“தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்
சரீரம் புற்றான பிறகு அப்புற்றினுள் சூட்சும சரீரம் கொண்டு
வாழ்ந்து வரும் கொங்கணர்…
1.ரிஷி சக்தியாகும் சூட்சுமமே ஸ்ரீனிவாச
அவதாரமும்
2.அதன் தொடரில் தான் பெற்ற “தாய்” சக்தியும் “ரிஷி பத்தினி” சக்தியின் கூட்டுக் கலப்பும்.
மண்டலமாய் சக்தி சுழன்றிட அமைப்பு ஏற்பட்டு அதன் வழி மேன்மேலும்
சக்தியை தான் வலுக் கூட்ட ஆத்ம பலமே பல அவதார நிலைகள் கொண்டு அந்தந்த அவதாரங்களின்
சூட்சுமம் வெளி உலகம் அறியாத் தன்மைக்கு மறைந்து போய்… மக்களின் எண்ணம் எல்லாம் செல்வம் பெறும் மார்க்கமாய் உலகோதய ஆசை
வழித்தொடரில் அதுவே பேராசை என்னும் பிடிக்குள் சிக்குண்டு…
செல்வநாயக அவதார சூட்சுமமே பிரகாசிக்க மக்களின் எண்ணம் செல்வம் பெறும் மனத்தின்
வளத்தன்மைக்கு ஒப்ப… 'படியளந்தான்
பெருமாள்' என்ற தொடரில் வந்துற்றது.
“மாடி வீட்டு அரசன்… கோடி
வீட்டுப் புருஷன்” என்றதன் முழுமையே ஸ்ரீனிவாச அவதார மகிமையைக் கொங்கணவர் செயல் கொண்ட சூட்சுமச் செயல்… பரிசுத்த
ஆவி என்ற தொடர்புபடுத்தி ரிஷியின் மூல சக்தி முனிவனின்
தொடரில் பெறப்படும் ஒவ்வொரு நிலை சக்தியின்… கூட்டு
நிகழ்த்தும் நிகழ்வுகளின் ஆக்கம் என்றதன் செயலில் வந்துற்ற செயற்பாட்டுச்
சிறப்பின் தன்மைக்கு ஒப்ப ஆங்கு நிகழ்ந்தது “ஓர் செயல்
நிகழ்வு…”
எந்தவொரு சித்தனும் சித்தின் செயல் ஆக்கம் வைத்திய முறையோ
அல்லது வேறெந்த செயற்பாட்டிற்கும் அம்மன் சக்தி என்ற தொடரில் உபாசிக்கும் “வாலை” என்ற பெயர் நாமமிட்டு சக்தி பெறும் தொடர்பில்
வந்துறும் நற்சக்தி கதி “தாய்” சக்தி
என்னும் பாங்கில் பெறப்படும் தொடர் ஒன்றுண்டு.
இவ்வொன்றுடன் மட்டும் நின்று விடுவதில்லை. தாய் சக்தி பெறும் பல
வழித் தொடர்பில் இதுவும் ஒன்று. “கொங்கணருக்காகச் சக்தியூட்ட” தாய் சக்தி காத்துக் கொண்டிருந்த செயல்
விந்தை கொங்கணருக்கே உரிய தனிச் சிறப்பு.
அதோ மலைமுகட்டுக் குடிசையில் வயோதிக வயதுப் பெண்மணியின் உருவம்
கொண்டு ஓர் அளப்பரிய தாய் சக்தி ஜெபித்துக் கொண்டும் அவ்வழி செல்வோருக்குக்
கருணைக் கரம் காட்டி இயன்ற உதவி செய்வதோடு தன் சக்தியைத் தான் தன்னுள்ளே மறைத்துக்
கொண்டு உலா வந்த “வாலாம்பிகை” என்னும் தாய் சக்தி
அம்மலை முகட்டுக் குடிசைக்குள் “வகுளாம்பிகை” என்ற பெயர் நாமம் பூண்டு வசித்து வருகிறாள்.
மலை மீது அமைந்திருந்த குடிசையில் வாழ்ந்து வரும் வகுளாம்பிகை
எத்தனையோ ஜீவன்களுக்குத் தவம் என்னும் கருணை மழை பொழிந்து எந்த அவதார நலனுக்குத்
தன்னையும் உட்படுத்திக் கொண்ட சக்தியான “வாலை அம்மன்” காத்துக் கிடந்தாள் என்பது குரு சிஷ்ய மனோபாவனையைக் காட்டும் திறம்
உணர்க.
