்தான் இருந்தாலும் அது துடிக்கத்தான் செய்யும் அதனுடைய உணர்வை ஊட்டத்தான்
செய்யும்
2.வேதனை என்ற உணர்வு ஆக்கப்படும் பொழுது அருள்
மகரிஷிகளின் உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கு வேதனை…
3.அது துடிக்கும் உணர்ச்சிகளை ஊட்டும். நாம் நல்ல நிலைகளைப்
பெற விடாதபடி அது தடுக்கும்.
ஆனாலும்… அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற
வேண்டும் என்று மீண்டும் “ஒரு தடவைக்குப் பல முறை செய்ய வேண்டும்…”
இந்த உணர்வின் நினைவாற்றல் அதை அடக்கிடும் ஆற்றளாக நமக்குள் பெருகுகின்றது…
அதுவே நமக்குள் வலுவாகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
சுழன்று கொண்டிருக்கும் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்ற
சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணைக்கச் செய்யும்.
அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக்
கரைத்தவர்கள்… ஒளியாக வளர்ந்து கொண்டிருப்பவர்கள். அதனை நாம் நுகரப்படும் பொழுது தெளிந்து தெரிந்து
தெளிவாக வாழ்ந்திடும் அணுக்களாக நமக்குள் விளையும். ஆகவே அதைச் சொந்தமாக்க வேண்டும்.
1.இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களைச் சொந்தமாக்கி விட்டால்…
2.நான் நல்லதைச் செய்தேன்
எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்ற இந்த ஏக்கத்தை வளர்த்து விட்டால்
3.மீண்டும் பிறவிக்குத்
தான் வர முடியும்.
இந்தச் சாமியார் தருவார் அந்தத்
தெய்வம் தரும் என்று இப்படி எண்ணங்களை அலைய விட்டால் நாம் நுகர்ந்த அந்த உணர்வே நமக்குள்
தெய்வமாக இயக்குகின்றது.
அந்த எண்ணமே சீதா ராமனாகின்றது சுவையின் எண்ணங்களாக உருவாக்குகின்றது அதன் உணர்வின் சக்தியாக
கடவுளாக நமக்குள் இயக்குகின்றது. அந்தக் குணமே நமக்குள் தெய்வமாக வரும்.
அஞ்சும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அதுவும் சீதா
தான் அந்த உணர்வின் எண்ணங்களை நமக்குள் உணர்த்தப்படும்
பொழுது சீதாராமா தான் இதை உருவாக்குவது நாராயணன் சூரியன். தனக்குள்
கலந்து கொண்ட உணர்வுகள் உயிரிலே நுகர்ந்தால் சீதாராமா.
நாராயணன் திரேதா யுகத்தில் சரீர
யுகத்தில் எண்ணங்கள் கொண்டு இயக்குகின்றான்
நாராயணன். நரநாரயணனோ நாம் நுகர்ந்த உனர்வை அணுவாக மாற்றுகின்றான் என்ற உண்மையைத்
தெளிவாக்குகின்றார்கள்.
ஆகவே இதை உணர்ந்து கொண்டு இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பற்றிடல் வேண்டும்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் வாழும் பொழுதே “தீமைகளை அகற்றிடும் வல்லமையைப் பெற வேண்டும்…”