அங்கே வறுமையில் வாடி வந்து சேர்ந்தான் ஒரு சிறுவன். தன்னை யார்
என்று கூறக் கூட பெயர் நாமத்தில் கூட அறியாத அச்சிறுவனை மேற்கொண்டு செல்ல ஒட்டாமல்
தடுத்து தான் வளர்க்கும் மகானாக ஆக்கிக் கொண்டு அந்த அனாதைச் சிறுவன் தனக்கு ஏற்ற 'தாய்' இவளே சேய் உறவாக வளர்ந்தது.
இச்சிறுவனைக் கொண்டே கொங்கண முனிவனை எதிர்கொள்ளக்
காத்திருந்தாள் அத்தாயான வகுளாம்பிகை.
1.அஷ்டலட்சுமி சக்தி என்ற நட்சத்திர சக்தியின்
அவதார நிலையில் இச்சிறுவன் பெறும் சக்தியை முன்னிட்டே
2.வகுளாம்பிகை தாய்…
கொங்கணர் பெறும் சக்தி தொடருக்கு சூசகமாகச் சிறுவனுக்கே ஸ்ரீனிவாசன் என்ற பெயர்
நாமப்படுத்தி
3.ரிஷி பத்தினி சக்தியில் கலந்து நிரந்தரமாக
வசிக்கப் போகின்றான் 'இவன்' என்று
தொடர் காட்டி விட்டார்.
ஸ்ரீனிவாசனும் மாடுகளை மேய்க்க வரும் மாட்டுக்கார சிறுவர்களுடன்
கலந்து விளையாடி மகிழ்ந்து மாடு மேய்ப்பான். பிறகு
பித்தன் போலும் நடந்து கொள்வான். ஆகாயத்தையே வெறித்து நோக்குவான்.
இப்படியெல்லாம் விளையாட்டுப் பருவம் கடந்து வரும் தொடரில்
கொங்கணர் தம் அவதார நிகழ்வுக்கு ஏற்ற பக்குவம் போல் தன்னையும் தயார்படுத்திக்
கொண்டது போல் ஸ்ரீனிவாசன் நடவடிக்கைகள் அமையலுற்றது.
இவர்கள் விளையாட்டெல்லாம் கொங்கணப் புற்றருகேதான் அதிகம்
இருக்கும். அந்த இயற்கை காலம் கனியட்டும் என்று காத்திருந்த கொங்கணர் தொடருக்கு
உறுதியாவதுபோல் அந்த அவதார காலமும் விரைந்து வந்துள்ளது.
சிறுவர்கள் விளையாட்டில் துறுதுறுப்பாய் விளங்கும் ஸ்ரீனிவாசன்
அடிக்கடி சரீரத் தொடரில் ஏதேனும் காயம் ஏற்பட்டுக் கொண்டிருக்க வகுளாம்பிகை
சிறுக்ஷைகள் செய்து அவனைக் கண் போல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
காரணம்… "சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுத
வேண்டும்" என்ற சூட்சுமத் தொடரில் அமையலுற்றதன் பொருளே
1.அச்சிறுவனைக் கொண்டுதான் கொங்கணர் தம் நிலை
உயர்த்த வேண்டும் என்பதன் சூட்சுமத்தில்
2.சரீரம் தரும் அச்சிறுவன் நிலையும் உயிர் சக்தி
முனிவனின் சக்தியுடன் கூடி வளர்ச்சியின் தன்மைச் செயல் வீரியத்தின் வித்தாகி
3.மண்டல சுழற்சிக்கு வேண்டிய வேகத்தின் குணம்
எல்லாம் ஒன்று கூடி நல்வினைப் பயன் தொடருக்கு உறுதுணையாய் விளங்கின என்பது
4.மாமகரிஷி ஆகும் கொங்கணர் செல்வநாயகன் பெற்ற
பேறுதான் செயல் நிலைக்கு கொண்டு சென்று
5.மன எண்ண வீரிய வைராக்கிய சிந்தனை கொண்டு
அடையும் தொடருக்கு நிதானம் என்ற செயலுறும் தன்மையைப் பிரதானமாக்கி
6.முனிவன் தன் மனோபீஷ்டம் நிறைவுற்றதும்
தொடர்ந்து வந்துற்ற அருட்சக்தியாலும்
7.அதைத் தக்க முறையில் பயன்படுத்தும் விதமாக்கி
நேர்கோடாய்க் கொண்டு சென்ற சூட்சுமத் தொடர் மிக முக்கியம்.